Followers

Tuesday, December 7, 2010

தாயுணர்வோடு பாலுணர்வை ஒப்பிடலாமா?

03.12.10

தாயுணர்வோடு பாலுணர்வை ஒப்பிடலாமா?



இந்தக் கேள்வியே முறையற்றதாயும், வரம்பு மீறியதாயும்  தோன்றுகிறதல்லவா?

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஒரு வலைத்தளம், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வன் புணர்ச்சியில் ஈடுபடுத்துவதற்கு நிகராக குற்றம் சாட்டியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன்.

குழந்தைகளை தங்களது பாலுணர்வு வேட்கையை தணித்துக் கொள்ள தாய்மார்கள் முறையற்று பயன்படுத்திக் கொள்வதாக இந்த வலைத்தளம் அலறுகிறது.  பாலுணர்வுப் புணர்தலின் விளைவால் பெற்ற பிள்ளையை , அந்த பாலுணர்வு இன்பத்தைக் கொடுத்த கணவனையும் பிள்ளைக்காக வெறுத்து ஒதுக்கி, பெற்ற பிள்ளைகளை பேணிக்காத்து ஆளாக்கும் தாய்மையை - தாய்மாரை- கொச்சைப்படுத்துகிறது இந்தச் செய்தி.   இத்தனைக்கும் இந்த வலைத்தளத்தை எழுதியது ஒரு பெண்ணாம்.  இதோ அந்த வலைத்தளத்தின் முகவரி http://sites.google.com/site/antibreastfeedingcampaign/




இந்த மாறுபட்ட, திரிந்த பார்வையைக் கண்டு மனம் நடுங்குகிறது. இப்படிப்பட்ட இயற்கைக்கு மாறான செய்திகளை சமுதாயத்தில் பரப்புவதனால் விளையும் பின்விளைவுகளை இவர்கள் அறிவரோ..? இந்தத் தகவலை வலயேற்றியவரும் ஒரு பெண்தான் என்கிறது இந்த வலைத்தளம்.

இது மட்டுமல்ல இந்த வலைத்தளம் மனிதர்களிடையே பாலினப்பெருக்கமே தவறு என்கிறது. மனித இனப் பெருக்கத்திற்காக cloning  முறையை நாடுவோம் என்றும் சொல்கிறது. முறையான பாலுணர்வே தவறானது எனும் கருத்தை முன்வைக்கிறது இந்தத் தளம். 



இங்கு ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உயிரின் பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இருக்கிறது தற்போதைய மனித இனம்.  இந்த பரிணாம வளர்ச்சியோடு வளர்ந்ததுதான் தற்போதைய இனப் பெருக்க முறையும். மனிதர்கள் பாலுணர்வுச் சேர்க்கையின் போது தாங்கள் பெரும் அதீத இன்பத்தினாலேயே லயித்துப் போய் குடும்ப வாழ்வின் பந்தத்தை நாடுகின்றனர். இது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பால் நபருடன் தான் கொண்ட பாலுணர்வுச் சேர்க்கை மிகுந்த இன்பமயமானதாக இருப்பின், குறிப்பாக இந்தச் சேர்க்கை இருவருக்கும் கூடுதலான இன்பம் கொடுப்பின்  இந்த இணைகள் பிரிவது கிடையாது. மாறாக இந்தப் பாலுணர்வு இன்பம், உறவின்  பந்தத்தை இருவரிடமும் அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமல்ல. இந்த இன்பமானது ஒருவரை தனது சுயநலத்தையும் இழக்கச் செய்து எதிர்ப்பாலினரை தன்னுடன் இருத்திக் கொள்ள எந்தத் தியாகத்தையும் செய்யத் தூண்டும்.  இந்த lust  ஒருவிதமான  biological based love ஆக transform  ஆகும். இதுவே ஒரு குடும்பத்தின் இறுகிய இணைப்பிற்கு அடித்தளமாகும்.



வலிமையான ஆண்களை தன்வசம் கவரும்படியான பெண்ணிடம் இருக்கும் முலைகள், அந்தப் பெண் தாய்மை அடைந்து பிள்ளை பெற்ற  பின்னர் பிள்ளையைக் காக்க வேண்டி அமுதம் சுரக்கும் அமுத சுரபியாய் மாறும் விந்தைதான் என்னே?


இது மட்டுமல்ல. பிறந்த குழந்தை, உணவோடு இன்ப உணர்வையும் சேர்த்தே தாயின் பாலூட்டலின்போது எடுத்துக் கொள்கிறது.  இதைப் போலவே தாயும் பிறந்த குழந்தைக்கு  பாலூட்டுகையில் பாலுடன் சேர்ந்து சுரக்கும் இன்பத்தையும் அனுபவிக்கிறாள். இந்த இன்ப உணர்வு குழந்தையை தாய் பராமரிக்க வேண்டி இயற்கை கொடுக்கும் பரிசு. அதே போல பிறந்த குழந்தை தாயை நோக்கி அன்புப் பிணப்பை வளர்த்துக் கொள்ள வேண்டியே இந்த இன்பம். இது ஒருவகை உயிர்ப் பிணைப்பின் ஆரம்பம்.

இயற்கையின் இந்த பரிமாற்றத்தை திருகலான பார்வையில் பார்த்து கொச்சைப்படுத்திய கொடுமையை என்ன சொல்ல?  உளவியலாளர்கள் தாய்ப்பால் சரியாகப் பெறாத பிள்ளைகள் பிற்காலத்தில் மிகக் கடுமையான மனப்பிறழ்வுகளுக்கு ஆளாகிறார்கள் எனச் சொல்லுகின்றனர்.


மேலும் பாலுணர்வுத்தூண்டலும் உயிர்ப்பெருக்கத்திற்காக புணர்தலும் மிகுந்த தவறான செயல் என  இந்த வலைத்தளத்தில்  சொல்லியிருப்பதை என்ன சொல்ல? இத்தகைய அறியாமை நம்மிடையே எழக்கூடாது எனக் கருதித்தான் நமது முன்னோர் கோவில்களிலும்,  கோவில் தேர்களிலும், குளிக்கும் குளம் போன்ற மற்றைய கூடுமிடங்களிலும் பாலுணர்வுச் சித்திரங்கள் மற்றும் சிற்பங்களை வைத்தனரோ? இது அருவருக்கத்தக்க ஒன்றல்ல மாறாக இந்தப் பாலுணர்வே வாழ்வின் சூல் என ஒவ்வொருவரும் உணரத்தான் இத்தகைய வழக்கம் இருந்ததோ அறியோம்.


ஆணின் மார்புக் காம்புகள் கூட பெண்ணின் முலைக்காம்புகள் போல்  பாலுணர்வை உணரும் வகையில் இருந்தாலும்,  பெண்ணின் மார்பகங்கள் திராட்சைக் கொத்துபோல பாலைச் சுரக்கும் சுரப்பிகளால் நிரப்பப் பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் தாயின் மார்புகளை வெறும் பாலுணர்வை அனுபவிக்கும் உறுப்பாக மட்டுமே இந்தத் தளம் சித்தரிப்பது மிகுந்த தவறானதொரு தகவலாகும்.



இது மட்டுமல்ல ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்தால் அழகு குலைந்து போகும் என்னும் கருத்து பரவலாக பெண்களிடையே பரவி தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்துவிழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடக்கையில் இத்தகைய தவறான கருத்துகள் மக்கள் உண்மையை உணர்வதற்கு பெரும் இடையூராக இருக்கும்.  இத்தகைய கருத்துகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே ஒரு  அருவருப்பை உண்டு பண்ணுவதோடு மட்டுமல்லாது அவர்களிடையே தாய்ப்பால் கொடுப்பதைக் குறித்த குற்ற உணர்வையும் உருவாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரை மற்றையோர் பார்க்கும் புனிதமான பார்வையையும் திரித்துப் போட வல்லது இத்தகைய தகவல்கள்.

சமுதாயப் பொறுப்புள்ளோர் தகவல் தருவதிலும் தகவலை பெறுவதிலும் கவனமாய் இருத்தல் அவசியம். இத்தகைய உயிரின் அவசியத்திற்கும், உண்மைக்கும்  புறம்பான தகவல்கள்  நிச்சயம் மற்றையோரை குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எனவே இத்தகைய செயல்களைச் செய்யாது சமுதாய உணர்வுடன் வாழக் கற்போம்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



14 comments:

  1. சமுதாயப் பொறுப்புள்ளோர் தகவல் தருவதிலும் தகவலை பெருவதிலும் கவனமாய் இருத்தல் அவசியம். இத்தகைய உயிரின் அவசியத்திற்கு புறப்பான தகவல்கள் நிச்சயம் மற்றையோரை குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எனவே இத்தகைய செயல்களைச் செய்யாது சமுதாய உணர்வுடன் வாழக் கற்போம்.

    ....rightly said.

    ReplyDelete
  2. தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. //இத்தகைய கருத்துகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே ஒரு அருவருப்பை உண்டு பண்ணுவதோடு மட்டுமல்லாது அவர்களிடையே தாய்ப்பால் கொடுப்பதைக் குறித்த குற்ற உணர்வையும் உருவாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.//

    நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகம் தருவது தாய்ப்பால் தான். அதை பணி சுமையால் கொடுக்க முடியாமல் இருக்கும் இன்றைய பெண்கள் இதை வேறு கேள்விப்பட்டு ரொம்ப அழகு தான். எது டா சாக்கு என்று இருக்கும் இன்றைய சமுதாயம் இதையும் ஒரு காரணமாய் சொல்ல ஆரம்பிக்கும்..தூய்மையான தாய்பாலிற்கே இப்படி ஒரு அவப்பெயரா? முட்டாள்தனமாய் இருக்குது இந்த கருத்து.

    ReplyDelete
  4. @ அமுதா கிருஷ்ணா..

    தூய்மையான தாய்ப்பாலுக்கல்ல அம்மையீர் .. இது தூய்மையான தாய்மைக்கே அவப்பெயர்..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. //ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்தால் அழகு குலைந்து போகும் என்னும் கருத்து பரவலாக பெண்களிடையே பரவி தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்துவிழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடக்கையில் //

    இதைவிட ஒரு அவலம் இருக்க முடியாது. தாய்மையில் உள்ள அழகை இவர்கள் புரிந்துகொள்வதில்லை.

    ReplyDelete
  6. //தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரை மற்றையோர் பார்க்கும் புனிதமான பார்வையையும் திரித்துப் போட வல்லது இத்தகைய தகவல்கள்//
    உண்மை!
    ம்ம்.. எங்கேயும் பெண் புரட்சிவாதிகள்??, புரட்சி படைக்கும் பெண் கவிஞர்கள்?? இருக்கிறார்கள் என்று தெரிகிறது!

    ReplyDelete
  7. @ இந்திரா...

    @ ஜீ...

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. நிச்சயம் அறியவேண்டிய ஓன்று ...
    அருமையான தொகுப்பு

    ReplyDelete
  9. @ கல்பனா..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. அருமை நண்பரே,

    தெளிவாகவும் மிகச் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள்
    //தூய்மையான தாய்பாலிற்கே இப்படி ஒரு அவப்பெயரா? முட்டாள்தனமாய் இருக்குது இந்த கருத்து. //
    இதுதான் எனது கருத்தும் “பெண்ணை ஒரு தெய்வமாய் பேசுகின்ற காரணம் அவள் தாங்கும் தாய்மைதான்”

    தொடருங்கள்.......

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. @ மாணவன்..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. சிலர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காய் முட்டாள்தனமாய் எதாவது கூறி திரிவர் விடுங்க உலகம் அப்படித்தான்.....

    தாய்மையை போற்றுவோம்.

    ReplyDelete
  13. @ SAKTHI..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...