Followers

Saturday, February 1, 2014

கடவுள் உள்ளவரா அல்லது உருவாக்கப் பட்டவரா?


01.2.14

கடவுள் உள்ளவரா அல்லது உருவாக்கப் பட்டவரா?

 
God is Good என்று ஒரு சாரரும் God is Not Good என்று மற்றொரு சாரரும் வாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு சாரர் கடவுளே இல்லை என்கின்றனர்.

எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான். வளர வளர இது சரியா எனத் தோன்றியது. அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா? இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆராய்ந்து பார்த்ததில்  அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?

இந்தக் குழப்பம் சரியாகுமுன்னரே அவர்களது வாதத்தின் போக்கு மாறியது. ‘நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்களல்ல பிராமணியத்திற்கு எதிரானவர்கள்’ என்றனர். எனக்கு இதுவெல்லாம் ஓட்டு வங்கிப் பேச்சு என நாள்பட நாள்பட புரிந்தது. பிறகுதான் தெளிந்து முடிவெடுத்தேன். எதையும் நாமே ஆராயாமல், ஒரு தேடல் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று.

எனது தேடல் பெரும் உண்மைகளை, பேசாது ஊமையாயிருக்கும் நிதரிசனங்களை என்முன் கொண்டுவந்து நிறுத்தியது.


 
 
 
இறை என்ற பேருண்மைக்குச் சாட்சியாய் இந்தப் பிரபஞ்சமும் அதன் இயக்கமும் மட்டுமல்லாது அதன் சுய சார்புத்தன்மையையும் self sustaining ability நின்றது. இவைகளுக்கு விஞ்ஞானம் விளக்கம் அளிக்கலாமே தவிர எவ்வகையிலும் அதனை உருவாக்க முடியாது என்பதும் புரிந்தது.

மனிதன் உருவாக்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்றாலும் அவனால் இறையின் படைப்பில் உள்ள இயக்கங்களைப் புரிந்து அதை படிவம் எடுத்ததைப் போல உருவாக்குவதை மட்டும்தான் செய்ய முடிந்தது. மேலும் அவனால் இருக்கும் ஒன்றிலிருந்துதான் மற்றொன்றைச் செய்ய முடிந்ததே தவிர இல்லாத ஒன்றிலிருந்து இன்னொன்றைச் செய்ய முடியவில்லை.

இன்றைக்கும் கூட மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று ஒன்று நடந்திருக்கலாம் என்று ஒரு HYPOTHESIS தான் உள்ளதே தவிர பரிணாம வளர்ச்சியைக் கண்டாரில்லை. மேலும் ஒரே நேரத்தில் அனைத்து உயிர்களும் தோன்றின என்பதற்கு இனிமேல் ஆதாரங்களே கிடைக்காது என்றும் அறுதியிட்டுச் சொல்வாரில்லை. கிடைக்கும் ஆதாரங்கள் மனிதனால் விளக்கப் படுகிறது அல்லது மனிதனது விளக்கத்திற்கு அகப்படாமல் குழப்புகிறது. அவ்வளவே.

மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.

இதற்கு உதாரணங்களாக மனிதன் உருவக்கிய ஓசோனைக் கிழிக்கும் super sonic jet லிருந்து பாதாளச் சாக்கடையை அடைத்துக் கொள்ளும் பிளாஸ்டிக் வரையும், மற்றும் கடவுள் படைத்த பூக்கள், வண்டுகள், பறவைகள், நிலம், நீர், மற்றும் ஆகாயம் மட்டுமல்லாது அவைகளை நிறப்பும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களையும் சொல்லலாம். இவைகள் யாவும் ஒன்றைச் சார்ந்து ஒன்று முரணின்றி இயங்குவதையும் காணலாம். மனிதன் பிராண வாயுவை உள்ளெடுத்து கரிமில வாயுவை வெளிவிடுகிறான். மரங்களோ கரிமில வாயுவை உள்ளெடுத்து பிராண வாயுவை வெளிவிடுகின்றன. அது மட்டுமல்ல இத்தகைய மரம், செடி கொடிகள் மனிதனின் கழிவைச் செரித்து அவனுக்கு உணவைக் கொடுக்கின்றன. இது அற்புதமல்லவா?

 
 
இது தவிர  இயற்கையிலுள்ள சூரியன், சந்திரன், பூமி அதிலுள்ள செடி கொடிகள் விலங்குகள் பறவைகள் மற்ற இவைகள் யாவும் ecological pyramid ன் உச்சத்திலிருக்கும் மனிதனுக்காக, அவனது பயனுக்காக இருப்பதையும் அறியலாம். இவை எல்லாவற்றையும் அவனுக்காக படைத்த கடவுளுக்கு அவன் நன்றி சொல்வதிலும் அவரை அங்கீகரிப்பதிலும் தவறொன்றுமில்லை எனவே எனக்குப் படுகிறது.

சரி. கடவுள் இருக்கிறாரென்றால் இங்கு நடப்பவைகளுக்கெல்லாம் போறுப்பேற்றுக் கொள்வாரா? அவர் நல்லவரா அல்லது கெட்டவரா?

இந்தக் கேள்வியைக் குறித்து அடுத்து பேசுவோம். வேறு வலைத்தளம் மூலமாக வந்த நண்பர்களுக்கு: இதையும் பாருங்கள்.

        மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவனல்ல!!

 http://vettipaechchu.blogspot.in/2014/02/blog-post_6357.html

அன்பன்,

வேதாந்தி.

 

 

 

 

 

5 comments:

  1. சாதி, மத பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்கத்தான் அவரால் முடியவில்லை. மனிதர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    மனிதர்கள் செய்யும் தவறுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்கிற கருத்தில் உண்மையில்லை.

    கோபாலன்

    ReplyDelete
  2. @ கோபாலன்:
    சாதி மதங்கள் கடவுள் உருவாக்கியது என்று யார் உங்களுக்குச் சோன்னார்கள்?
    கடவுளுடைய ஆக்கங்கள் எல்லாமே ஒன்றிற்கொன்று எதிராய் இருப்பவை அல்ல. பிள்ளையின் செயலுக்கு தகப்பன் எப்படி பொறுப்பாவான். எத்துனையோ குடும்பங்களில் தகப்பனுக்கு எதிரான/மாறான குணமுடைய பிள்ளைகளைக் காண்கிறோமே.
    இருப்பினும் இது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக.

    தங்கள் வரவுக்கு நன்றிகள்

    @ Robin
    தங்கள் வரவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தஙகளின் தரமான (தற்போது ஊடகங்களில் காணக் கிடைக்காத) பதிலுக்கு மிக்க நன்றி.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. மனிதரை மதிக்கத் தெரிந்தவர் பெரியார். அவரது ideology மிகவும் போற்றர்க்குரியது. கருத்து வேறுபாடு வேறு காழ்ப்புணர்வு வேறு. கருத்து வேறுபாடுகள் நிறைந்த சமுதாயம் நல்ல விளை நிலம் போல . அதில் விளைச்சலை எடுப்பவனே தனக்கும் தன் சமுதாயத்திற்கும் நல்லது பயப்பவன்.

      மிக்க நன்றி கோபாலன். நீங்கள் உங்களது கருத்தை மிக நாகரிகமாகச் சொல்லியிருந்தீர்கள். நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...