29.5.15
காதல் என்ன சார் செய்யும்..?
உருக வைக்கும் உறைய வைக்கும்
உலகறிந்தது போல் உளர வைக்கும்.
ஏங்க வைக்கும் தூங்க வைக்கும்
எடுத்தெறிந்து பேச வைக்கும்.
மதர்க்க வைக்கும் மிதக்க வைக்கும்
மெல்லிசையை உணரவைக்கும்.
பெருக வைக்கும் அமுதம் பருகவைக்கும் -வெட்டிக்
கவிதைக்கு புதுப் புது பொருளை புரியவைக்கும்.
கவியெழுதி கதையெழுதி
கிறுக்கனாகி
காத்திருந்து வேர்த்திருந்து
காலந்தெரியா பித்தனாகி
உள்ளம் தொலைத்து உருமாறி
உறவின் அழுத்தத்தால் தடுமாறி
உங்களை கனியவைத்து
கைதியாய்ப் பணியவைக்கும் அந்தக் காதலியை...
காதலிச்சுப் பாருங்க சார்…
ஒரு மாறுதலுக்கு,
அன்புடன்,
வேதாந்தி.
உண்மையை மென்மையாக, மேன்மையாக, அழகாக மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகாதல் இன்னும் ஏதேதோகூட செய்யும் + செய்ய வைக்கும்.
//காதலிச்சுப் பாருங்க சார்… சும்மா அதிருமில்ல...//
ஹைய்யோ ...... மீண்டுமா? ...... போதுமடா சாமி :)
ரசித்தேன்...
ReplyDeleteகாதலின் இலக்கணம் அருமை நண்பரே!
ReplyDeleteகாதல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அதிருதே.
ReplyDelete#காதலிச்சுப் பாருங்க சார்…#
ReplyDeleteஅவரவர் வயசுக்கு தகுந்த மாதிரி காதலி மாறலாம் :)