10.2.14
“புலிகளின் இன்னொரு முகம்..”
இது உண்மையா.?
ஈழத்
தமிழர் நிலை குறித்து யாருமே வாயைத் திறந்து தங்களது கருத்துக்களைச் சொல்ல மயங்குகையில்
இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது. அதிர்ந்து போனேன். பதிவின் தலைப்பு, ‘புலிகளின் இன்னொரு முகம்!!
என்பதே. ஏற்கனவே வெளிவந்த நூலின் பதிப்புத்தான் அது. அதனை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஈழப் போருக்குப் பின்னர் விடுபட்ட மணியம் என்கிற ஒரு ஈழத் தமிழர் எழுதியிருக்கிறார். புலிகளின் NET WORK குறித்த அவரது அச்சத்தை விளக்குகையில் அது போர் நிகழ்வுகளைக் காட்டிலும் கிலியூட்டுவதாய் இருக்கிறது.
அந்தப்
பதிவிலிருந்து சில வரிகள்:
“2009 மே
18ம் திகதி
முள்ளிவாய்க்காலில் நடந்த
இறுதிப் போருடன்
புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட
கால யுத்தம்
முடிவுக்கு வந்துவிட்டது.
அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாகரீகம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.
ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால்
தமிழ் பிற்போக்கு உருவாக்கி
வைத்திருந்த ஒரு
கட்டமைப்பு மட்டுமே,
புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது
என்பதே உண்மையாகும்.
அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் ‘யாழ்ப்பாணியம்’ என்பதே. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகளை விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனவோ, அவ்வாறான அர்த்தத்தில் ‘யாழ்ப்பாணியம்’ என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது.
அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய ரீதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும்.
எனவே இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன், அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.
மணியம்.
தேனீ வெளியீடு.”
தேனீ வெளியீடு.”
இந்தப்
பதிவில் மணியம் என்னும் ஈழத்தமிழர் தனது அனுபவங்களை அப்படியே பகிர்ந்து கொள்கிறார்.
இந்தப் பகிர்வு ஏன் காலந்தாழ்ந்த பதிவு என்பதற்கும் காரணத்தைச் சொல்கிறார். அவரது அனுபவங்கள்
நெஞ்சைப் பிழிகிறது. ஒரு நாடற்ற சமுதாயம், ஒரு நல்ல தலைவனற்ற சமுதாயம், ஒரு தீர்க்கமான,
உலகம் ஒத்துக்கொள்ளும் படியான, முடிவெடுக்க முடியாத சமுதாயம் யாருக்கோ காத்திருந்து
யாரிடமோ அனைத்தையும் பறிகொடுத்து இப்போது நோக்கமற்ற நிலையில் இருந்து கோண்டிருக்கிறது
என்பது இதில் தெள்ளத் தெளிவு.
இதைப்
படித்தபின்னரே ஒரு நாடும், அதன் அமைதியான சூழலும் அதைவிட அந்த நாட்டின் நலன் கருதியும்,
நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதியும் தெளிந்த மனமுடைய நிதானமான முடிவெடுக்கும் திறன்
கொண்ட தலைவர்களும் ஒரு நாட்டிற்கும் அதன் அமைதிக்கும் மிக மிக மிக முக்கியம் என்பதை
உணர முடிந்தது.
தங்கள்
தலைவனையும் அவரது முடிவுகளையும் (அது எத்துனை கடுமையாகவும் நியாயமற்றதாகவும் இருப்பினும்)
சிரத்தில் தாங்குவோர் இங்கு தொப்புள் கொடி உறவெனச் சொல்லிக் கொண்டு தொப்புள் கொடி உறவின்
தேசியத் தலைவரை குண்டு வைத்துக் கொல்வது மட்டுமல்லாது அதைத் தீவிரவாதம் என ஒத்துக்
கொள்ளாமல் அதை நியாயப் படுத்துவதும் எந்த வகையில் சரி? ஏன், நம் நாட்டில் மட்டும் தலைவர்களுக்கும்
தலைவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுப்போர் இல்லையா இல்லை வெறும் உறவை மட்டுமே
காட்டி இதை மழுங்கடித்து விடலாம் என நினைத்தார்களா?
மேற்சொன்னதை சிந்திக்கையில் இவைகளில் ஏதோ தேசம்
கடந்த உள்நோக்கு இருப்பதாகத் சந்தேகம் வருகிறது.
இது உண்மையா..?!
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.

