15.5.15
ஒருவேளை இப்படியும் இருக்குமோ…?
ஒரு
கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு சிறுவன் தெருவில் வருவோர் போவோரையெல்லாம் கல்லால்
அடித்துக் கொண்டிருந்தானாம். மற்றவர்கள் படும் துன்பத்தையும் இது குறித்து வெறும் சபித்தலோடு
நின்றுவிடும் அவர்களின் இயலாமையையும் கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தானாம்.
அந்த
நேரத்தில் அவ்வழியே ஒரு துறவி வந்தாராம். சிறுவனும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய இயலாத
அகங்காரத்தோடு அவரையும் கல்லைக் கொண்டு அடித்தானாம். காயம் பட்ட துறவி, அந்தச் சிறுவனை
அன்போடு கூப்பிட்டு தன் கையில் இருந்த ஒரு பத்து உரூபாயை அவனிடம் கொடுத்து “ அப்பா,
நீ மிகுந்த நல்ல காரியம் செய்திருக்கிறாய் எனவே ஏதோ என்னால் முடிந்ததைத் தருகிறேன்.
ஆனால் இவ்வழியே காரில் போகின்ற தனவான்களை கல்லைக் கொண்டு அடித்தாயானால் உனக்கு பெரிய
வெகுமதி கிடைக்கும் என்றாராம். மிகுந்த கொண்டாட்டத்தோடு அந்தப் பணத்தை வாங்கிக் கொண்ட
சிறுவன் அடுத்து வந்த காரை நோக்கி பெரிய கல்லை விட்டெறிந்தானாம். அதற்குப் பின்னர்
என்ன நடந்திருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை.
இதைப்போலவே சில சமயோசிதவான்கள் பல சமயங்களில் நடந்து கொள்வதுண்டு. அவர்களது செயல் பைத்தியக் காரத்தனமாகத் தோன்றினாலும் அவர்களது நோக்கத்தை சரியாக முடித்துவிடும். இதை மிகுந்த புத்திசாலித்தனத்தோடு பார்த்தால்தான் தெரியும்.
சமீபத்தில்
பேசப்படும் சம்பவமும் இதைப்போல நடந்திருக்குமா என சந்தேகத்தைக் கிளப்புகிறது. சாதாரணமாகவே
ஒரு அரசுத்துறையில் வெளிவரும் ஆணையே பலமுறை சரிபார்த்தபின்னரே வருவதுண்டு அப்படி இருக்கையில்
உலகே (டிவிட்டரில் இந்த வழக்கின் தீர்ப்பு உலக அளவில் முதலிடத்தைப் பெற்றதாக பத்திரிக்கைச்
செய்தி..) எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான வழக்கில் இத்துனை வெளிப்படையாகத்
தெரியும் ஒரு சாதாரண எண்ணிக்கைத் தவறு நடந்திருப்பது சற்று சிந்திக்க வைக்கிறது.
மேலும்
இது குறித்த மேல் முறையீடுகளும் அரசியல் நோக்கம் பொறுத்தே அமைந்து விடும் வாய்ப்பு
இருப்பதனால் அதைத் தவிர்க்க, வலியவனே அடிக்கட்டும் என்ற நோக்கோடு, வழக்கை மேல் முறையீட்டிற்கு உட்படுத்த இந்தத் தவறு நடந்திருக்குமோ…?
வெளிப்படையாகவே
எண்ணிக்கைத் தவறு நடந்திருப்பதால் வழக்கின் மேல் முறையீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
எனவெ இந்தத் தவறு மிகவும் சமயோசிதமான ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. மேலும் அதன் நோக்கத்தை மிகச் சரியாக் நிறைவேற்றிவிட்டதாகத்தான் தெரிகிறது.
அதுமட்டுமல்ல
நமது நாட்டில் மிக நேர்மையாக தீர்ப்பு வழங்கிய மற்றவர்களுக்கு கிடைத்த விமரிசனங்களும்
மிரட்டல்களும் கூட அதைத் தவிர்ப்பதை இவருக்கு ஒரு கட்டாயமக்கியிருக்கலாம்.
வலியவன்
இருக்க எளியவன் ஏன் விமரிசனத்திற்குள்ளாக வேண்டும் என்று கூட இவர் நினைத்திருக்கலாம்…எப்படிப் பார்த்தாலும் வழக்கின் SITUATION ஐ யும் CONSEQUENCES ஐ யும் மிகத் தெளிவாகத்தான் JUDGE பண்ணியிருக்கிறார்…
இனி வலியவன் பாடு, வலுத்தவன் பாடு…
யாரோ அங்கே ‘பத்த வெச்சுட்டியே பரட்ட..” என குரல் கொடுப்பது கேட்கிறது.
மீண்டும்
பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.



It is really confusing ......
ReplyDeleteFour !
No, Three !!
நம் கண்களையே ஏமாற்றும் ... மிகவும் பொருத்தமான படத்தேர்வு :)
தங்கள் வரவிற்கு நன்றி சார்..!
Deleteபாம்பும் சாகணும்,குச்சியும் முறியக் கூடாது என்று சொல்வது இதைத் தானா :)
ReplyDeleteதுறவி நல்ல ஆலோசனை...!
ReplyDeleteஇப்படித்தான் இருக்குமோ...?
"வலியவன் இருக்க எளியவன் ஏன் விமரிசனத்திற்குள்ளாக வேண்டும் என்று கூட இவர் நினைத்திருக்கலாம்"
ReplyDeleteஅப்படியும் இருக்கலாம் நண்பரே.