Followers

Monday, February 10, 2014

“புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா.?


10.2.14

“புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா.?ஈழத் தமிழர் நிலை குறித்து யாருமே வாயைத் திறந்து தங்களது கருத்துக்களைச் சொல்ல மயங்குகையில் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது. அதிர்ந்து போனேன். பதிவின் தலைப்பு, ‘புலிகளின் இன்னொரு முகம்!!  என்பதே. ஏற்கனவே வெளிவந்த நூலின் பதிப்புத்தான் அது. அதனை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஈழப் போருக்குப் பின்னர் விடுபட்ட மணியம் என்கிற ஒரு ஈழத் தமிழர் எழுதியிருக்கிறார். புலிகளின் NET WORK  குறித்த அவரது அச்சத்தை  விளக்குகையில் அது  போர் நிகழ்வுகளைக்  காட்டிலும்  கிலியூட்டுவதாய் இருக்கிறது. 

இதோ அந்தப் பதிவின் சுட்டி: http://www.jothidasudaroli.blogspot.in/2014/01/blog-post_7177.html


அந்தப் பதிவிலிருந்து சில வரிகள்:

2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது

அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாகரீகம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்

 

அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம்யாழ்ப்பாணியம்என்பதே. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகளை விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனவோ, அவ்வாறான அர்த்தத்தில்யாழ்ப்பாணியம்என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது

அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு  விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய ரீதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும்.


எனவே இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன்,  அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.

மணியம்.
தேனீ வெளியீடு.”

இந்தப் பதிவில் மணியம் என்னும் ஈழத்தமிழர் தனது அனுபவங்களை அப்படியே பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பகிர்வு ஏன் காலந்தாழ்ந்த பதிவு என்பதற்கும் காரணத்தைச் சொல்கிறார். அவரது அனுபவங்கள் நெஞ்சைப் பிழிகிறது. ஒரு நாடற்ற சமுதாயம், ஒரு நல்ல தலைவனற்ற சமுதாயம், ஒரு தீர்க்கமான, உலகம் ஒத்துக்கொள்ளும் படியான, முடிவெடுக்க முடியாத சமுதாயம் யாருக்கோ காத்திருந்து யாரிடமோ அனைத்தையும் பறிகொடுத்து இப்போது நோக்கமற்ற நிலையில் இருந்து கோண்டிருக்கிறது என்பது இதில் தெள்ளத் தெளிவு.

இதைப் படித்தபின்னரே ஒரு நாடும், அதன் அமைதியான சூழலும் அதைவிட அந்த நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதியும் தெளிந்த மனமுடைய நிதானமான முடிவெடுக்கும் திறன் கொண்ட தலைவர்களும் ஒரு நாட்டிற்கும் அதன் அமைதிக்கும் மிக மிக மிக முக்கியம் என்பதை உணர முடிந்தது.
 


தங்கள் தலைவனையும் அவரது முடிவுகளையும் (அது எத்துனை கடுமையாகவும் நியாயமற்றதாகவும் இருப்பினும்) சிரத்தில் தாங்குவோர் இங்கு தொப்புள் கொடி உறவெனச் சொல்லிக் கொண்டு தொப்புள் கொடி உறவின் தேசியத் தலைவரை குண்டு வைத்துக் கொல்வது மட்டுமல்லாது அதைத் தீவிரவாதம் என ஒத்துக் கொள்ளாமல் அதை நியாயப் படுத்துவதும் எந்த வகையில் சரி? ஏன், நம் நாட்டில் மட்டும் தலைவர்களுக்கும் தலைவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுப்போர் இல்லையா இல்லை வெறும் உறவை மட்டுமே காட்டி இதை மழுங்கடித்து விடலாம் என நினைத்தார்களா?

     மேற்சொன்னதை சிந்திக்கையில் இவைகளில் ஏதோ தேசம் கடந்த உள்நோக்கு இருப்பதாகத் சந்தேகம் வருகிறது.

     இது உண்மையா..?!

 

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.

 

26 comments:

 1. //மணியம்.
  தேனீ வெளியீடு.”/7

  இந்த "தேனீ" கருணா ஆதரவு கும்பல். இவர்கள் சொல்வதை நம்புவது கடினம்.

  ReplyDelete
  Replies
  1. குட்டிபிசாசு,
   /மணியம்.
   தேனீ வெளியீடு.”/7
   தேனீ இயக்கம் கருணா ஆதரவா என்பது எனக்கு தெரியாது. ஆனா இங்கே உள்ள ஜனநாயக உரிமைகள் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி,திமுக, அதிமுகவுக்குள்ள ஜனநாயக உரிமைகள் அங்கே வன்முறை புலிகளை எதிர்த காரணத்தால் தேனீ இயக்கத்திற்கோ ,கருணாவிற்கோ கிடையாதா? கருணா யார்?
   தமிழகத்தில் பெரிய தலைவர் என்று பிரசாரபடுத்தபட்ட ஒருவருக்கு அடுத்த தலைவர். தலைவரை எதிர்ததினால் அடுத்த நிமிடம் இவர் கெட்டவராகிவிட்டாராம்!என்ன ஒரு கோமாளிதனம்!!!

   Delete
  2. தேனீ என்பது இயக்கம் அல்ல. அது ஒரு செய்தித்தளம். கருணா அடுத்தகட்ட தலைவர் ஒன்னும் இல்லை. அவன் சரியான பிராடு. இலங்கை அரசாங்கத்தின் ஆசை வார்த்தையில் ஓடியவன்.

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. @ விவரணன் நீலவண்ணன்..

  நிறையச் செய்திகள் தமிழ் நாட்டு மக்களிடையே மறைக்கப் பட்டுள்ளது அல்லது திரிக்கப்பட்டுள்ளது இதிலிருந்து தெளிவாகிறது. போரில் பாதிக்கப்பட்டு கை, கால்களை இழ்ந்தோர் இன்னமும் விடுதலைப் புலிகளின் ராஜிவ் காந்தி கொலையை சரியானது என்று ஏற்றுக் கொள்வாரில்லை. சிலர் இதனால்தான் போரின் திசையும் விளைவும் மாறியது எனும் எண்ணமும் கொண்டுள்ளனர். தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //நிறையச் செய்திகள் தமிழ் நாட்டு மக்களிடையே மறைக்கப் பட்டுள்ளது அல்லது திரிக்கப்பட்டுள்ளது இதிலிருந்து தெளிவாகிறது.//
   உண்மை.

   Delete
 4. இன்னும் நிறையவே உள்ளன. இலங்கைத் தமிழ் மக்களில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள். இலங்கைத் தமிழர்களில் பிரிவுகள் உள்ளன. வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், மேற்குத் தமிழர். மேற்குத் தமிழர் இன்று சிங்களவராகவே மாறிவிட்டனர். வடக்குத் தமிழர்களில் இரு பெரும் பிரிவு உண்டு குடா நாட்டு தமிழர், வன்னித் தமிழர்.

  குடா நாட்டு தமிழர்களில் பிரிவு உண்டு வேளாளர், கரையார் மற்றும் தலித்கள். அது போக சைவ வேளாளர், கத்தோலிக்க வேளாளர் என இருவகை உண்டு. சைவ வேளாளர்களில் கூட தீவார் பிரிவு தனி பிரிவு, வடமராட்சி வேளாளர் ஒரு வகை, தென்மராட்சி வேளாளர் ஒரு வகை.

  யாழில் இருந்து குடியேறி கொழும்பில் உள்ளோர் ஒரு வகை, வெளிநாடுகளில் உள்ளோர் ஒரு வகை.

  அது போக முஸ்லிம்களில் கிழக்கு முஸ்லிம் ஒரு வகை, வடக்கு முஸ்லிம் ஒரு வகை, சிங்கள நாட்டு முஸ்லிம் ஒரு வகை. எல்லோரும் தமிழ் தான் தாய்மொழி.

  இந்த எல்லா பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்துவோர் டச்சு ஆங்கிலேயே ஆட்சி காலம் முதல் யாழ்பாண வேளாளர்கள், அதில் சைவ வேளாளர்கள், கத்தோலிக்க வேளாளர்களே அரசியல் தலைவர்களாகவும், கல்விமான்களாகவும் இருந்துள்ளனர். அதன் அடுத்த அடுக்கில் யாழ்ப்பாண கரையார்கள், விடுதலை புலிகளில் ஆதிக்கம் செலுத்தியோடு இவர்களே. ஆக மொத்தம் யாழ்ப்பாணத்தவர்களே அதிக ஆளுமை செலுத்தும் தமிழ் பிரிவு எனலாம்.

  அது போக வன்னியில் வாழ்ந்த அகமுடையார், கள்ளர், மறவர், உட்பட்ட பல சாதிகளை பிற்காலங்களில் வேளாளர் என்று கூறிக் கொண்டாலும் பொருளாதார, கல்விகளில் பின் தங்கியோர், இறுதி கால யுத்தங்களில் இறந்தோரும் இவர்களே, இயக்கங்களில் அதிகளவு போராளிகளாக உயிர் கொடுத்தோர்களில் பெருந்தொகையும் இவர்களே. அது போக மட்டு அம்பாறை பகுதிகளில் முக்குவர் திமிலர் போன்ற சாதிகளே அதிகம்.

  மலையகத் தமிழர்களில் சக்கிலியர்கள் உட்பட தலித்களே அதிகம், அதனால் அவர்கள் மொத்தமாய் ஓரங்கட்டப்பட்டு விட்டனர்.

  இது போக முஸ்லிம்களில் கொழும்பு முஸ்லிம்களே ஆதிக்க சக்திகள், அது போக கேரள வம்சாவளி முஸ்லிம்களே இன்று அரசியலில் ஆதிக்கம் செய்கின்றனர்.

  இலங்கையில் மலையக தலித் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது ஏனைய பிரிவு ஆதிக்க சாதி தமிழர்கள் வாய் பொத்தியே இருந்தனர். கிழக்கில் சிங்கள குடியேற்றம் செய்யப்படும் போதும் வாய் பொத்தியே இருந்தனர், முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போதும் வாய் பொத்தியே இருந்தனர்.

  வடக்கில் சிங்களவன் ஊடுறுவத் தொடங்கியதுமே விழித்துக் கொண்டு தனிநாடு கோரினார்கள். அதிலும் ஏகப் பட்ட இயக்கங்கள் உட்பிரிவுகள் சண்டைகள் என எல்லாம் கடந்த பின்,

  ஒரு மில்லியன் வடக்கு தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறி யுத்தத்துக்கு உதவினார்கள். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் இறுதிக் காலங்களில் போதிய பொருளுதவிகளை ஊழல் செய்து மடக்கியதால், ஆயுத தட்டுபாடு ஏற்பட்டது, வடக்கில் உள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்க, போராளிக் குழுக்களுக்கு ஆள்சேர்க்கை வன்னியில் இருந்தே எடுக்கப்பட்டது அதுவும் குறைந்துவிட கிழக்கு தமிழர்களை அழைக்க கருணா போன்றோர் அதற்கு மறுக்க யுத்தத்தில் சிங்களவர்கள் வென்றார்கள். இன்று புலிகளோடு இருந்த பல பண முதலைகள் ராஜபட்சேவோடு கூட்டுச் சேர்ந்து விட்டன.

  வெளிநாடுகளில் பண முதலைகள் தொழில் போன்றவற்றில் முதலிட்டு ஓகோ என வாழ்கின்றார்கள். வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தவர் இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு பகுதியில் உள்ள சொந்தங்களுக்கு உதவிக் கொண்டிருப்பதால் அவர்களும் வாழ முடிகின்றது.

  ஆனால் வன்னி, மட்டகளப்பு, மலையகம் போன்றவற்றில் உள்ள தமிழர்கள் பரதேசிகளாக்கப்பட்டு கஞ்சிக்கே வழியற்று கிடக்கின்றனர். என்பது தான் எதார்த்தம்.

  மொத்தத்தில் சிங்களவருக்கு ஜெயம் ஏழைத் தமிழர்களுக்கோ ஒன்றும் மிச்சமில்லை. :(

  ReplyDelete
  Replies
  1. விவரனன்,

   என்ன இது இப்படி படக்குனு உண்மையா சொல்லிட்டிங்க.

   Delete
  2. இலங்கை முஸ்லிம்கள தங்களை தமிழர் என அடயாளப்படுத்த விரும்புவது இல்லை. அவர்கள தாங்கள முஸ்லிம் என்ற தனியான இனத்தவர் என சொல்லிக் கொளவர்.

   Delete
  3. விவரணன் நீலவண்ணன் நீண்ட விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்று கொள்ள போவது இல்லை.கருத்துகளுக்கு துப்பாக்கி முனையில் பதில் அளித்தே பழக்கபட்டவர்கள் விடுதலை புலிகள்.

   Delete
 5. யாழ்ப்பாணத்தவர் என்ற சொல் பொதுமையானது. யாழ்ப்பாணத்தில் சகல ஜாதி மக்களும் உள்ளனர். ஆனால் இந்தியா போன்று தீண்டாமை இல்லை. ஆனால் வெள்ளாள மேட்டிமை தன்மை உண்டு. வெள்ளாளர் சகல மாவட்டங்களிலும் உள்ளனர் . யாழ் மாவட்டத்தில் அதிகம் . (நீலவண்ணன் இதை அறிந்து கொள்க )

  யாழ்மாவட்டத்தில் உள்ள வெள்ளாளர்களில் பலர் வேறு ஜாதிகளில் இருந்து காலத்து காலம் தங்களை வெள்ளாளர்கள் ஆக்கி கொண்டவர்களும் உண்டு. (விவசாயத்தை தொழிலாக கொண்டால் இரண்டு தலைமுறை பின் அவர்கள் வெள்ளாளராக கருதப்படுவார்கள் )

  பிரபாகரன் வேளாளர் அல்ல. கரையார் என்று அழைக்கப்படும் கரையோர பகுதி மக்கள். அவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களே.

  "இந்திய தமிழக அரசியல் மற்றும் சினிமாத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையர்களில் யாழ்ப்பாண வேளாள சமூகத்தவரே "

  நல்ல நகைச்சுவை நீலவண்ணன் அவர்களே. சும்மா சகட்டு மேனிக்கு அடிச்சு தள்ளியிருக்கீங்க. ஹஹஹஹஹஹஹ்
  ஹஹஹஹஹ. ஸ்டாலின் பாணியா .... ஹஹஹஹ

  இந்திய சினிமாவில் கோலோச்சும் யாழ்ப்பாண தமிழரை கூற முடியுமா ? ஹஹஹஹஹ்
  தமிழ் சினிமாவில் உள்ள ஒரே இலங்கை தமிழ் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். ஒரு தயாரிப்பாளர் இருக்கின்றார். அவ்வளவுதான் . நீலவண்ணன் வாயை திறந்தாலே பொய் சரளமாக பாய்ந்து வருகின்றது. ஹஹஹ

  " தாழ்த்தப்பட்ட மக்கள் ஜேவிபி ஊடாக புரட்சி செய்த போது லட்சக் கணக்கில் அவர்களை கொன்றொழித்தது. "

  இலச்சகணக்கா ? ஹஹஹஹ . அடுத்த பொய். உண்மையில் ஜேவிபி புரட்சியின் போது சுமார் 40000 புரட்சியாளர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர் (1987) 1971 இல் நடந்த புரட்சியில் 15000 பேர் கொல்லப்பட்டனர்.
  நீலவண்ணன் ப்ளீஸ் சும்மா ஸ்டாலின் பாணியில் அடிச்சு விடாதீங்க.....

  ஜேவிபி புரட்சியை அடக்கியவர் கொடூரமான முறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரேமதாச . இவர் சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் மிகுந்த ஆளுமை மிக்க தலைவராக கருத்தபட்டவர். இவர் கைது செய்த JVP தலைவர் ரோகன விஜெயவீரவை போட்டு தள்ளினார். 1971 இல் முதல் புரட்சியில் கைது செய்யபப்ட்ட ரோகன வை விடுதலை செய்தது கொவிகம ஜாதி தலைவர் தான்

  பிரபாகரனும் ரொஹனவும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் வேறு மதம்....


  ReplyDelete
 6. " முள்ளிவாய்க்காலில் தோற்போம் எனத் தெரிந்தும், அவர்களை சாக கொடுத்தவர்கள் யார் என்பதை உணர்ந்தாலே."

  முள்ளி வாய்க்காலில் தோற்போம் என்று தெரிந்திருந்தாலும் அதற்க்கு முன் தங்களுக்கு உதவிகள் வரும் என்று கடைசி வரை பிரபாகரன் நம்பி இருந்தார். இரண்டாவது பிரபாகனும் கடைசி வரை இருந்து இறந்தார். தப்பி ஓடவில்லை. மனைவியும் மகளும் நஞ்சருந்து இறந்தனர் (ஓட வாய்ப்பிருந்தது ) சாபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றபடியால் சாக கொடுப்போம் என்று பிரபாகரன் இருந்தார் நீலவண்ணன் கூறுவது விசத்தை கக்கும் ஒரு முட்டாள் என்பது புரிகின்றது.
  முள்ளி வாய்க்காலில் சகல ஜாதி மக்களும் இறந்தனர். யாழ்ப்பாண மக்கள் உள்ளடங்கலாக.
  வன்னியில் பெருமளவில் யாழப்பான மக்கள் உள்ளனர். பலர் பெரும்பான்மையாக 1950, 1960 கலீல் வன்னி பகுதியில் நடந்த குடியேற்றங்களின் போது குடியேறிய மக்கள் ஆவர். இவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர்கள்.
  ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கப்பட்ட போது வந்து குடியேறியவர்கள். அதை விட பெருமளவு யாழ்ப்பாணத்தவர் முள்ளியவளை (அரச உத்தியோகத்தர் ), முல்லை தீவு (மீனவர் ), கிளிநொச்சி (நெல் விவசாயிகள் ) என பெருமளவில் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர். வன்னி மண்ணின் பூர்வீக குடிகள் பனங்காமம், மல்லாவி , அக்கராயன் போன்ற இடங்களில் வசித்து வருகின்றார்கள். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வின் போதும் பெருமளவான யாழ்ப்பாணத்தவர் இங்கே வந்து குடியேறினர்.

  முள்ளிவாய்க்கால் கடைசி போரில் பெரும்பான்மையாக கொல்லப்பட்டதும் யாழ்ப்பாண சொந்த இடமாக கொண்ட மக்கள் தான் . இதில் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற வேறு பாடு கிடையாது. குண்டுக்கு தெரியாது எவன் தாழ்ந்த சாதி , எவன் உயர்ந்த சாதி என்று.

  "அது போராளி இயக்கங்கள் ஊடாக வெளிப்பட்டதும் உண்மையே. "

  இந்த வசனத்தில் உட்பொருள் விளங்கவில்லை. இயக்கங்களில் சாதி இல்லை. சாதி பற்றி பேச முடியாது. புலிகளை தீவிர மாக விமர்சித்து வரும் ஷோபாசக்தி கூட புலிகள் இயக்கத்தில் சாதி அரசியல் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது சகோ வியாசன் உங்களுக்கோ மேட்டுகுடிகள், யாழ்பாணத்தவர்கள் புலிகளை பற்றி சொன்னா பிடிக்குதேயில்லை.ஏதோ யாழ்பாணத்தவர்கள் புலிகள் என்ற ஆண்டவருக்கு அடுத்த இனம் என்ற அளவுக்கு இங்கே பொய் பிரசாரம். அதையே எல்லோரும் நம்பிகொண்டிருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது :)

   Delete
 7. விவரமே தெரியாதவர் விவரணன் எனவும்
  இருளில் கருப்பையே பார்த்து பிசாசு என்பவர் நீலவண்ணன் எனவும் பெயர் வைத்திருப்பது வேடிக்கைதான் !

  ReplyDelete
 8. இந்தப்போராட்டத்தில் இது வரை இறந்த நாப்பதினாயிரம் மாவீரர்களில் இலங்கையின் சகல பிரதேசங்களை சேர்ந்தவர்களும் ( அதிகமாக வட கிழக்கை ) அடக்கம் .

  எல்லா சாதியினர்களும் அடங்குவார்கள் .
  உண்மையில் இந்த மாவீரர்களை சாதி , பிரதேசமாக மிகுந்த மன வருத்ததுடன்தான் சொல்ல வேண்டியிருக்கிறது

  காரணம் அவர்கள் தமது இன்னுயிரை ஈழ தேசத்துக்காகவே ஈந்தார்கள் . பிரதேசம் , சாதி என்பவற்றை கனவிலும் சிந்தித்து பார்க்கவில்லை.
  ஆனாலும் இப்போது அதை சொல்ல வேண்டிய கட்டாயம் யாரல் ஏற்பட்டிருக்கிறது ?

  இணைய தளங்களில் இலங்கையைப்பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் , அதன் பிரதேச , சாதி , உணவு பழக்க வழக்கத்தை பற்றி எதயுமே சரியாகத்தெரிந்து கொள்ளாது அல்லது அரை குறையாகத்தெரிந்து கொண்டு , புலிகள் மீதோ அல்லது போராட்டத்தின் மீதோ காழ்ப்புணர்வுகளையும் வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக அடித்து விட்டுக்கொண்டிருப்பார்கள் .
  இவர்கள் இலங்கையைப்பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் எடுத்து விடும் கருத்துக்களை இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழன் ஒருவன் வாசிக்க நேர்ந்தால் சிரித்து விட்டுத்தான் போவான் .

  ஆனால் எப்போதும் அப்படி இருந்து விட்டு போக முடியாது. இவர்கள் இந்த விடயங்களை உள்நோக்கோடு தமது இஷ்டப்படி திரித்தும் , இல்லாத , பொல்லாததுகளை அள்ளி வைத்தும் விஷத்தை கக்குகிறார்கள் .

  தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ஈழ போராட்டம் பற்றியும் அதன் போராளி தலைவர்களின் சாதி பற்றியும் , அங்குள்ள மக்களின் சமூக , பிரதேச அமைப்பு பற்றியும் இவர்கள் பேசுவது குருடன் யானையை தடவிப்பார்த்து அது எப்படி இருந்தது என்று விபரிப்பதற்கு ஒப்பானது.
  இவர்களின் வெட்டி க்கதைக்கு ஈழத்தில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் இந்த இணையத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள் .ஆனாலும்

  தமிழ் நாட்டில் உள்ளவர்களின் சாதிய கண்ணொட்டத்துக்கும் , ஈழத்தில் உள்ள மக்களின் சாதியா கண்ணோட்டத்துக்குமுள்ள வித்தியாசத்தை நான் இங்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது

  ஈழத்தைப்பொறுத்தவரை அங்குள்ள மக்கள் திருமண உறவுகள் ஏற்படுத்தப்படும்போதெ சாதியை பார்த்துக்கொள்வார்கள் . தீண்டாமை கூட தமிழ் நாட்டோடு ஒப்பிடுமிடத்து மிக குறைவாகவே இருந்து வந்திருக்கிறது.
  புலிகளின் ஆட்சியின்போது அது முற்றாகவே ஒழிக்கப்பட்டிருந்தது.
  ஆனால் தம்ழ்நாட்டில் அப்படியல்ல விடிந்தால் எழும்பினால் அவர்கள் மண்டையில் மனதில் எப்போதும் சாதி பற்றிய சிந்தனைதான் . புதிதாக யாரைப்பார்த்தாலும் அவர் எனது சாதிக்காரரா ? அல்லது வேற்று சாதிக்காரரா ? அப்படியென்றால் அவர் என்ன சாதிக்காரர் என்ற வகையிலேயே அவர்கள் சிந்தனை ஒடிக்கொண்டிருக்கும்.
  அவர்களைப்பற்றி , அவர்கள் பெற்றோரைப்பற்றி எதாவது சொன்னால் கூட பேசாமல் இருந்து விடுவார்கள் ஆனால் அவர்கள் சாதியைப்பற்றி சொன்னால் கொதித்தெழுந்து விடுவார்கள் .
  தேர்தல் வந்து விட்டல் தலவர்களுக்குள்ள முக்கிய பிரச்சனையே எந்த தொகுதியில் எந்த சாதியை சேந்தவனை நிற்க வைப்பது என்பதுதான் .
  எந்த தலவர்களுக்குமில்லாத மக்கள் அபிமானம் பெற்றவர் ஒரு தடவை தொகுதிக்குள் சுற்றி வந்து இரைட்டை விரலை காண்பித்தால் போதும் மக்கள் வாக்குகளை வாரி வழங்கி விடுவார்கள் என சொல்லப்பட்ட ஆனானப்பட்ட தலவர் எம் ஜி ஆரே சாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தினார்.
  அது பொது தேர்தலாக இருந்தாலும் சரி , இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி.
  ஒருவன் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு ஒருவரை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டியிருந்தால் அவரை தனது சாதியினனாக இருக்குமாறு பார்த்துக்கொள்வான் .
  ஈழத்தில் இந்தளவிற்குநிலைமை இல்லை , இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர் பலருக்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் இந்தளவு சாதி சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதே தெரியாது .

  ReplyDelete
 9. இந்தப்போராட்டத்தில் இது வரை இறந்த நாப்பதினாயிரம் மாவீரர்களில் இலங்கையின் சகல பிரதேசங்களை சேர்ந்தவர்களும் ( அதிகமாக வட கிழக்கை ) அடக்கம் .

  எல்லா சாதியினர்களும் அடங்குவார்கள் .
  உண்மையில் இந்த மாவீரர்களை சாதி , பிரதேசமாக மிகுந்த மன வருத்ததுடன்தான் சொல்ல வேண்டியிருக்கிறது

  காரணம் அவர்கள் தமது இன்னுயிரை ஈழ தேசத்துக்காகவே ஈந்தார்கள் . பிரதேசம் , சாதி என்பவற்றை கனவிலும் சிந்தித்து பார்க்கவில்லை.
  ஆனாலும் இப்போது அதை சொல்ல வேண்டிய கட்டாயம் யாரல் ஏற்பட்டிருக்கிறது ?

  இணைய தளங்களில் இலங்கையைப்பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் , அதன் பிரதேச , சாதி , உணவு பழக்க வழக்கத்தை பற்றி எதயுமே சரியாகத்தெரிந்து கொள்ளாது அல்லது அரை குறையாகத்தெரிந்து கொண்டு , புலிகள் மீதோ அல்லது போராட்டத்தின் மீதோ காழ்ப்புணர்வுகளையும் வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக அடித்து விட்டுக்கொண்டிருப்பார்கள் .
  இவர்கள் இலங்கையைப்பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் எடுத்து விடும் கருத்துக்களை இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழன் ஒருவன் வாசிக்க நேர்ந்தால் சிரித்து விட்டுத்தான் போவான் .

  ஆனால் எப்போதும் அப்படி இருந்து விட்டு போக முடியாது. இவர்கள் இந்த விடயங்களை உள்நோக்கோடு தமது இஷ்டப்படி திரித்தும் , இல்லாத , பொல்லாததுகளை அள்ளி வைத்தும் விஷத்தை கக்குகிறார்கள் .

  தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ஈழ போராட்டம் பற்றியும் அதன் போராளி தலைவர்களின் சாதி பற்றியும் , அங்குள்ள மக்களின் சமூக , பிரதேச அமைப்பு பற்றியும் இவர்கள் பேசுவது குருடன் யானையை தடவிப்பார்த்து அது எப்படி இருந்தது என்று விபரிப்பதற்கு ஒப்பானது.
  இவர்களின் வெட்டி க்கதைக்கு ஈழத்தில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் இந்த இணையத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள் .ஆனாலும்

  தமிழ் நாட்டில் உள்ளவர்களின் சாதிய கண்ணொட்டத்துக்கும் , ஈழத்தில் உள்ள மக்களின் சாதியா கண்ணோட்டத்துக்குமுள்ள வித்தியாசத்தை நான் இங்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது

  ஈழத்தைப்பொறுத்தவரை அங்குள்ள மக்கள் திருமண உறவுகள் ஏற்படுத்தப்படும்போதெ சாதியை பார்த்துக்கொள்வார்கள் . தீண்டாமை கூட தமிழ் நாட்டோடு ஒப்பிடுமிடத்து மிக குறைவாகவே இருந்து வந்திருக்கிறது.
  புலிகளின் ஆட்சியின்போது அது முற்றாகவே ஒழிக்கப்பட்டிருந்தது.

  ReplyDelete
 10. எந்த தலவர்களுக்குமில்லாத மக்கள் அபிமானம் பெற்றவர் ஒரு தடவை தொகுதிக்குள் சுற்றி வந்து இரைட்டை விரலை காண்பித்தால் போதும் மக்கள் வாக்குகளை வாரி வழங்கி விடுவார்கள் என சொல்லப்பட்ட ஆனானப்பட்ட தலவர் எம் ஜி ஆரே சாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தினார்.
  அது பொது தேர்தலாக இருந்தாலும் சரி , இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி.
  ஒருவன் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு ஒருவரை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டியிருந்தால் அவரை தனது சாதியினனாக இருக்குமாறு பார்த்துக்கொள்வான் .
  ஈழத்தில் இந்தளவிற்குநிலைமை இல்லை , இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர் பலருக்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் இந்தளவு சாதி சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதே தெரியாது .

  இப்போது இவர்களிடம் போய் , ஈழத்தில் , ஈழப்போராட்டத்தில் சாதி , பிரதேசத்தின் பங்கு என்ன என்பதன் உண்மை நிலவரத்தை விளங்கப்படுத்தினால் புரிந்து கொள்வார்களா ?
  நிச்சயமாக புரிந்து கொள்ள மாட்டர்கள் .
  தமது பிறவிப்புத்தியில் கறையாக படிந்து விட்ட சாதிய அளவுகோலை வைத்துக்கொண்ன்டுதான் ஈழப்போராட்டத்தையும் அளக்க முற்படுவார்கள் . கருத்தும் சொல்வார்கள்.
  அதோடு ஈழப்போராட்டத்தை வெறுப்பவர்களும் , புலிகள் மேல் காழ்ப்பு கொண்ட தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இவற்றை வைத்துக்கொண்டு தான் தோன்றித்தனமாக விஷத்தை கக்குவதற்கு கேக்கவா வேண்டும் ?
  அதன் வெளிப்பாடுதான் போராட்டத்தில் யாழ்ப்பணத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இறக்கவில்ல என்பதும் மற்ற பிரதேசத்தை சேர்ந்தவர்க்ளெ அதிகமாக இறந்தார்கள் என்பதும் .
  தம்ழ் நாட்டில் உ ட் கார்ந்து கொண்டு பிரதெச வாரியாக சாதி வாரியாக எத்தனை பேர் இறந்தார்கள் எத்தனை பேர் போராடினார்கள் ? எத்தனை போராளிகள் சாதி வாரியாக , பிரதேச வாரியாக இறந்தார்கள் என்பதை கணக்கெடுத்து விட்டார்கள் .

  இவர்களது இந்த சாதிய கண்ணொட்டத்தின் உச்ச வெளிப்பாடுதான் புலிகளின் தலவர் போரில் தோற்போம் எனத்தெரிந்தும் வன்னி மக்களை பலி கொடுத்தார் என்பது.

  வன்னியில் வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் . பல சாதியை சேர்ந்தவர்களும் இருந்தனர்

  இவர்களது கழிசடை சாதியப்புத்தியை வைத்தே புலிகளின் தலவரையும் எடை போடுகிறார்கள் . தம்மை போலவே புலிகளின் தலவரும் சாதிய கண்ணொட்டத்துடனேயே இந்த போராட்டத்தை நடத்தினார் என கூசாமல் விமர்சிக்க தலைப்பட்டுள்ளார்கள் .

  ReplyDelete
 11. இப்போது சொல்லுங்கள் இத்தைகையவர்களிடம் போய் ஈழத்தில் திருமண உறவுகள் ஏற்படுத்தும்போதுதான் சாதி பார்த்துக்கொள்வார்கள் . எல்லாநேரங்களிலும் எல்லா இடங்களிலும்
  அதனை பொருட்படித்துவதில்லை .

  ஈழப்போராட்டமும் அப்படித்தான் . புலிகள் இயகத்திலும் சாதி இருந்ததில்லை , தலவரும் சாதி க்கண்ணோட்டத்தில் போராட்டத் தை நடத்தியவருமல்ல என்று சொன்னால் நம்பவா போகிறார்கள் ?
  ஒரு போதும் நம்ப போவதில்லை.
  இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
  இவர்கள் தமிழ் நாட்டு சாக்கை சாதீய புத்தியை வைத்துக்கொண்டே ஈழ சமூக அமைப்பையும் , ஈழ் போராட்டத்தையும் நோக்குவார்கள் .

  அடுத்த காரணம் இங்கு கருத்து கந்தசாமிகளாக பின்னூட்டமிடும் தமிழ் நாட்டவர் சிலர் பொதுவாகவே ஈழப்போராட்டத்தின் மீதும் புலிகள் மீது காழ்ப்பு கொண்டவர்கள்
  அதனால் தான் அடித்தது சான்ஸ் என்று , அப்படியா ! நமக்கு பல தகவல்கள் மறைக்கப்படிருக்கிறது போலிருக்கிறது , திரிக்கப்பட்டிருக்கிறது . அதனால் மேலும் மேலும் தோண்டி தோண்டி பார்ப்போம் என ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

  இந்த கூ முட்டைகள் இது வரை காலமும் இந்திய , இலங்கை புலனாய்வு துறையினர் போராட்டம் பற்றியும் , புலிகள் பற்றியும் , புலிகளின் தலவர் பற்றியும் கட்டிய கட்டுக்கதைகள் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?
  ஏதோ இனி மேல் தான் கேள்விப்படப்போவ்தாக நடிக்கிறார்கள் .
  இவர்கள் புலிகலையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதற்கு தேர்ந்தெடுத்த விடயங்கள் பிரதானமாக இரண்டு. அது பிரதேசமும் , சாதீயமும்தான் ,

  இதில் சாதீய புத்தி இந்த தமிழ் நாட்டு சாக்கடைகளிடம் அப்படியே பதிந்திருப்பதானால் பிரச்சனையில்லாமல் அதை அப்படியே ஈழப்பிரச்சனையிலும் அப்ளை பண்ணி விடுவார்கள்.

  ReplyDelete
 12. அதனால்தான் போராட்டத்தில் யாழ்ப்பாணத்தவர்களை விட ஏனைய
  பிரதேசத்து போராளிகள் , மக்கள் அதிகமாக இறந்திருப்பதாக அள்ளி விட்டிருக்கிறார்கள் . குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது வன்னியில்.

  வன்னியில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் இறந்தார்கள் என கணக்கெடுப்பதற்கு ஐ .நா , மன்னார் ஆயர், பல்வேறு ஆணைக்குழுக்கள் , உலக நாடுகளே திணறி வருகிறபோது தமிழ் நாட்டிலிருந்து இந்த ஒடு காலிகள் சாதி வாரியாக இறந்த மக்களை கணக்கெடுத்திருக்கிறார்கள்

  இறந்த பிணத்தைக்கூட சாதி வாரியாக , பிரதேச வாரியாக கணக்கெடுத்திருக்கிறார்கள் இந்த சாதி புண்ணிய வான் கள் .

  இவர்களது சாதிய கண்ணொட்டத்தின் உச்சம்தான் , புலிகளின் தலைவர் போரில் தோற்போம் எனதெரிந்திருந்தும் வன்னியில் பொது மக்களை சாக கொடுக்க தீர்மானித்தார் ஏனெனில் அவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லியிருப்பது.
  இதுதான் அவர்களது கழிசடை சாதிப்புத்தி தமக்கிருப்பது போலவே புலிகளின் தலைவருக்குமிருந்திருக்கிறது என்பதுதான் அவர்கலது கண்டு பிடிப்பு.

  இந்த புண்ணியவான் களுக்கு வன்னியில் இருந்த மக்களில் பெரும்பானமையினர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் அதில் பெரும்பான்மையினர் 95 ஆண்டு சூரியகதிர் ராணு வநடவடிக்கையில் யாழ்ப்பாணம் முழுதாக சிங்கள ராணுவத்தால் கைப்பற்ற பட்டபோது வெளியேறிய மக்கள் பின் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டவர்கள் என்பதும் தெரியுமா அல்லது தெரியாதா ?
  தூங்குகிறவனை எழுப்பலாம் தூங்குகிறவன் போல் நடிப்பவனை ??

  ReplyDelete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. ##விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள்தான் மக்கல் லட்சக்கணக்கில் இறந்ததாக அடித்து விட்டர்கள் .40000 மக்களெ இறந்ததாக பக்கச்சார்பற்ற நிறுவனங்கள் எடுத்துரைக்கின்றன ##

  எந்த பக்க சார்பற்ற நிறுவனம் ?

  ஐ ,நா மூன்று வருடங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் 40000 தமிழ் மக்கள் இறந்திருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர அதனை முடிந்த முடிபாக கூறவில்லை.
  அப்படி கூறுவதாக இருந்தால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு ஒரு ஐநா அல்லது சர்வெதேச விசாரணை குழ்யை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துதான் சரியான புள்ளி விபரங்களை திரட்டியிருக்க வேண்டும்.

  அப்படியா நடந்தது ?

  உங்களது பாஷையில் சொல்வதாக இருந்தால் ஐநாவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டேஅடித்துவிட்டு கொண்டல்லவா இருந்தார்கள் .

  அதகுத்தான் உங்கலைப்போன்றவர்கள் மண்டையை மண்டை யை ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள் .
  அதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை . வன்னி யுத்ததின் இறுதிக்கட்டத்தில் மூன்று லடச்த்துகும் மேற்பட்ட மக்கள் சிக்கி இருந்த போதே இலங்கை அரசும் , இந்திய அரசும் சேர்ந்து வன்னியில் 70000 மக்கள் மட்டுமே சிக்கியிருந்ததாக இந்த உலகத்துக்கே கதை விட்டது

  பிரணாப் முகர்ஜி வெளிநாட்டமைச்சர் பாராளுமன்றத்திலேயே இந்த பச்சை பொய்யை கூசாமல் சொன்னபோது மண்டையை ஆட்டி அதையும் ஆமோதித்த மேதாவிகள் தானே நீங்கள்.

  ReplyDelete
 17. //SinghamFebruary 11, 2014 at 7:23 AM
  தங்களுக்கு உதவிகள் வரும் என்று கடைசி வரை பிரபாகரன் நம்பி இருந்தார். இரண்டாவது பிரபாகனும் கடைசி வரை இருந்து இறந்தார்.//

  இரண்டாவது பிரபாகன் இறந்தார் என்று தெளிவாக இங்கே சொல்லபடுகிறது. பிரபாகரன் இறந்தாரா என்பது சொல்லபடவில்லை.இலங்கையை சேர்ந்த வெளிநாட்டில் உள்ள விடுதலை புலி ஆதரவாளர்களும், அவங்களது தமிழக செயற்பாட்டாளர்களும் நக்கீரன் தயாரித்த பொய் செய்திபடியே பிரபாகரன் கொல்லபட்டது பொய்செய்தி, பிரபாகரனை யாராலுமே கொல்ல முடியாது,வெல்ல முடியாது, மறுபடியும் வந்து போர் செய்வார் என்று தமிழகத்தை முட்டாளாக்கி கொண்டிருந்தாங்க.

  ReplyDelete
 18. பொதுமக்களை தமிழ் புலிகள் அமைப்பினர் நாசி பாணியில் படுகொலை செய்து குப்பையில் போட்டதை பற்றிய விவரணன் நீலவண்ணனின் பதிவு ஊர்சுற்றி என்று புலிகளின் வழமையான கொலை மிரட்டல் காரணமாக தூக்கபட்டுள்ளதா?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...