Followers

Saturday, May 30, 2015

பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE..


30.5.15

பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE..

இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நினைக்க வாய்ப்புண்டு.

சிலர் நான் பார்ப்பானராகவோ அல்லது பண்டாரமாகவோ இருக்கக் கூடும் என எனது வகையறா பற்றி நாகரிகமில்லாமல் தங்களை கீழிறக்கிக் கொண்டு வசைபாடி தங்களது தரா தரத்தை வெளிப்படுத்தலாம்.

எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் நான் பேசப்போகும் இந்த செய்தி உண்மையாலுமே எனது மனதைக் குடைந்து கொண்டிருக்கும் செய்திதான்.

ஏற்கனவே எனது நண்பரது அனுபவத்தை வைத்து (இதோ சுட்டி) ‘ஒதுக்கீடுகளும் அரசாணைகளும்  மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?’ என கேட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவு தற்போது நான் படித்த செய்திகளின் வெளிப்பாடு.

30.5.2015 தேதியிட்ட The Hindu பத்திரிக்கையில் திரு. சூரியகாந்த் வாமோர் (Thiru. Suryakant Waghmore, Associate Professor and Chairperson, Centre for Social Justice and Governance, Tata Institute of Social Sciences, Mumbai and DAAD Visiting Professor, Centre for Modern Indian Studies, University of Gottingen) என்பவர்  சமீபத்தில் நாளிதழில் வந்த செய்தி குறித்தும் அது சுட்டுகின்ற அறிகுறிகளைக் குறித்தும் விளக்கியிருக்கிறார் (Prejudice disguised as politeness).

செய்தி இதுதான்:  மும்பையிலிருக்கும் திருமதி பத்மா ஐயர் ஓரினச் சேர்க்கையாளரான தனது மகனுக்கு ஒரு இணை தேடி கொடுத்த விளம்பரத்தில் caste no bar (though Iyer preferred) என கொடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இது தவறா?

அவர் தனது கட்டுரையில் “Does choosing to marry someone from one’s own cast makes one casteist?” எனவும் வினா எழுப்பியிருக்கிறார். இது மட்டுமல்லாது தற்போது இணை தேடி வரும் விளம்பரங்களில் “Caste no bar” எனச் சொல்லிவிட்டு அடைப்புக் குறிக்குள் “SC/ST, Please excuse” எனச் சொல்வது மிகுதியாகி இருக்கிறது என்கிறார்.

இது இருக்கட்டும்.

சமீபத்தில் ஒரு பதிவிற்கு இன்னொரு பதிவாளார் தனது மறுமொழியில் ‘வீடு வாடகைக்கு விடும் பிராமணர்கள் பிராமணர்களுக்கு மட்டும் வீடு என அர்த்தம் தொனிக்க “Vegetarians only” என அறிவிப்பு பலகை எழுதிவைப்பது நாகரிகமா என சாடியிருக்கிறார்.

இங்கு எனக்கு இரண்டு சந்தேகங்கள்:

1.(அ). தனது இணையைத் தேடிக்கொள்ளும் உரிமை ஒரு மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா? அப்படி இருக்கையில் அவனது/அவளது விருப்பப்படி இணையைத் தேர்வு செய்வதில் - including caste - தவறென்ன? இதில் மற்றையோர்கள் தலையிடுவதோ அல்லது தங்களது கருத்துக்களைச் சொல்வதோ அவர்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாய் ஆகாதா?

 (ஆ). ஒருவன் தனது சம்பாத்தியத்தில் கட்டிய தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கோ அல்லது மற்ற பயனுக்கோ அவனது விருப்பப்படியாக தேர்வு செய்தவர்க்கு – incuding caste -  விடுவது தவறா? அவனது உழைப்பில் பங்கேற்காதவன் பொதுவுடைமையை பேசி அதைப் பற்றி கருத்துச் சொல்வது நாகரிகமா? இந்த அளவுக்கு ஒருவருடைய வாழ்வில் மற்றவர் உள் நுழைய அனுமதித்தால் நாளை அந்த அனுமதியை தங்களது உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய அபாயம் இல்லையா?

இரண்டாவது:

திரு. சூரியகாந்த் வாமோர் தனது கட்டுரையில் “The ‘SC/ST, Please excuse’ disclaimer in some matrimonial ads is the new ‘purity line’ that marks SCs and STs as undesired partners” என தெளிவாக குறிப்பிடுகிறார். இதை caste discrimination என்று சொல்வதை விட caste preference எனச் சொல்லலாம்.

இந்த நிலைக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு தாயர் ஓரினச் சேர்க்கையாளனாகிய தன் மகனுக்கு இன்னுமொரு ஓரினச் சேர்க்கையாளரை திருமணம் செய்து வைக்கத் துணியும் போது  இந்த caste preference ஐ விட தயங்குவதேன்?

எனக்கென்னவோ SC/ST களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதே அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்குமோவெனத் தோன்றுகிறது. மற்றவர்களிடையே ஒரு பொதுவான அச்சம் அவர்களுக்கெதிராய் திரும்பியிருக்கலாம் எனத் தோன்றுகிறது

இதே போலத்தான் பெண்களைக் காக்க போடப்பட்ட சட்டங்களையும் சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் தற்போதைய இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்குகின்றனர். அதனாலேயே அவர்கள் non committal living together ஐ prefer செய்கின்றனர் எனவும் படுகிறது.

மேற்சொன்னவைகள் ஒருவகையான cultural evolutionary process ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

மேலும் குறிப்புகளுக்கு:

LEGAL TERRORISM:
MISUSE OF SC/ST ACT :



MISUSE OF DOWRY ACT

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.

 

 

24 comments:

  1. பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

    சூத்திரன் என்றால் யார்?


    சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

    அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

    இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

    சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

    இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

    நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
    --------------------

    நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

    அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

    கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

    சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

    யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

    கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!


    கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

    *************

    மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

    "ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

    மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

    “பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

    மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

    “அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

    மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

    “வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

    மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

    “பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

    அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

    "பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

    அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

    "பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

    மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

    "வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
    .

    ReplyDelete
    Replies
    1. காழ்ப்பைத்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர நான் சொன்னவைகளுக்கு சம்பந்தப்பட்ட கருத்தை நீங்கள் வைக்கவில்லை நண்பரே.

      Delete
  2. கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”. தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

    இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

    ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

    இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

    இங்கே >>>கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? <<< சொடுக்கி படியுங்கள்.
    .

    ReplyDelete
    Replies
    1. காழ்ப்பைத்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர நான் சொன்னவைகளுக்கு ஒத்த கருத்தை நீங்கள் வைக்கவில்லை நண்பரே.

      Delete
  3. இந்த விசயத்தில் சட்டமே தவறு என்று தோன்றுகிறது... ஏன் இந்த விசயங்களே தவறு...

    (தவறு = எனக்குப் பிடிக்கவில்லை...)

    ReplyDelete
    Replies
    1. நல்லது அய்யா.. நான் உங்கள் கருத்தை மதிக்கிறேன். இது ஒரு sensitive subject என்றாலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது எனும்போது இது குறித்து தீர்வறிய யாரேனும் பேசித்தானே ஆகவேண்டும்.

      உங்களது கருத்துக்கு நன்றி.

      God Bless You

      Delete
  4. Your argument would have sounded right if the matrimonial ad by the Iyer mom had excluded all except Iyers. Rather, she said, only SC/STs excuse. Hence, she singleS out SC/STs for discrimination. She thus helps society which is already against SC/STs to discriminate them from all walks of life more and more; Yesterday one SC girl told me that she couldn't find employement from private hospital as a nurse (She is a qualified nurse).because hospitals don't take SCs/STs girls on board. As you know, SC/STs girls are not employed by Airlines as air hostesses even if they are qualified. They depend on government to support. In this scnario, such matrimonial ads will be death nails to these people. Social isolation, untouchability and degradation ! Not self imposed, but imposed by the iyer mon and you who support it.

    Renting house to brahmins only would be ok in your theory of - I-will-do-whatever-I-want- with my house. But it will isolate the Brahmins from society and prevent their integration. Here, too, you help a bad thing to be worse, namely the self-imposed isolation of Tamil brahmins from Tamil society.

    All liberties in society should be exercised w/o bringing harm to oneself as well as to society as a whole.

    -- BALA SUNDARA VINAYAGAM

    ReplyDelete
    Replies
    1. "
      All liberties in society should be exercised w/o bringing harm to oneself as well as to society as a whole."

      I respect what you have said. That is the point I would like to make. Why this is not happening. It seems to me that while one party is making their preference for their safety only. That is what I said. My friend had personally experienced such a bitter thing in the Govt. Office. So why anyone would like to bring fear in their life and live with apprehension for ever?
      Cant he use his fundamental rights to protect his own life?
      That is the question I have raised.

      Please go thro this: ‘ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?’ http://vettipaechchu.blogspot.com/2011/07/blog-post_19.html

      Thank you for your visit and valuable comment.

      God Bless you

      Delete
  5. Although I have said enough, a few more words should make my point depressingly painful to the readers, which is my aim. Instead of SC/STs exccuse, if the matrimonial ad is out with the proviso: All can apply but Iyers please excuse; or a job ad -- all are eligible. Iyers excuse.

    Imagine the pain. Pain arises from this feeling: Are all people good and worthy but me? What have I done to lose the trust of the society and why am I discriminated don't know. If the person discriminated against, is a young, the pain will be inserted too deep in him to remove; and the scars or pains are ineradicable all along the life. It may spill out in different directions, as I saw the brahmins harboring hatred against SCsSTs for getting into jobs and they losing it despite more deserving.

    Only jobs, that too, govt jobs, the SCs and STs aren't discriminated. But in all other walkks of life in society as a whole, people discriminate against them relying on your theory of individual liberty as a weapon to attack them.

    I have seen young students as well as college students getting discriminated against for being SCs and STs and now, the untold story of IIT Madras dalit studuents come to the fore now, which is an old story for a long time watcher to me.

    The pain: The society says: All are good and worthy, except me, the SC or the ST and I don't know why. Has God made me so ? What is the use of me going to London to enter the Bar and become a Barrister and then, go to Columbia University to earn my Doctorate in Law and finally become the Law Minister of India? What is the use of all if all are good and worthy and I alone is unworthy and to be hated - ONLY BECAUSE I AM THE SON OF THE COBBLER?

    The above is from Dr Ambedkar. When he came back to India, and was employed by the Baroda Maharaja, the peon threw files at him. This is ok because Ambedkar was too mature to take such gratutitous insults to heart. But as a small school boy, he wasnot allowed to quench his thirst from the school well. He cried. A good Samaritan gave water. You will say with great MORAL UPRIGHTNESS that the well was not constructed by SCs/STs. It was owned by someone. He had absolute right to give water from it whosoever he liked; and denied it to whosoever he hated.

    The matrimonial ad excludes all SCs/STs. That's the painful point because it excludes such worthy people as Dr Ambedkars, Ramdas, the Cobbler, Haridas and et al. Because, the Iyer mom doesn't want a Dr Ambedkar as her son-in-law but rather prefers to pick up a bohemian merely because the bohemian is born an Iyer.

    You can change law. But you can't change the mindsets of such Iyer moms. A humanitarian like me writhes in pain on seeing the like of hers in society.

    He prayeth best, who loveth best
    All things both great and small;
    For the dear God who loveth us,
    He made and loveth all.

    -- BALA SUNDARA VINAYAGAM

    ReplyDelete
  6. Sir,
    I completely agree with you. To say that I am not in agreement with you will certainly make me INHUMANE.
    Please understand that we need a mutual trust with both the parties and not one with hatred and one with vengeance which will never bring peace.
    The present condition demands decent trust from both the parties. Even though one does not have hatred or discrimination and if he is not having trust it wont work. For this as a community we should work conscience and move forward. Laws and arguments wont work.
    One always live with vengeance of the past and another with fear of the future..In this condition nothing will work except mutual trust and forgiving.

    Let us hope the situation will change.

    God bless You

    ReplyDelete
  7. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  8. இது வெட்டிப்பேச்சு அல்ல.கெட்டிப்பேச்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா
      எல்லோரும் சற்று விலகியே இருக்கும் இந்த பதிவின் கருத்துக்கு உங்களது பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

      உண்மையைச் சொல்ல பயப்படவேண்டியதில்லை எனும் திடம் கொண்டவன் நான்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. புறக்கணிக்கப்படுதல்களின், ஒதுக்கப்படுதல்களின், ஒடுக்கப்படுதல்களின் வலிகளை உணர்ந்தறியாதவரை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்கிக் கொள்வது என்பது இயலாத ஒன்றாகும்.. ! தேர்ந்தெடுக்கப்படுதல்கள் அவரவர் விருப்பம் என்றாலும், அதில் ஒருசாராரையே தொடர்ந்து எவ்வித அடிப்படைக் காரண காரியங்கள் இல்லாமல் ஒதுக்குவது என்பது மனித தன்மையற்ற செயலாகும். ஏன் SC/ST வேண்டாம் என்கின்றார்கள்? என்பதற்கு காரணங்கள் முன் வைக்கப்படுவதில்லையே. ஒத்த மொழி, வாழ்வியல், பழக்க வழக்கங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் அதே மொழி, வாழ்வியல், பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தாலும் எவ்வித அடிப்படைக் காரணமும் இல்லாமல் ஒதுக்கும் மனோபாவம் என்பது மன முதிர்ச்சியற்ற, மன வளர்ச்சியற்ற, பண்படாத சிந்தனையுடையவர்கள் வழிமுறைகள். !!!

    உலகமானது அனைவரும் அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் தொடர் சங்கிலித் தொடராகும். ஒருசாரார் வேண்டாம் என தனிக் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டவர்கள். அ முதல் ஃ வரையிலான அனைத்து தேவைகளுக்கும் பிறரையே நாடுகின்றனர். மற்றவரே வேண்டாம் என தனிக் கொட்டாரத்துக்குள்ளேயே சகல தேவைகளைத் தாமே நிறைவேற்றி வாழ்ந்து கொள்ளலாமே. தொட்டுக் கொள்ள ஊறுகாயாக, கறிவேப்பில்லையாக தேவைக்கு மட்டும் மற்றவர் என்பது நியாயமாகுமா?!

    சம்பிரதாயத்தை உடைத்து ஒருபால் மணத்திற்கு ஆதரவு கொண்ட போதும், சாதியை விட முடியவில்லையே. ஏனிந்த பாரபட்சம்?! SC/ST பிரிவினரை ஒதுக்க வேண்டிய காரணம்..!!!? தக்க காரணங்களை முன்வைக்காமல் தொடரும் எப்பேச்சுக்களும் வெட்டிப் பேச்சுக்களே !!!

    ReplyDelete
  10. அய்யா.. எனது பேச்சை வெட்டிப்பேச்சு என ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

    உண்மையாலுமே நான் பேசியதை விட்டு மற்றதை பேசியிருக்கிறீர்கள். இப்படித்தான் நாம் பிரச்சினைகளை விட்டு மற்றவைகளை பேசவும் பார்க்கவும் மட்டுமே செய்கிறோம்.

    நான் குறிப்பிட்டுள்ளது மணமகள், மணமகன் விளம்பரத்தில் இந்தத் தேர்வு ஏன் என்பதற்கான கேள்விக்கு எனக்குப் பட்டவற்றைச் சொன்னேன்.

    வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வன் கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான கதையையும் சுட்டி கொடுத்து சொல்லியிருக்கிறேன்.

    அது மட்டுமல்ல கணவன் மனைவிக்குள்ளேயே சரியான புரிதல் இல்லாவிட்டால் சட்டத்தின் பிடியில் சிலர் அவதிப்படுவதையும் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

    இந்தப் பதிவு சாதிகளைக் குறித்து அல்ல. மனிதர்களின் தேர்வு குறித்தே. மனிதர்கள் தங்களுக்கு சமாதானமல்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். They should be comfortable with their choice. ஒருபோதும் தன் பார்வைக்கு சரியாகத் தென்படாத செயலை ஒருவன் செய்யத் துணியமாட்டான். No body will hug a teddy bear doll if he sees it as a porcupine.

    இந்த இடத்தில் இன்னுமொன்றை கூறியாக வேண்டும். ஒரு சமுதாயம் பழைய கால நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு ஓட்டு வங்கிக்காக அதை ஊதி விட்டுப் பெரிதாக்கும் கட்சிகளின் மத்தியில் நெஞ்சு நிறைய வஞ்சத்துடன் காத்திருக்கிறது....

    இன்னுமொரு சமுதாயம் கூடி வாழ்வதில் தனது எதிர்கால வாழ்வின் நலத்தில் நிச்சயமின்மையை நினைத்து அச்சத்தில் இருக்கிறது . சட்டத்தின் கைப்பிடி மற்றவரது கையில் எனும்போது இது நியாயமே..
    எந்த புள்ளியில் இருவரும் கூடுவர்?

    இங்குதான் பரஸ்பர புரிதல் முக்கியமடைகிறது. அதை நோக்கி நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரு விவேகத்துடனும் புரிதலுடனும் சென்றாலொழிய இது நடக்காது.

    அது மட்டுமல்ல. இது நடந்து விட்டால் ஓட்டுத் திண்ணிகளுக்கு வேலை இல்லை.

    எனவே இது நடக்குமா என சந்தேகத்துடன் இருப்பதைத் தவிர நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது நல்லது எனப் படுகிறது.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    God Bless YOU

    ReplyDelete
  11. "ஆனால் மற்ற சாதியில் மணந்து கொள்ள விரும்பும் தன் சாதியைச் சேர்ந்தவர்களை தடுப்பதும், அதற்காக வன்முறையை உட்பட அனைத்து வழிகளிலும் முயல்வது சாதிவெறி தான்."

    இதை முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறேன். ஆதரிக்கவும் செய்கிறேன். நான் இங்கு பேசியது அதைப்பற்றியதல்ல.

    "அவர்களது வீடும், வீடமைந்த நிலமும் அவர்களுடையதாகவே இருக்கட்டும். ஆனால், அந்த நிலம் அமைந்திருக்கும் நாடு அனைவருக்கும் பொது. அந்த நாட்டின் வளங்களை பயன்படுத்தியே அந்த வீடு கட்டப்பட்டுள்ளது."

    இங்கு தனி மனிதனின் உழைப்பு இல்லையென்கிறீர்களா?
    இப்போது நீங்கள் பேசும் பொது உடமை எல்லோருடைய சொத்துக்களுக்குமா அல்லது ஏமாந்தவர்களுக்கு மட்டுமா?

    வழக்கில் மாட்டிக்கொண்டவனின் சொத்தையே ED ஆல் துணிந்து attach செய்யமுடியவில்லை. தனிமனித உரிமை என்பது பெரும் அரசியல் வாதிகளுக்கு மட்டும்தானா?
    புரியவில்லை அன்பரே..

    நான் சொல்லவந்தது அதுவல்ல.

    நமது சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அழுத்தம் திருத்தமாக ஒத்துக் கொள்கிறேன்.

    ஆனால் எப்படி வரும்? மனமாற்றம் இல்லாது எப்படி வரும்? மனமாற்றம் என்பது ஒருவரை கட்டாயப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ கொண்டுவர இயலாது. இருசாரரிடையே ஒரு நம்பிக்கை வளரவேண்டும். அது இப்படி கீறிக்கொண்டிருந்தால் எவ்வாறு நடக்கும்?

    "ஒவ்வொருவருக்கும் தமக்கான தெரிவுகளை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அதற்காக மற்றவைகளை புறக்கணிக்க நினைப்பது ஆபத்தான ஒன்றாகும்."

    நான் இங்கு புறக்கணிப்பைப் பற்றி பேசவில்லை. தேர்ந்தெடுதலுக்கான காரணத்தைக் கண்டு அதைச் சரி செய்தாலே அவர்களே விரும்பித் தேர்ந்தெடுப்பர் என்பதுதான் எனது வாதம்.

    "அந்த SC/ST பாதுகாப்புச் சட்டங்களை தவறாக பயன்படுத்துவோரும் உண்டு, ஆனால் அது அது ஆகக் குறைவான அளவிலேயே நடைபெறுகின்றது."

    இங்கு statistic ஒத்து வராது. அந்தக் குறைவானவர்களில் தான் ஒருவனாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவர்களது பயமே.

    இந்த பயத்துடன் ஒருவன் எப்படி தனது வாழ்வைக் கடத்த முடியும்? அதுமட்டுமல்ல அது தேவைதானா எனவும் நினைக்கிறான் என்பதே எனது செய்தி.

    கவனியுங்கள் இது எனது வாதமல்ல. பிரிவினையையும் discrimination ஐயும் எந்தப் பொருளிலும் எந்த நிலையிலும் ஆதரிப்பவனல்ல நான். அது மதமாக இருந்தாலும் சரி அல்லது இனமாக இருந்தாலும் சரி. மக்கள் கூட்டு வாழ்க்கைக்கு உகந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆனித்தரமான கருத்து.

    தங்கள் கருத்துக்கு நன்றி.

    God Bless You



    ReplyDelete
  12. தமக்காக கிடைத்துள்ள உரிமைகளைக்கொண்டு உயர்ந்த சாதியினரை அடக்க நினைக்கின்றனர் (நான் அப்படிச் சொல்லவில்லை..)என்பெதல்லாம் நிழலைப் பார்த்து பேய் என அஞ்சும் பேச்சு.

    நீங்கள் சொன்னது போலவே இருக்கட்டும். அது நிழலா அல்லது பேயா என யார் சொல்வது?
    அல்லது நிழலைப் பார்த்து பேய் என பயந்தவனை யார் நிகழ்வுக்குக் கொண்டுவருவது? அவனும் சமுதாயத்தில் ஒருவன் தானே.. இன்னமும் சொல்லப்போனால் அவனது அங்கீகாரம் அடுத்தவனுக்கு மிக முக்கியம் இல்லையென்றால் சமநிலை கெட்டுவிடும் என்பதுதானே உங்கள் வாதம். அப்படி யிருக்கையில் அவனது பயத்தை தெளிவு படுத்த வேண்டியது யாருடைய கடமை..?

    போராடுவோம் என்பதே அடுத்தவனுக்கு எதிராக என்றுதானே..? Simple aggression will not solve the issue. That is the point I want to stress here.

    Every body has their own rights and it should not be denied at any cost.

    சொல்ல வேண்டியவைகளை தெளிவாக விளக்கிவிட்டேன் அன்பரே.
    வாதத்தை எடுத்துச் சென்றமைக்கு நன்றி.

    நீர் சொன்னதைப் போல ஒரே தமிழர் அல்ல ஒரே இந்தியர் என அனைவரும் வாழ்வதே ஆனந்தம்.

    God Bless You

    ReplyDelete
  13. "எல்லாருடைய சொத்துக்களையும் வாடகைக்கு விடும் போது அதை பெற்றுக் கொள்வதற்கான வெளியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்கின்றேன். ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே வீடு வாடகைக்குத் தரப்படும் என்ற மனோநிலை. அதன் ஆணிவேர் சாதி வெறுப்புத் தானே."

    வாடகைக்கு விட்டவனின் மேல் பாய்ந்த வன்கோடுமை குற்றச்சாட்டினை நீர் பார்க்கவில்லையோ?

    இதோ சுட்டி : பதிவிலேயே கொடுத்திருக்கிறேன். http://www.rediff.com/news/report/growing-misuse-ofsc-st-act-worrying-court/20100402.htm

    ReplyDelete
  14. இன்றைய மதியம் புதிய தலைமுறைச்செய்தியில் சென்னை உச்சநீதி மன்றம் மதுரைக்கிளையில் ஒ பன்னீர்செல்வம் அவர்களின் தம்பி ஓ ராஜாவும் மற்றும் 7 பேரும் தலித்து பையன் ஒருவன் பெரியகுளம் மாரியம்மன் கோயிலில் பூஜாரி வேலை செய்தான் என்பதால் அவனை மிரட்டி தற்கொலை செய்ய உடந்தை என்று வழக்காகியிருக்கிறது. ஜெயலலிதாவும் உடனடியாக ஓ ராஜாவை பெரியகுளம் நகராட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.

    தீண்டாமையா இல்லையா?

    ஐயர் பெண் எஸ் ஸீ/எஸ் டி மட்டும் ஒதுக்கப்படவேண்டியவர்கள் என்று விளம்பரம் கொடுத்தது தீண்டாமையா இல்லையா?

    Bala Sundara Vinayagam

    ReplyDelete
    Replies
    1. though Iyer preferred என்று கொடுத்திருக்கிறார். SC/ST யை ஒதுக்கிவைப்பதாய் அவர் சொல்லவில்லை.

      இப்போதைய விளம்பரங்களில் SC/ST please excuse என அதிகமாக வருகிறது என கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார்.

      நான் புத்திசாலி என்று சொன்னால் நீங்கள் முட்டாள் என அர்த்தமில்லை.

      சரியாக பொருள் கொள்ளவில்லையென்றால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்.

      Delete
  15. அய்யா,

    மறுபடி சொல்கிறேன் நான் இங்கு தீண்டாமையைப் பற்றியோ அல்லது அதை ஆதரித்தோ பேசவில்லை.

    கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி வருகிறீர்கள். நான் அதை விட அதிகமாக கவனத்தில் கொள்ளவேண்டிய மனித மனங்களின் தேர்வு பற்றியும் மனிதர்கள் தங்களுக்குள் இணக்கமாய் நடந்து கொள்ள என்ன செய்யலாம் என்பது பற்றியும் தான் பேசியிருக்கிறேன்.

    தீண்டாமை மிகக் கொடிது.
    மனிதர்களை எக்காரணம் கொண்டும் சாதி, நிறம், பண்பாடு, மதம், இனம், கல்வி, கடவுள் நம்பிக்கை அல்லது மற்ற கொள்கைகள், பொருளாதாரம் ஆகிய எவைகொண்டும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது எனது மிக ஆழமான கருத்து.

    தமிழர், திராவிடர் என்பதையே ஒத்துக் கொள்ளாதவன் நான். இது நம்மை ஆள அரசியல் நரிகள் செய்து வைத்த தந்திரம்.

    இறந்த காலம் என்னும் ஒன்று நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடத்தை அனுபவமாக கொடுக்கிறது. அதைக் கொண்டு நாம் நம்மை நிகழ்காலத்தில் தகவமைத்துக் கொண்டால் நமது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதுதான் நாம் நம்பும் கோட்பாடு.

    ஐயர் பெண் கொடுத்த விளம்பரத்தைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன். இது தனிமனித சுதந்திரமா இல்லையாவென கேள்வி கேட்டிருக்கிறேன். அவருடைய தேர்வுக்கு காரணம் என்னவாயிருக்கும் என்று எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். இதில் தீண்டாமை எங்கு வந்தது.

    நிறையக் குடும்பங்களில் தங்களது சொந்த முறைமாமன் களுக்கே பெண்களை கொடுப்பது இல்லை. இது தீண்டாமையா அல்லது ஒதுக்குதலா...? இரண்டும் அல்ல. சொந்தத்தில் பெண் கொடுத்து எடுத்துக் கொண்டான் congenial disease என்கின்ற மரபு சார்ந்த கோளாறு வரும் என்பதால்தான் தற்காலத்தில் சொந்தங்களை ஒதுக்குகின்றனர்.

    உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என நினைக்கிறேன். ஒரு குறை என்னவென்றால் நாம் மாற்றி யோசிக்கப் பழக மறுக்கிறோம். அதனாலேயே நாம் கேட்டவைகள், பார்த்தவைகள், மற்றவர்கள் தங்களது சுய ஆதாயத்திற்காக சொலி வைத்தவைகள் நம்மை ஆளுகின்றன.

    இது வருந்தத் தக்கதே..

    தங்களது கருத்துக்கு நன்றி.

    God Bless You

    ReplyDelete
  16. விளம்பரங்களில் தவிர்க்க வேண்டும் என்று போடுவது தேவையில்லை என்று நினைக்கிறேன். பல அழைப்புகள் வந்து நேர விரயம் ஏற்படுவது தவிர்க்க இயலாது. இங்கு மனித மனம் தனக்கு வேண்டுவதை தேடினாலும் அது வேறு விதமாக வளர்ந்துள்ளது.(குறிப்பிட்ட இனத்தவர் வேண்டாம் என்பது அவர்களின் மனம் வளரவில்லை காட்டலாம்).
    அடிபட்டவனுக்கு வலி தெரியும். ஒரு குறிப்பிட்ட இனத்தவராக சில நிமிடம் உங்களை நினைத்து செல்லும் இடங்களில் எல்லாம் புறக்கணிக்கபட்டு, அவமானப்பட்ட நிகழ்வை நினைத்தால் உண்மை நிலை தெரியும் உள்ளங்கை நெல்லிக்கனியாக. உயரே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. மிக சீரிய முறையில் இதை எழுதி பின்னூட்டத்திற்கு கருத்தும் சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...