Followers

Tuesday, February 4, 2014

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவனல்ல!!


04.2.14

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவனல்ல!!

 
கடவுள் என்று சொன்னாலே ஒரு சாரர் மதங்களையும் மதச் சடங்குகளையும் அந்த மதம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு செய்த கொடுமைகளையும் நினைவில் கொண்டு மிகத் தீவிரமாக எதிர் வாதம் செய்யத் தொடங்குவர். மேலை நாட்டில் கிருத்துவமதத்திற்கு எதிரானவர்கள் கிருத்துவமதத்தின் பெயரால் நடந்த படுகொலைகளை இன்னமும் மறந்தாரில்லை. எனவெ மிகுந்த வேகத்துடன் கடவுள் மறுப்புக் கொள்கைகளை விவரிக்க டார்வினையும் அவர் விளக்கிய பரிணாமக் கோட்பாடுகளையும் (Theory of Evolution) சொல்ல ஆரம்பித்து விடுவர்.

நமது நாட்டிலோ கடவுள் என்று சொன்னவுடன் இந்து மதத்தையும் இந்து மதச் சடங்குகளையும் அது வகுத்த சாதி முறைகளையும் மட்டுமல்லாது கடவுள் என்றாலே கல்லைத்தான் குறிப்பிடுகிறோம் என்று நினைப்போரும் உண்டு.

கடவுள் என்பது எல்லாம் கடந்த ஒன்று என்பதை பார்க்க மறந்து விடுகின்றனர். கடவுள் என்பதை beyond every thing, beyond all the creation and more specifically speaking, it is not about the creation but about the creator என்கின்ற context ல் எடுத்துக் கொள்ள முயல்வதில்லை.

சரி. நான் சொல்ல வந்தது என்ன?

இந்த டார்வினை ஆதரிப்போர் அவரது கோட்பாடுகளுக்காக என்றல்லாமல் இவரை ஆதரிப்பது ஒரு கடவுள் மறுப்புச் செயலாகவே செய்து வருகின்றனர். ஒன்றை கவனிக்க வேண்டும் பரிணாம வளர்ச்சியின் நிரூபணம் கடவுள் இல்லை என்று நிரூபித்ததாய் ஆகாது. ஆனால் டார்வினது ஆதரவாளர்கள் இவரது கோட்பாடு சரியென்று நிரூபணம் ஆனால் கடவுளை நிச்சயமாய் இல்லை என்றாகிவிடும் என்ற கோணத்தில் மிகத் தீவிரமாக டார்வினின் பரிணாமக் கோட்பட்டிற்கு ஆதாரங்களைச் சேர்த்தனர்.

இந்த முயற்சியில் தான் செப்டம்பர் 1912ல் உருவான டார்வினது கோட்பாட்டை நிரூபிக்க குரங்கிலிருந்து மனிதன் வந்ததற்கான சான்றாக டிசம்பர் 18, 1912ல் the Geological Society யால் “The Piltdown Man” என்கின்ற ஒரு மண்டை ஓடு ஆதாரமாக காட்டப்பட்டது. ஆனால் இங்கிலாந்து மியூசியம் இந்த மண்டை ஓட்டினை பரிசோதிக்கவோ அல்லது பரிசோதனகளுக்கு உட்படுத்தக் கேட்டு வந்த வேண்டுதல்களுக்கோ செவி சாய்க்கவில்லை. இந்த மண்டை ஓடு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம இடைவெளியை நிரப்பும் சான்றாக காட்டப்பட்டதால் மிக முக்கியமானதொன்றாக கருதப்பட்டது. இது பரிசோதனைக்கு உட்படுத்தப் படாவிட்டாலும் டார்வினது கோட்பாட்டை நிரூபிக்கும் ஒன்றாக எல்லோராலும் கருதப் பட்டது.

1949ல் டார்வின் கோட்பாட்டை ஆதரிப்போரால் ஆதி மனிதன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து வந்தவன் என்ற கருத்து பெருமளவு ஒப்புக்கொள்ளப் பட்டது. இது ஒரு குழப்பத்தையும் உண்டுபண்ணியது. அது என்னவென்றால் the Piltdown Man மண்டை ஓடானது மனித பரிணாம இடைவெளியை நிரப்பும் ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஆதி மனிதன் இங்கிலாந்திலிருந்தோ அல்லது ஐரோப்பியக் கண்டத்திலிருந்தோ வந்ததாகத்தான் ஆகும்.

இந்தக் குழப்பத்தை தவிர்க்க லூயிஸ் லீக்கி (Louis Leakey) என்பவர் இங்கிலாந்து மியூசியத்தை the  Piltdown Man மண்டை ஓட்டினை பரிசோதனைக்கு உள்ளாக்கும்படி நிர்பந்தித்தார். இவரே பின்னர் the History channel Documentery ல் இந்த Piltdown Man Skull ஒரு forgery என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இது அற்புதமாக குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிற டார்வினது கோட்பாட்டை உடைத்தது.




இதைத் தொடர்ந்து 2001 ம் வருடம் முதற்கொண்டு விஞ்ஞானிகள் மரபியல் மற்றும் கருவியல் சோதனைகளில் ஆதாரங்களைத் தேட ஆரம்பித்தனர். இது இன்னமும் பல செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இவைகளை சுருக்கமாக கீழே பார்ப்போம்.

1.   இதுவரை டார்வின் ஆதரவாளர்களால் மனிதக் குரங்கின் மரபணு 98 சதவீதம் மனிதனது மரபணுவோடு ஒத்துப்போவதாக நம்பப்பட்டது. தற்போதைய சோதனைகளில் அது தவறென்று நிரூபணமானது. இரு மரபணுக்களும் மிகப் பெரிய அளவில் வேறுபட்டது. உதாரணமாக மனிதனின் Y குரோமோசோமில் சிம்பன்சியின் Y குரோமசொமில் உள்ளதைப் போல இரு மடங்கு ஜீன்கள் காணப்பட்டது இது மட்டுமல்லாது இரண்டு Y குரோமோசோமின் தோற்றங்களும் வெகுவாக மாறுபட்டது.

2.   கருவியல் பரிசோதனைகளில் உடலின் உறுப்புக்களின் உருவாக்கம் ஜீனின் கூட்டமைப்பான செயலால் உருவாகிறது என்று தெளிவானது. அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டமைப்பின் செயலோடு இணைந்து செயலாற்ற புது ஜீன்களால் முடியாது. எனவெ புது ஜீனின் தேற்றமே இயலாதபோது மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவாகிற செயல் சாத்தியமில்லை ஏனெனில் மனிதக் குரங்கின் Y குரோமோசோமில் 37 ஜீன்கள் தான் உள்ளன ஆனால் மனிதனின் Y குரோமோசோமில் 78 ஜீன்கள் உள்ளன.

3.   குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதென்றால் புது ஜீன்கள் உருவாக வேண்டும். அதாவது மனிதனின் குரங்கிலல்லாத தோற்ற மாறுதல்கள் மற்றும் உடலியல் மாறுதல்களை உருவாக்க புதிய ஜீன்கள் உருவாக வேண்டும். இது மரபியலில் சாத்தியமில்லை. ஒற்றை செல் உயிரினமான பாக்டீரியாவில் மட்டுமே இந்த ஜீன் duplication சாத்தியம். இருபாலின இனச்சேர்க்கை  உயிரினங்களில் இது சாத்தியமல்ல.

4.   மனிதன் 23 இணை குரோமோசோம்களைக் கொண்டுள்ளான் ஆனால் மனிதக் குரங்கிற்கு (Ape) 24 இணை குரோமோசோம்கள் உண்டு. இதற்கு டார்வின் ஆதரவாளர்கள் மனிதக் குரங்கிலுள்ள குரோமோசோம்களில் ஒரு இணை இணைந்து ஒன்றாகியதால் 23 சோடி இணைகளே உள்ளன என்கின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை. மற்றும் இந்த குரோமோசோமின் இணைவு நடந்ததற்கான ஆதாரங்களும் இல்லை.

இன்னமும் தேடுதல்கள் தொடர்கின்றன.

தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தினை பார்வையிடுங்கள்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...