Followers

Wednesday, September 29, 2010

முக்கிய தருணங்களில் முடிவெடுப்பது எப்படி?

29.9.10
முக்கிய தருணங்களில் முடிவெடுப்பது எப்படி?




முடிவெடுப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அது நமது வாழ்வின் பாதையை நிர்ணயிப்பது. சில முடிவுகள் நமது வாழ்வின் திசையையே மாற்றலாம். எனவே முடிவெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டவேண்டும். இது நான் இதுவரை பேசியதில் உள்ளபடி சூழல் சொல்லும் செய்திகளை அறிந்த பின் அதனை தனது வாழ்வில் பொருத்தி தனது முன்னேற்றத்திற்கு சூழல் சொல்லும் செய்திக்கேற்ப தனது நோக்கினை நிச்சயிக்கும் நிலைதான் இந்த முடிவேடுக்கும் நிலை.


பெரும்பாலான சமயங்களில், சூழல், ‘உண்டு அல்லது இல்லை’ என்ற தொனியில் ( Yes or No) முடிவெடுக்க நமக்கு சந்தர்ப்பங்களை அளிப்பது கிடையாது. உற்றுக் கவனித்தோமானால் சில இடைப்பட்ட நிலையில் முடிவேடுக்கும் விருப்பங்களும் ( Gray area choices ) மறைந்திருப்பது புரியும்.




முதலில் நாம் முடிவெடுத்தே ஆகவேண்டுமா என உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த முடிவெடுக்கும் உரிமை தன்னை மட்டும் சார்ந்ததா அல்லது மற்றவரையும் சார்ந்ததா என பார்க்க வேண்டும். மற்றவரையும் சார்ந்ததென்றால் மறுக்காமல் அவரது ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அவைகளையும் நமது முடிவேடுக்கும் வழிக் காரணிகளாக கொள்ளவேண்டும். முடிந்தால் முடிவெடுக்கும் உரிமை தன்னிடம் மட்டுமே இருந்தாலும் கூட  நமது முடிவால் பாதிக்கப் படக்கூடிய,  நமது  முடிவுகளின்  விளைவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை உணரக்கூடிய நம் நலம் விரும்பிகளின் கருத்துக்களையும் கொள்ள வேண்டும்.  இறுதியாய் சொன்ன இது முடிவெடுத்த பின்னராகக் கூட இருக்கலாம். இது ஏறக்குறைய தான் எடுத்த முடிவினை அலசும் நோக்கில் கூட இருக்கலாம். இந்தக் கருத்து அலசலின் போது ‘தான்’ என்ற நிலைப்பாடும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ‘மூடிய மனமும், ( closed mind ) இல்லாது இருத்தல் மிக முக்கியம்.  முடிவெடுத்தலின் போது தனக்குத் தெரியாமல் விட்டுப்போன காரணிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறியவே இந்த கருத்து அலசல்.


இந்தக் கருத்து அலசல்கள் ஒரு Loud discussion போல. இது நமது பார்வையை விரிவு படுத்தும். இதுமட்டுமல்லாது மற்றவரது கருத்துக்கு நமது முடிவெடுத்தலில் நாம் கொடுக்கும் இந்த அங்கீகாரமும, நமது ‘தான்’ என்ற அகந்தையற்ற  அனுகுமுறையும்  நமது மதிப்பை மற்றவர்களிடையே உயர்த்தி மற்றவரை நம்மீது மிகுந்த அன்பு கொள்ளச் செய்யும். மிக முக்கியமாக குடும்பச்சூழலில் இந்த முடிவெடுக்கும் முறை மிகுந்த நேர் மறை விளைவுகளை ஏற்படுத்தி குடும்ப உறுப்பினர்களிடையே நம் மீது மிகுந்த நம்பிக்கையை வளர்த்து, குடும்ப ஒற்றுமையை காப்பாற்றும். இது மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெளிவான முடிவெடுக்கும்முறை குறித்து ஒரு அனுபவத்தையும் உண்டாக்கி அவர்களை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ள தயார் படுத்தும்.


சரி. முடிவெடுப்பது எப்படி?




நான் ஏற்கனவெ பேசியபடி முடிவெடுத்தலில் சூழல் காட்டும் அல்லது சூழல் சொல்லும் செய்தியிலிருந்து நாம் பெற்ற வழிகளை ( options ) ஒரு வெள்ளைத் தாளில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். இதில்  Gray area choices ம் அடங்கும். பின்னர் ஒவ்வொரு வழியையும் ஒரு தனி வெள்ளைத்தாளில் எழுதி அதன் கீழே ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். இந்த அட்டவணை அந்தத் தாளில் சொல்லப்பட்ட வழியைத் தேர்ந்தெடுத்தோமானால் உண்டாகின்ற நேர் மறைப் பயன்கள், எதிர்மறைப் பயன்கள் மற்றும் சிறப்புப் பயன்கள் ஆகியவைகளைக் கொண்டதாய் இருக்க வேண்டும்.


இந்தப் பயன்கள் பொருளாதாரம் சார்ந்ததாகவோ அல்லது மனம் சார்ந்ததாகவோ இருக்கலாம். மேலும் இந்தப் பயன்கள் நேரிடையான பயன்களாகவோ அல்லது மறைமுகப் பயன்களாகவோ இருக்கலாம். இந்தப் பயன்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பொருத்து இவைகளை வரிசைப் படுத்தலாம். இன்னமும் சொல்லப் போனால் வரிசைப்படுத்திய இந்தப் பயன்களுக்கு நமது பயன் தேவைகளைப்  பொருத்து அவைகளுக்கு ஒரு ஊக மதிப்பும் - மதிப்பெண்ணும் - தரலாம். இது இன்னமும் தெளிவானதொன்று. பிறகு நாம் பட்டியலிட்ட வழிகளில் எந்த வழி மிகக் குறைவான எதிர்ப்பயன் கொண்டுள்ளதோ அல்லது எந்த வழி மிக அதிகமான நேர்ப்பயன் கொண்டுள்ளதோ அதனைத் தேர்ந்தேடுத்து நமது நலம் விரும்பிகளுடன் விவாதித்து முடிவு செய்யலாம்.


இத்தகைய முடிவெடுத்தல் மனதிற்கும் உறவுகளுக்கும் ஆரோக்கியமான ஒன்றாகும். மேலும் இத்தகைய முடிவெடுத்தல் நமது சிந்தனைத் தெளிவை வளர்த்து வாழ்க்கைச் சிக்கல்களை நாம் பார்க்கும் பார்வையை கூர்மையாக்கி நமது தன்னம்பிக்கையையும் உறுதியாக்கும்.

மேலும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Monday, September 27, 2010

பங்குச்சந்தையில் port folio வும் வாழ்க்கையில் வெற்றிக்கான நோக்கங்களும்

27.9.10

பங்குச்சந்தையில் port folio வும் வாழ்க்கையில் வெற்றிக்கான நோக்கங்களும்



காளைப் பிடியும் கரடிப் பிடியும் சந்தைக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் பொதுவானது.

மாற்றங்கள் மட்டுமே மாறாதது. இந்த மாற்றங்கள் ஏறுமுகமானதாகவோ அல்லது இறங்குமுகமானதாகவோ இருக்கலாம். மாற்றங்கள் சொல்லும் செய்தி தோல்வியல்ல மாறாக மாற்றங்கள் நமது வெற்றிக்கு வழிகாட்டும் காரணிகள்.  வாழ்க்கையின் மாற்றங்களோ அல்லது சந்தையின் மாற்றங்களோ ஒருவரை தன் முதன்மையான நோக்கை கைவிடச்செய்யலாகாது. வாழ்க்கையில் இந்த முதன்மையான நோக்கு வாழ்வது, சந்தையில் இந்த முதன்மையான நோக்கு செல்வம் பெருக்குவது. இதைப்பற்றி முன் பதிவுகளில் பேசியுள்ளேன்.


வாழ்வில் முதன்மையான நோக்காக வாழ்வது என்றிருக்கையில் வாழ்வில் வெற்றியடைவது நமது அடுத்த நெடு நோக்காக இருக்கவேண்டும் எனவும் பேசியிருந்தேன். இப்போது இந்த வெற்றிக்கான சூழல் மாற்றங்கள் குறித்தும் அது சொல்லும் செய்தி குறித்தும் பேசுவோம்.


நாம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நோக்கில் ( direction ) நமது வெற்றி குறித்த பிடிவாதத்துடன் இருக்கலாகாது. இது நமது சூழலைக் கருதாத ஒரு நிலை. மிகப் பெரும்பாலான சமயங்களில் இது - காற்றை எதிர்த்துச் செல்லும் பாய்மரக் கப்பலைப்போல நாம்  ஒரு வலுவான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கலாம். எனவே காற்றோடு சென்று கரையை அடைவது எளிதானது மட்டுமல்லாது புத்திசாலித்தனமானதும் கூட.


இது எப்படி?





காற்றுதான் நாம் செல்லும் வெற்றியின் திசையை நிர்ணயிக்கவேண்டும். அல்லது காற்று செல்லும் திசை, அதன் வேகம் ஆகியவைகள் சொல்லும் செய்திகளே நமது வெற்றியின் திக்கையும் அதை அடைய நமது இயக்கத்தினையும் நிர்ணயிக்கும் காரணிகளாய் இருக்க வேண்டும்.

சரி. பங்குச்சந்தையோடு நான் வாழ்வின் வெற்றிகளை ஒப்பிட்டிருப்பது சரியாகுமா?

ஆமாம். பங்குச்சந்தையில் நமது நோக்கம் செல்வம் சேர்ப்பது. ஆனால் அது ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியா அல்லது ONGC பங்குகளை வாங்கியா என்பது அல்ல. எதை வேண்டுமானாலும் - சந்தை சொல்லும் செய்தியைக் கொண்டு எதை வேண்டுமானாலும்- வாங்கி செல்வம் சேர்ப்பவனே காற்றின் திசையறிந்து பாய்மரம் விரித்து பயணம் செய்து கரையை அடைவதைப் போல வெற்றியைத் தொடுவான்.

இதையே பங்குச்சந்தை நிபுணர்கள் portfolio management என்று சொல்வார்கள்.

முதலீடுகளை small cap, Mid cap, Large cap, என்று மட்டுமல்லாது sector wise ஆராய்ந்து சந்தைச் சூழல் சொல்லும் செய்தியினை சரியாக அறிந்து அதன் படி தங்கள் முதலீட்டை மாற்றிக் கொள்வார்கள்.

சரி. சந்தையில் இப்படி. நம் வாழ்வில் நாம் என்ன செய்ய?

வாழ்வில் நமது முதன்மையான நோக்கு என்பது வாழ்வது. அடுத்த நோக்கு நமது வெற்றி. இவைகளை நிறைவேற்றும் போது எக்காரணம் கொண்டும் சமுதாய நோக்கிற்கோ அல்லது தனி மனிதனது ஒழுக்கத்திற்கோ மாறான செயல்களைச் செய்யாதிருப்பது.

சரி. Portfolio management எப்படி?


நாம் நமது குறிக்கோள்களாக வழக்கமாக எதை நிர்ணயிக்கிறோம்? டாக்டர் ஆவது அல்லது இஞ்சினியர் ஆவது. அல்லது இதைப்போல ஒன்று.


நாம் இத்தகைய நோக்குகளை நிர்ணயிக்கும் போது நான் ஏற்கனவே கூறியது போல இந்த நோக்குகள் நமது திறனுக்குட்பட்டதா என ஆராய்வதில்லை. இப்படி ஆராயாமல் கொள்ளும் நோக்கு ‘நான் அம்பானியாவேன்’ என்பதுபோல பொத்தாம் பொதுவில் ஒருவன் கொள்ளும் ஆசை. இது பல நேரங்களில் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். ஒருவரது மனத் தெளிவினை கெடுக்கலாம். ஒப்பிடும் போக்கை வளர்க்கலாம். ஆகவே இது தவறு. இது எப்படியென்றால், ‘நான் reliance company யின் 50% பங்குகளை வாங்குவேன்’ என தன் தகுதியறியாது நோக்கினை நிர்ணயித்துக் கொண்டு பங்குச்சந்தையில் எதிர்பார்ப்புடன் இறங்குபவரைப் போல. சந்தேகமின்றி இவருக்கு வாழ்வில் ஏமாற்றமே மிஞ்சும். இதை விட்டு சந்தை காட்டும் வழி சென்று தன் வாழ்விற்கு செல்வம் சேர்ப்பவனே வெற்றிக்கு வழிகோலுவான்.





வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் சந்தர்ப்பங்களை, காட்டும் மாற்றங்களை, சொல்லும் செய்திகளை சரியாக புரிந்துகொண்டு, சரியாக பயன்படுத்திக்கொண்டு அது காட்டும் வழியே நமது சிறு சிறு நோக்குகளை நிர்ணயித்தபடி  சந்தையின் செய்தியறிந்து தனது முதலீட்டை மாற்றிக் கொள்ளும் ஒரு கைதேர்ந்த சந்தை வல்லுனரைப்போல, காற்றடித்த திசையை பயன்படுத்திக் கொண்டு கரை சேரும் சிறந்த மாலுமியைப் போல  வாழ்வில் வெற்றியை வென்றெடுப்போம், சிறக்க வழ்வோம்.

சந்தை மாற்றங்கள் முதலீட்டிற்குச் செய்தி சொல்வது போல வாழ்வின் மாற்றங்கள் நாம் கொள்ள வேண்டிய குறிக்கோள்களுக்கு சொல்லும் செய்தியை அறிந்து வாழ்வில் மேன்மை கொள்வோம்.

வாழ்க்கையைப் பற்றி, வாழ்வதைப் பற்றி இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Friday, September 24, 2010

நம் உள்ளத் தேர்வுகளை இயற்கை அங்கீகரிக்கிறதா?

24.9.10
நம் உள்ளத் தேர்வுகளை இயற்கை அங்கீகரிக்கிறதா?





சென்ற பதிவில் இயற்கை தான் தகுதிகளை நிர்ணயிக்கின்றது என்றும் அதனை பூர்த்தி செய்யாத உயிரிகள் வீழ்ந்து மடிகின்றன என்றும் கண்டோம். இன்று சற்றே விளக்கமாக இது குறித்து பேசுவோம்.


பரிணாம விளையாட்டிற்கு நமது பங்கு குறித்தும், தகுதிகளை நிர்ணயிக்கும் புறச்சூழல் காரணிகள் குறித்தும் போன பதிவில் பேசினேன். இன்று புறக்காரணிகளோடு ஒரு அகக் காரணி பற்றியும் அது இந்த விளையாட்டில் வகிக்கும் பங்கு பற்றியும் பேசுவோம்.


வாழ்வதற்கான தகுதிகளை புறக்காரணிகள் எவ்வாறு நிர்ணயிக்கிறதென்பதை ஓருவாராக புரிந்து கொண்டிருப்பீர்கள். வாழும் உயிரி தன் துணையைத்தேடுவதிலும் பெரும்பாலும் புறக்காரணிகள் பங்கு வகித்தாலும் இங்கு அதில் அகக்காரணியின் பங்கு குறித்தும் அவை களின் தேர்வு புறக்காரணிகளால் அங்கீகரிக்கப்படுகின்றனவா என்றும் பேசுவோம்.





நாம் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். தற்சமயம் நமது நாட்டில் உள்ள நிலை குறித்துப் பேசினால் விளங்கும் என்பதால் இந்த உதாரணப்பேச்சு.


நமது நாட்டில் பெண்ணைப் பெற்றோர் சற்று முன்னிருந்த காலம் வரை தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையாகும் தகுதியாக நிர்ணயித்தது மாப்பிள்ளை ஒரு MNC யில்                                          மென்பொருள் ஆளுனராக இருக்கவேண்டுமென்பது. பெண்களும் தனக்கு வரக்கூடிய கணவன் மென்பொருள் துறையில் இருந்தால் நல்லது என எண்ணியிருந்தனர். இது ஒருவேளை அளவுக்கு மிகுந்த வருவாயை ஈட்டவேண்டும், வாழ்வில் வசதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தினால் இருக்கலாம்.


சற்று முன் காலம் வரை மேற்சொன்னபடி மென்பொருள் துறையினரை mate selection favour செய்தது. ஆனால் அதற்குப் பின் வந்த recession மற்றும் பணித் தொல்லைகள் இந்த தகுதித் தேர்வினை சற்றே நிதானிக்கச் செய்தது. பணித் தொல்லைகளில் பெரும் பாலான இணைகள் தங்கள் பிள்ளைப் பேறை தள்ளிப் போடவோ அல்லது பிள்ளைப் பேறு சார்ந்த குறைபாட்டை சந்திக்கவோ வேண்டியிருந்தது.  இந்த நிலையை மருத்துவர்கள் DINK syndrome  ( Double Income No Kids syndrome) என குறிப்பிடுகிறார்கள்.




இது தற்போது அதிகரித்துள்ளகுழந்தையின்மை குறைபாட்டைச் சரிசெய்யக் கூடிய fertility clinic குகளால் சாதாரணமான மனிதன் கூட அறிய வரலாம். இந்த clinic க்கிற்கு வருகை தருபவர்கள் பெரும்பாலும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மென்பொருள் துறை சார்ந்தவர்களே என்று கேள்வி. இந்த மருத்துவ சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைகள் சுமத்தும் பணச்சுமையை ஒரு சாதாரன மணிதனால் சமாளிக்க முடியாது.


அதை விடக் கொடுமை தற்போது தெரிய வந்துள்ள ஒரு உண்மை. பெரும்பாலான மென்பொருள் துறை சார்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும்பிள்ளைப் பேறு பிரச்சினைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பணிசார்ந்த ஒரு உடற்கோளாறு எனவும் பேசப்படுகிறது. ஒருவேளை கணினி முன் அமர்ந்து பகல் இரவு சுழற்சிக்கு எதிராக பணிசெய்வதால் இருக்கலாம். பெண்களுக்கு இது மிகப் பேரிய பாதிப்பை உண்டாக்குகிறது. ஹார்மோன் சுழற்சியை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதால் பிள்ளைப் பேறு மட்டுமன்றி மற்ற வாழ்வியல் பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க வேண்டி யிருக்கிறது.


நல்ல வசதியான படித்த இளமையான திருமணமான பெண்கள் தெருவில் விளையாடும் சாதாரண குழந்தைகளைப் பார்த்து ஏங்கிப்போய் நிற்பதை நானே பல முறை கண்டிருக்கிறேன்.



இது கொடுமையல்லவா? ஒரு தலைமுறையே தனது சந்ததியினை தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையல்லவா? இதுவரை தொடர்ந்து வந்த தங்களது உயிர் மூலக்கூறுகள்  இத்தோடு - இவர்களோடு  நின்றுவிடும் அபாயம் எத்துனைக் கொடுமை? பரிணாம வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு இல்லாதது மிகப் பெரிய இழப்பல்லவா? இதுவா வாழ்வில் வெற்றியென்பது? இதுவா உயிரின் நோக்கு?


இங்கு நமது அகக் காரணியின் தெரிவினை இயற்கை புறக்கணித்துவிட்டது கண்கூடு.


எனவே நாம் நமது தெரிவினைத் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்களாயிருந்தும் அதற்கும் மேலே இயற்கை இருப்பதால் அதன் அங்கீகாரம் தான் மிகப் பெரியது.


இயற்கைக்கு ஒப்ப நமது தெரிவினைத் தேர்ந்தெடுத்தோமானால் நமக்கு மகிழ்ச்சியுடன் வெற்றியும் கூடும் மேலும் வாழ்வில் வீணான குழப்பங்களும் - conflicts - இருக்காது.


மீண்டும் பேசுவோம்.


அன்பன்

வேதாந்தி.

Thursday, September 23, 2010

தகுதியானது பிழைத்து வாழும்.

23.9.10
தகுதியானது பிழைத்து வாழும்.


நன்கு கவனிக்கவும். எப்போதும் தகுதியானது தான் பிழைத்து வாழும். வலிமையானது அல்ல. சில சமயங்களில் வலிமை ஒரு தகுதியாக இருக்கலாம். எப்போதும் அல்ல - சில சமயங்களில் மட்டுமே.


இது இயற்கை நமக்குச் சொல்லும் செய்தி.


இந்தப்பதிவு நான் பேசிக்கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து சற்றே விலகி - அல்ல அல்ல - சற்றே zoom out செய்து ஒரு bird’s view போன்றதொரு பேச்சு. இது நாம் பேசிக்கொண்டிருக்கும் செய்திகளை தெளிவாக உணர வேண்டிகுறித்தே.


நான் முன் பதிவில் சொல்லியது போல் முறையுடன் வாழ்வது மட்டுமே நமது நோக்கு. வாழ்வது நமது நோக்கு மட்டுமல்ல இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் முதன்மையான நோக்கும் கூட.  எனவே தான் வாழ்வது முக்கியம்.


தகுதியானதுதான் பிழைத்து வாழுமென்றல் அந்தத் தகுதியை நிர்ணயிப்பது யார் அல்லது எது?


எப்போதுமே எல்லா உயிரிகளும் என்றைக்குமே ஒரு ஆளும் தகுதியில் இருக்கிறதில்லை. உயிரியல் தத்துவத்தின் படியும், biological pyramid  படியும் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்கள் அனைத்தையும் ஆளுமை கொள்ளும்படி படைக்கப் பட்ட ஒரு உயிரி. மற்ற உயிரினங்களை ஆளுமை செய்யும் மனிதன் தன் சூழலையும் ஆளுமை செய்யும்படி உள்ளான் என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால் பிற் சொன்னதில்  எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று பின்னர் பேசுவோம்.



 

எனவெ எல்லா உயிரினங்களும் தனது சூழல் காரணிகள் வாழும் தகுதியாக எதை நிர்ணயிக்கின்றதோ அவகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பிழைத்து வாழும். ஆக உயிரினங்கள் சூழலை நிர்ணயிப்பதில்லை மாறாக சூழல் மட்டுமே உயிரினங்களை, அதன் தகுதிகளை நிர்ணயிக்கின்றது.இங்கு நாம் பார்க்கவேண்டிய முக்கியமான கோட்பாடு சூழலே மற்றவைகளை ஆளுகிறது. இங்கு சொல்லப்பட்ட  சூழல் என்பது அகக் காரணிகளைத் தவிற மற்ற புறக்காரணிகள் அனைத்துமே.


ஆக சூழல் தான் வாழ்வெனும் விளையாட்டு விதிகளை நிர்ணயிக்கின்றது. இந்த விதிகளுக்கு உட்படாத உயிரிணங்கள் விளையாட்டிலிருந்து நீக்கப் படுகின்றன.


இந்த வாழ்க்கை விளையாட்டின் வெற்றிக்கோப்பை பரிணாம வளர்ச்சி என்பது. ஆம் ஒவ்வொரு உயிரியும் பரிணாம வளர்ச்சியில் பங்கு கொள்ள வாழ்ந்தே ஆக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உயிரியும் ஒரு தனித்தன்மை வாய்ந்த உயிர் மூலக்கூறுகளின் தொகுப்பைப் பெற்றிருக்கிறது. இந்த மூலக்கூறுகள் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் கட்டாயம் பங்கு கொள்ளவேண்டும்.

Every single individual life has a set of special genetic pack,  genetic combination that has to take part in the process of evolution – a force in the refinement of species towards better side.



  
நம் முன்னோர்களின் இந்தப் பங்களிப்பால் தான் முரட்டுக் குரங்கிலிருந்து  மௌவ்ஸ் பிடித்து கணினி இயக்கும் மனிதனாகி நிற்கிறோம். இது இன்னமும் தொடரும், தொடர வேண்டும் - நமது பங்களிப்பால்.


இந்தப் பங்களிப்பு ஒவ்வொரு உயிரியும் தனது துணையைத் தேடி அடைந்து தன் சந்ததியினை பெருக்கும் போது மட்டுமே நிறைவடைகிறது. இந்த உயிரிகள் வாழ முடியாது போனாலோ,  வாழ்ந்து தன் துணையைத் தேடி அடைய முடியாது போனாலோ, வாழ்ந்து தன் துணையைத்தேடி அடைந்தபின்னும் தன் சந்ததியைப் பெருக்க முடியாவிட்டாலோ தனது தனித்தன்மையான மூலக்கூறுகளை பரிணாம வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க முடியாத உயிரியாகி விடும். இது பரிணாம வளர்ச்சிக்கு பெரும் நட்டம்.

எனவெ ஒவ்வொரு உயிரியும் வாழ்ந்தாக வேண்டும். வாழவேண்டுமானால் சூழல் சொல்லும் செய்திகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.


கொசுவை ஒழிக்க மனிதன் DDT  மற்றும் பிற பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கத் தொடங்கியதும்  பூச்சிக் கொல்லிகளைத் தாக்குப் பிடித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற தகுதியை முன் வைத்த சூழலைப் புரிந்து கொண்ட கொசுக்கள்  பூச்சிக் கொல்லிகளுக்கு எதிர்ப்புச் சக்தியினை வளர்த்துக் கொண்டது.


எனவே நம்மை ஆளும் சூழல் சொல்லும் செய்திகளைப் புரிந்து கொள்வோம் வாழ்வோம் வெற்றிபெறுவோம்.


இது குறித்து இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.





Wednesday, September 22, 2010

பங்குச் சந்தையும் வாழ்க்கையும்


21.9.10
 பங்குச் சந்தையும் வாழ்க்கையும்



பங்குச்சந்தையில் BSE குறியீட்டு எண் இன்றைய வேளை 20000 த்தை தொட்டுவிட்டது. இழந்த இந்தக் குறியீட்டு எண்ணைத் தொட ஏறக்குறைய 32 மாதங்களாகிவிட்டன. இதற்குள் எத்துனை மனிதர்களின் வாழ்வில் எத்துனை மாற்றங்கள்…

பங்குச்சந்தையின் இறக்கத்தில் பதட்டத்துடன் சந்தையை விட்டு வெளியேறியவர்கள் எத்துனை பேர்… பங்குச்சந்தையில் இறங்கி வாழ்க்கையைத் தோலைத்துவிட்டதாக புலம்பியோர் எத்துனை பேர்…சந்தை் இறக்கத்தின் தாக்கத்தைத் தாளாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டோர் எத்துனை பேர்…

இந்த நிலையில்லாத் தன்மையிலும் சந்தையை விட்டு விலகாதோர் எத்துனை பேர்.. இவர்களை இழுத்துப் பிடித்தது இவர்களுக்கு  சந்தையின் மீதிருந்த நம்பிக்கையா அல்லது சந்தையைப் பற்றி தனக்குத் தெரிந்த சந்தை ஞானத்தின் மீதிருந்த நம்பிக்கையா?

எனது கருத்தில் இவர்களை இழுத்துப் பிடித்தது சந்தை இவர்களுக்குச் சொன்ன செய்திகளும் அந்தச் செய்திகளை இவர்கள் சரியாக புரிந்துகெண்டதும் தான்.

இந்தச் செய்தியை எனது முன் பதிவுகளுடன் சேர்த்துப் படிக்கவும்.






இப்போது நான் பேசப்போவது இந்த புத்திசாலிகள் பங்குச்சந்தை  சொன்ன செய்திகளை எப்படிப் புரிந்துகொண்டு தங்களது நோக்கங்களை (goals)  adapt செய்துகொண்டார்கள், சாதகமாக்கிக் கொண்டார்கள் என்பதுதான்.

எப்படி பங்குச்சந்தையில் நுழைவோரின் முதல் தெளிவான நோக்கு wealth creation , பிறகு wealth management டொ அதைப்போல வாழ்விலும் தெளிவான மாறாத நோக்குகள் உண்டு. அது - வாழ்வதுதான்.

வாழ்க்கையை வாழ்வதுதான் ஒருவனது மாறத நோக்காக இருக்க வேண்டும். வாழ்வில் வெற்றியடைவது அதற்கு அடுத்த நோக்காக இருக்க வேண்டும். மற்றெல்லாம் இந்த நோக்குகளுக்கு குறுக்கிடாதவாறும், சமுதாய நோக்கிற்கு மாறானதல்லாதாகவும் அவன் கொண்டிருக்க வேண்டும்.



எப்படி பங்குச் சந்தையில் பணம் பண்ண ஒருவனுக்கு பொறுமையும் சிந்தனைத் தெளிவும் அவசியமோ அதைப் போலவே வாழ்வில் வெற்றி பெறவும், வாழ்க்கை காட்டும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும்,  பொறுமையும் சிந்தனைத் தெளிவும் மிக மிக முக்கியம்.

பங்குச் சந்தையின் இறக்கம் தனது வெற்றிக்கு சொல்லும் செய்தியை அறந்துகொள்ளும் புத்திசாலியைப் போல வாழ்வில் தோல்விகள் தனது வெற்றிக்கு சொல்லும் செய்திகளை புரிந்துகொள்ள வேண்டும்.  இறக்கத்தின் போது சந்தையை விட்டு விலகும் முட்டாள் போல தோல்வியில் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணலாகாது.

சுருங்கச் சொன்னால், தெளிவான மனச்சிந்தனையோடு, எந்த சிந்தனைக் கொல்லிகளும் சிந்தனைத் தெளிவை சிதைக்காதவாறு நாம் வாழ்க்கைச்சூழலை உற்றுப் பார்த்தோமானால் நமக்கு சூழல் சொல்லும் செய்திகள் பிடிபடும். தொல்வியில் உள்ள வெற்றிக்கான வழிகள் வெளிப்படும்.   இ வைகளை எனது  முன் பதிவுகளில் விளக்கியுள்ளேன்.





 இந்தச் செய்திகளை முன் வைத்து தனது நெடும் நோக்கான வாழ்வில் வெற்றி பெறும் நோக்கினை அடைய அதன் பாதையில் சிறு சிறு நோக்குகளை இலக்காக வைத்து அவைகளை அடைவதன் மூலம் வாழ்வின் நெடு நோக்கான  வெற்றியை வென்றெடுக்க வேண்டும்.

வரும் பதிவுகளில் இந்தக் கோணத்தில் இன்னமும் பேசி அலசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

Friday, September 17, 2010

புறச்சூழல் ஒருவனை ஊக்கப்படுத்துமா அல்லது ஊணப்படுத்துமா?

17.9.10
புறச்சூழல் ஒருவனை ஊக்கப்படுத்துமா அல்லது ஊணப்படுத்துமா?


ஒருவன் பஞ்சு விற்கப் போனபோது காற்றடித்ததாம் அவனே உப்பு விற்கப் போனபோது மழை பெய்ததாம். இது ஒருவனது துர்பாக்கிய நிலையைக் குறிக்கச் சொல்லும் சொலவடை.

பஞ்சு விற்கும் போது மழை பெய்வது மட்டும் சாதகமான சூழலாவென்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததுண்டு.

இது நம்மில் இருக்கும் ஒரு குறைபாட்டைத்தான் காண்பிப்பதாக எனது எண்ணம்.


சூழல் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
இந்தப் படத்தில் மறைந்திருக்கும் செய்தி.....


மழையையும் காற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாதது ஒரு குறையல்ல மாறாக மழையையும் காற்றையும் நம்மால் பயன்படுத்தத் தோன்றாமல் போனதுதான் குறை. நாம் நமது அகச்சூழல் காரணிகளை முன்னர் பேசியபடி- முன் பதிவுகளில் கண்டதுபோல் -  சரியான முறைப்படி வைத்திருப்போமானால் புறச்சூழலை, புறக்காரணிகளைப் பற்றிய சரியான ஒரு பார்வை நமக்கு இருக்கும். எனவே வெற்றிச்சிந்தனையை உடைய ஒருவன்  புறக்காரணிகளை தன் வசப்படுத்துவான்.

இதன்படி புறக்காரணிகளை வசப்படுத்துவதெப்படி?

முதலில் சூழலும் அதன் காரணிகளும் நமக்கு, நமது வெற்றிக்கு எதிரானவை என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க வேண்டும். எத்தகைய சூழலும் நமது நண்பன் என்றும், நமது வெற்றி நம்மைவிட நாம் எதிர்கொள்ளும் சூழலுக்கு மிகத்தேவை என்றும் உணர வேண்டும்.

மிக முக்கியமாக சூழலும் அதன் காரணிகளும் நமக்கு, நமது வெற்றிக்கு வழிகாட்ட, இட்டுச்செல்ல, ஒரு செய்தியை வைத்திருக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும். நமது புலன்களை, அகக் காரணிகளை சூழல் சொல்லும் செய்தியை அறிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள ஏதுவாக மிகச்சரியாக நிலைப்படுத்தி கையாளவேண்டும்.


சூழல் நமக்கு எதிரானதா?


இனணகோடுகள் சாய் கோடுகளாக காட்சியளிக்கின்றது. இது உண்மையல்ல...


இது முதலில் சூழலின் மீது நமக்கிருக்கும் வெறுப்பை மாற்றி நம் சிந்தனையை சீர்படுத்தும். இந்த சீரான சிந்தனை, சூழல் காரணிகள் நமக்குக் காட்டும் வாய்ப்புகளை புரிந்துகொள்ள  நம்மை ஏதுவாக்கும். சில நேரங்களில் இந்த கடுமையான சூழல் காரணிகளே நம்மை சூறாவளியைப் போல் வெற்றிக்கு இழுத்துச் செல்லும். இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் நம்மைத் தவிர நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் நமது சூழலை எதிரியாக நினைத்து நமது வெற்றிக்கு எதிரான செயல்களைச் செய்யக்கூடாது.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமானால்-

வறுமை என்கிற சூழலானது சரியாகப் புரியப்படாமலிருந்தால் ஒருவனை சமுதாயத்திற்கு எதிராகத் தூண்டிவிடும். இது அவனை மிகக் கடுமையான பாதாளத்தில் தள்ளி மீள முடியாமல் செய்துவிடும்.

ஆனால் இதே வறுமை சரியாகப் புரியப்பட்டால் அது தன்னை உழைப்பதற்குத் தூண்டுவதும், தான் வெற்றியடைய வேண்டும் என்கின்ற செய்தியை தனக்குச் சொல்வதும் புரியும். இத்தகையோர் அடையும் வெற்றி அவரையும் உயர்த்தி அவரைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தும்.

ஹெலன் ஹெல்லரின் பார்வைக் குறைபாடு அவரை வெற்றியடைய வைத்ததோடல்லாமல் தன்னைப் போன்ற பார்வைக் குறைபாடுடையோரின் தேவைகளையும் சுட்டிக் காட்டவே பிரைய்லி முறை பிறந்து ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவியது.

சூழலை சரியாகப் புரிந்து கொள்வோம். சூழல் காரணிகள் நமக்குத்தரும் செய்திகளை சரியாக அறிந்து, வாய்ப்புக்களை கண்டறிவோம்.
வெற்றி பெருவோம். வாழ்வோம்.

அன்பன்
வேதாந்தி.

Wednesday, September 15, 2010

உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி


15.9.10
உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி



இது உறவாடிக் கெடுப்பதுபோல நம்மை உடனிருந்தே கொல்லும்.

நான் சினத்தைப் பற்றிச் சொல்லவில்லை. பொதுவாக சினத்தைத் தான் உடனிருந்து கொல்லும் என்பார்கள். ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நாம் சினத்தைக்கூட நமக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம்.

நான் இங்கு குறிப்பிடுவது அழுக்காறு என்னும் பொறாமையை.

பொறாமை என்பது மிக மோசமான ஒன்று.

இதுவரை நான் பேசியதைப் பார்த்தீர்களானால் நாம் வெற்றியடைவதென்பது நமது அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களின் மீது நாம் கொண்டுள்ள ஆளுமைத் திறன்தான் ( our manipulative ability of internal environmental – mind – factors / forces and external environmental factors / forces ) தீர்மானிக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள். இதற்கு மிகத் தெளிவான பார்வையும், தீர்மானங்களும் தேவை. இதற்கு மிகத் தெளிவான மனம் தேவை.


பெரும்பாலான எதிர்சக்திகள் நமது மனத் தெளிவைத்தான் குறிவைக்கின்றன. எப்படி மதுவானது நமது ‘ மூளையிலுள்ள மெடுல்லா ஆப்லாங்கேட்டா’ எனும் பகுதியினைத் தாக்கி நமது சமநிலைப்பாட்டைக் கெடுத்து தள்ளாட வைக்கிறதோ அதைப்போல நமது எதிர் சக்திகள் நமது மனத்தெளிவினைத் தாக்கி நமது மனப் பார்வையை (mental perception ) புரட்டிப் போடுகிறது. இந்தக் கோணலான மனப்பார்வை தான் நமது சூழல் காரணிகளைத் திரித்து நமது மனதை முறுக்கி ஆக்கிரமித்து சிந்தனைக் கேட்டினை விளைத்து நமது செயலாலேயே நம்மைக் கொன்று விடுகிறது.

இதற்கு நிறைய எடுத்துக் காட்டுகளைத் தரலாம். சிந்தனைக் கேட்டால் விளைந்த விளைவுதான் கோவலனின் படுகொலை.



இதைப்போலத்தான்  பொறாமையும் நமது மனப்பார்வையைக் கோணலாக்கி சிந்தனைக் கேட்டை விளைவிக்கிறது. நன்றாய் யோசித்துப் பாருங்கள். நம் மனதினை ஆராயும் பார்வை நமது பலம் மற்றும் பலவீனங்களைக் காட்டும். இது நமது பலத்தினை பலப்படுத்தவும் பலவீனங்களை குறைக்கவும் பயன்படும். இதை விட்டு அடுத்தவரை ஆராயும் பார்வை அடுத்தவரது பலம், பெருமை, அல்லது மற்றய குணாதிசயங்களை ஆராய்வதோடு மட்டுமல்லது அதை நம் குணாதிசயங்களோடு ஒப்பிடத்தூண்டி நம்முள் பொறாமைத் தீயை நெய் வார்த்து வளரக்கும். இது நம்மை வளர்ப்பதற்கு உதவாது. மாறாக காழ்ப்புணர்ச்சியை பெருக்கி அடுத்தவரை நமக்கு எதிரியாகக் காட்டி நம்மை அவர்மேல் ஏவிவிடும்.


இந்தப் பொறாமை உணர்வு நமது மனதை காகம் கொத்துவதைப் போல் கொத்தி தன் வசம் இழுத்துப்போடும் வரை ஓயாது.


நான் கண்ட ஒருவர் பல்கலைக் கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவந்தார். அவர் மகிழ்வுடன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. எப்போதுமே  மற்றவர்மேல் சுள்ளென்று விழுவார். இத்தனைக்கும் அவர் இளம் வயதிலேயே திருமணமாகி நிரந்தர வேலையோடு இருந்தார். ஆனால் தனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வின் சிறப்பை பார்க்க முடியாமல் அவரது இந்தப் பொறாமைக் குணம் அவரைக் குருடாக்கிவிட்டது. கடு கடு வென்றே இருப்பார். அடுத்தவர் கொள்ளும் சிறிய மகிழ்வுகூட அவரை மிகவும் பாதித்தது.  வெறும் எண்ணூறு உரூபாயில் தன் செலவுகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் மற்ற துன்பங்களுக்கிடையில் படித்துவந்த ஆய்வுப் படிப்பு மாணவர்களைக்  கூட கண்டு பொறாமைப் பட்டார். அவர்களுக்கு வரும் கடிதங்களை கிழித்து விடுவார். காசோலைகளை ஆள் இல்லையென்று திருப்பி அனுப்பிவிடுவார். இப்படி பல வழிகளில் அடுத்தவருக்கு வேதனைகளை கொடுத்து வந்தார். இந்தப் பொறாமை குணம் அவரைக் கொன்று கொண்டிருந்ததே தவிர மேம்படுத்தவில்லை.


மாறாக மற்றொருவர் இவரைப் போலவே அதே பல்கலைக் கழகத்தில் உதவியாளராக இருந்தவர் மற்ற ஆசிரியர்களின் உதவியோடு நூலகருக்கான பட்டப் படிப்பினை படித்து முடித்து அதே பல்கலைக் கழகத்தில் நூலகராக பதவி உயர்வு பெற்றார். இத்தனைக்கும் இவர் மாற்றுத் திறன் கொண்டவர். நூலகரானபின் அவருக்கு ஒரு நல்மனதுடையோரது உதவியால் திருமணமும் நடை பெற்றது. உடனே பல்கலைக் கழக மாணியக் குழுவால் பரிந்துரைக்கப் பட்ட ஊதியமும் கிடைத்தது.


நான் மேலே சொன்ன இரண்டுமே உண்மை நிகழ்வுகள்.


பல்கலைக் கழகத்திலேயே பணிபுரிந்தும் படிக்கத்தோன்றவில்லை முன்னவருக்கு ஆனால் மாற்றுத்திறனாளியாய் இருந்தும் இரண்டாமவரது தெளிவான சிந்தனை அவரை முன்னேற்றியது.

வாழ்வில் முன்னேற சிந்தனைத் தெளிவு மிக முக்கியம். அதற்கு பொறாமை போன்ற சிந்தனைக் கொல்லி உணர்வுகளுக்கு மனதில் இடமளிக்கக் கூடாது.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

Monday, September 13, 2010

கோபம் ஒருவனது பலமா அல்லது பலவீனமா?

13.9.10

கோபம் ஒருவனது பலமா அல்லது பலவீனமா?




தென் ஆப்பிரிக்கவில் காந்தியடிகளின் மீது நடந்த இனவெறித் தாக்குதலால் காந்தியடிகள் அடைந்த கோபமே அவரை மகாத்மாவாக்கிற்று மற்றும் இந்தியர்களான நமக்கு விடுதலையும் பெற்றுத் தந்தது.


இதைப்போலவே கோபப்பட்ட எல்லொராலும் சாதிக்கமுடியவில்லை. தம் மக்களுக்கு விடுதலை பெற்றுத தர இயலவில்லை. ஏன்? மாறாக சிலரது கோபம் மிகுந்த மோசமான பின்விளைவுகளில் முடிந்திருக்கிறது. இது
எப்படி?


கோபம் ஒரு எதிர்வினை. அகத்திலிருந்து புறப்படும் ஓரு மகா சக்தி. இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். இதனை அப்படியே வெளிப்படுத்தலோ அல்லது உள்ளடக்கிவைத்தலோ மிகக் கடுமையான பின் விளைவுகளை உண்டாக்கும்.

நாம் அகச்சூழல்களையும் புறச்சூழல்களையும் வெற்றிக்கு உரிய வகையில் கையாளுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கோபம் என்பது அகச்சூழலை பாதிக்கக் கூடியஒரு முக்கியமான காரணி.



கோபம் கொண்டவன் நிதானத்தை இழக்கிறான். கோபம் ஒருவனைக் குருடனாக்கி, சிந்தையை மறைத்து, கள் குடித்த குரங்காய் தன்னிலை மறக்கச்செய்து தன் வினைகளால் தனக்கு மிகுந்த எதிரிகளை உருவாக்குவதோடல்லாமல் தானே தனக்கு எதிரியாகி தன்னை அழிக்கும் எல்லாச் செயல்களையும் செய்துவிடும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

சற்று நிதானமாய் யோசித்துப் பாருங்கள். இத்தகைய மாபெரும் சக்தியினை தனக்குச் சாதகமாக செயலாற்றும்படிக்கு அதை வளைத்துப் போடுபவன் எத்துனை புத்திசாலி?அதைப் பற்றித்தான் இன்றைய பேச்சு.

கோபத்தினை அடக்கிவைப்பது அதனை வெளிப்படுத்துவதைவிட பெரும் ஆபத்து. அது ஒருவனது மனதை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும்.

பின் என்னதான் வழி?

ஒன்று கோபப்படுவதை விட்டுவிடவேண்டும். அதாவது கோபத்தை உணரவே கூடாது. அல்லது இந்த மகா சக்தியை நம்மை நல்வழிநடத்தும்படிக்கு நாம் அதனை மாற்றிக் கொள்ளவேண்டும்.

இது எப்படி?

கோபம் முதலில் சிதைப்பது நம் நிதானத்தை. நாம் நம் நிதானத்தை கோபம் ஆள்வதைத் தடுத்து நிதானத்தால் கோபத்தை ஆளவேண்டும். ஆமாம். ஒருவன் கோபப்படும்போதுதான் மிகுந்த நிதானத்தோடு சிந்திக்க வேண்டும். தன் சூழலை கூர்மையாக ஆராய வேண்டும்.



எதைக்கண்டு கோபம் கொண்டோமோ அதை வெல்ல இந்தக் கோபத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கோபம் என்கின்ற பெருந்தீயை அப்படியே வெளிவிடாமல் தனது நோக்கினை வெல்ல தன்னை உந்தும் ஒரு சக்தியாக, motivational factor to achieve one’s goal ஆக மாற்றிக்கொள்ளவேண்டும்.இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பெற்ற அடியின் கோபமே அதனை உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக்கியது.



எனவே சரியாகப் பயன்படுத்தப்படும் கோபமே ஒரு ஆக்க சக்தியாக மாறி எல்லொருக்கும் பயன்படும். இதுவே ஒருவனுக்கு பெரும் பலம்.

மாறாக சரியாக பயன்படுத்தாத - ஆற்றுப்படுத்தாத- தன் சிந்தனையைத் தூண்டி தன் வெற்றிக்கோ அல்லது தன் சமுதாயத்தின் வெற்றிக்கோ ஒருவனைப் பாடுபடத் தூண்டாத கோபம் - தன் நிதானத்தினை கொன்று வெறியேற்றி தன்சிந்தனையை மதம் பிடிக்கச் செய்யும் கோபம், மிகுந்த பலம் கொண்ட சாத்தானைப் பொன்றது. இத்தகைய கோபம் ஒருதனிமனிதனின் பலவீனம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே கீழே தள்ளி அழிக்கச் செய்யும் தீய சக்தியும் கூட. ஹிட்லரின் ஆற்றுப் படுத்தாத கோபமே அவரையும் அழித்து, அவரது இனத்தார்க்கும் தீராப் பழியை உண்டாக்கியது.



இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Thursday, September 9, 2010

சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்துமா?

9.9.10


சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்துமா?







சமுதாயம் என்பது ஒரு system. It is an aggregate of sub systems to prevent chaos and to protect its fundamental elements.


இப்போது நான் முன்னே- முன் பதிவுகளில்- சொன்னதை சற்று நினைவு கூறுங்கள். ஒரு மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின் தனக்கென ஒரு நோக்கினை (individual goal) வரையறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை அடைய வழிமுறைகள் பற்றியும் சரியான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த நோக்கும் அதனை அடைய அவன் கொள்ளும் வழிமுறைகளும் சமுதாயத்திற்கோ அல்லது பொது சமுதாய நோக்கிற்கோ (community goal) எதிரானதாக இருக்கக் கூடாது.



இந்த நோக்கு தன்னால் அடைய முடியும் படியாக இருக்க வேண்டும். அதாவது, இந்த நோக்கு, தன் திறமைகளுக்குச் சரியானபடியாக இருத்தல் மிக மிக முக்கியமானதாகும். ( தங்கள் கவனத்திற்கு எனது பதிவு. அனைத்திற்கும்ஆசைப்படலாமா?)

அல்லது தன் திறமைகளை தனது நோக்கிற்கு தகுந்தபடி மேம்படுத்திக் கொள்ளல் அவசியம்.


இங்கு நான் ஒரு தனி மனிதனின் நோக்கு சமுதாயத்தின் நோக்கோடு கலந்திருக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடுவது அவனது தனி நோக்கினை பலப்படுத்தவே வேண்டியல்லாது அவனை சுயநலவாதியாக்க அல்ல. ஒவ்வொரு மனிதனும், தலைவனல்லாத ஒவ்வொரு மனிதனும், சிறந்த சிந்தனைகளோடு தனது தனிப்பட்ட நோக்கினை பலப்படுத்தி உயரும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் உயரும்.


எனவே ஒரு மனிதன் தன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்.



சில நேரங்களில் தனி மனிதனது ஒத்துழைப்பு ஒரு சமுதாயத்திற்கு- சமுதாய நோக்கிற்கு- அவசியம் தேவைப்படும். உதாரணமாக பேரழிவு ஏற்படும் சமயங்களில் நிச்சயமாக ஒரு மனிதன் தனது தனி நோக்கினை pause or compromise or sacrifice செய்தேயாக வேண்டும். அப்போது மிகத் தேவையான சமுதாய நோக்கினைத் தான் கொள்ளவேண்டும். அது தனது சமுதாயத்தினையும் உயர்த்தி தன்னையும் உயர்த்தும். ஜப்பானில் அனுகுண்டு வெடிப்பிற்குப் பின்னர் இதுதான் நடந்தது.



எல்லா நேரங்களிலும் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானதாகும். இந்த தனிமனித ஒழுக்கமானது தன்னையும் உயர்த்தி சமுதாயத்தினையும் உயர்த்தும். தனது நோக்கினை அடைய எக்காரணம் கொண்டும் தனி மனித ஒழுக்கத்தினை மீறலாகாது. இது மிக முக்கியம். தனிமனித ஒழுக்கம் இருந்தாலே மிகப்பெரிய சமுதாயச் சீர்கேடான ஊழல் ஒழிந்துவிடும். இதுவே நம் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு மிகப் பெரிய விடுதலையாய் அமையும்.




ஒரு செங்கல்லிற்கு சுவர் பலமல்ல மாறாக பலமான செங்கற்களே சுவருக்கு பலம் தருகிறது. அதைப் போல நிச்சயமாக சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்தாது. ஆனால் பல சிறந்த தனி மனிதர்கள் ஒரு சமுதாயத்தினை உயர்த்த முடியும்.



ஆகவே தான் ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் அதன் மேம்பாட்டின் சிறப்பைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.



இன்னமும் பேசுவோம்.



வேதாந்தி




Monday, September 6, 2010

ஒரு தலைவனைத் தொடரலாமா?

6.9.10

ஒரு தலைவனைத் தொடரலாமா?


வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 3








ஒருவரை முன் மாதிரியாகக் கொள்ளலாம். ஆனால் அவரை அப்படியே பின் தொடரலாமா?


ஒரு தலைவனைப் பின் தொடர்தல் நல்லதா என்பது குறித்துப் பேசுவோம்.

நாம் பேசிக்கொண்டிருப்பது நமது தொல்விகளை வெற்றிகளாக்குவது பற்றியும் மற்றும் நமது வெற்றிகளை நிரந்தர வெற்றிகளாக்குவது பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் மிக முக்கியமான இரண்டு சூழல்கள் பற்றியும் அதன் காரணிகளைப் பற்றியும் மிகத்தெளிவாக நாம் அறிந்திருக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுக பேசிக்கொண்டிருக்கிறோம்.

சூழல்கள் இரண்டு. ஒன்று அகச்சூழல். மற்றொன்று புறச்சூழல்.

இதுவரை வந்த பேச்சுக்களில் அகச்சூழல் மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பேசினோம். இப்போதும் அதையேதான் தொடர்கிறொம்.

சென்ற பதிவில் பணிக் குழுமத்தின் நோக்கங்கள் ( corporate goals) மற்றும் சமுதாய நோக்கங்கள் ( community goals) மற்றும் நமது தனிப்பட்ட நோக்கு (individual goal) ஆகியவற்றைப் பற்றி பேசினோம்.


சமுதாய நோக்கங்கள் மற்றும் குழுமத்தின் நோக்கங்கள் நமது நோக்கங்களை பாதிக்கக் கூடாது என்றும் முன் பதிவில் பார்த்தோம்.

சிலர் குழுமத்தின் நோக்கோடு தனது நோக்கினையும் இணைத்துக் கொள்வதும் நடக்கிறது. இது சில நேரங்களில் இவர்களது தனி நோக்கினை குழு நோக்கிற்காக தியாகம் செய்யும் அளவிற்கு இவர்களை குழுமம் சார்ந்தவர்களாக மாற்றிவிடும். இந்த விளைவு குழுமத்திற்கு மிகவும் உயர்ந்தது. இது கருதித்தான்- இதை நோக்கித்தான் - இன்னமும் பெருமளவு குழுமங்களில் தங்களது குழுமங்களின் பங்குகளை ஊக்கப் பங்குகளாக தரும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான குழும நிறுவனர்கள் (corporate founders) குழும நோக்கும் தனது நோக்கும் ஒன்றாகவே கொண்டிருப்பர்.


இங்கு ஒரு தலைவனைப் பின் தொடர்தல் குறித்துப் பார்ப்போம்.


தலைவன் என்பவன் தனது குறிகோள் குறித்து ஒரு தெளிவான சிந்தனை கொண்டவன். குறிக்கோள் தெளிவானதென்றால் அதை அடைவதற்கான பாதை குறித்தும் அவனுக்கு ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். ஆக நாம் தொடர்பவர் அல்லது தொடரும்படி நம்மை ஈர்ப்பவர் மிகுந்த தெளிவானவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனவே இவரைத் தொடர்தல்  குறித்து இரு மடங்கு நாம் தெளிவாக இருக்கவேண்டும்.





நாம் அவரைத் தொடரலாமா வேண்டாமா என்பது தான் இப்போது நாம் நிர்ணயிக்க வேண்டியது. இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒருவரது infatuation or influence நமது சிந்தனையை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கக் கூடியது.இதில் நமக்குத் தெளிவில்லாததனாலேயே தீக்குளிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. இது நமது நாட்டில் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு கொடுமையான நிகழ்வு.


நான் ஏற்கனவே கூறியதுபோல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கு அல்லது குழுமத்தின் நோக்கினை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவனது தனி மனித உயர்விற்கு உகந்ததாகும். இங்கு நான் ஒருவன் சுயநலவதியாக இருப்பதைச் சொல்லவில்லை. தன்னைச் சீர்படுத்திக்கொள்வதென்பது மிகவும் முதன்மையானது. இது அவனது சிந்தனையை தெளிவாக்கும். இத்தகைய ஒருவனே சமுதாயத்தைக் குறித்தும் சரியான பார்வையினைக் கொண்டிருப்பான்.இது குறித்து பின்னர் பேசுவோம்.

மேலே சொன்னது போலல்லாமல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கினையும் கலந்து கொண்டிருந்தானால்அவன் தனது சமுதாய நோக்குப் போர்வையில் சுய முன்னேற்றத்திற்கான வழி வகுத்துக் கொண்டுள்ள கபட வேடதாரி. அவனை தொடர்வது மிகவும் ஆபத்தானது.


இப்படி அல்லாது சமுதாய நோக்கே தனது நோக்காக கொண்டுள்ள நபர்களே தலைமை தாங்கும் தகுதியுடையவராகின்றனர். அவர்க்கென ஒரு தனி நோக்கும் அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்காது.இதற்கு உதாரணமாக ராணுவத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தனி நோக்கு கிடையாது. வெறும் சமுதாய நோக்கு மட்டும் தான். அதே போல் சில தலைவர்கள் தங்களது குடும்பத்தினை கருதாது பொதுநோக்கு மட்டும் கருதியே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர். சிலர் தமது வெற்றியை, நோக்கை, சமுதாயத்திற்கே அர்ப்பணிக்கும் வகையில் பெரிதாய்க் கொள்கின்றனர். நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களை இதற்கு உதாரணமாய்க் காட்டலாம்.




சில நேரங்களில் சமுதாய நோக்கினை மட்டுமே தமது நோக்காக கொண்டிருக்கும் தலைவர்கள் தமக்குப் பிடித்திருந்தாலுமஅவர்களை அப்படியே தொடராமல் , தமது சிந்தனையால் அந்த நோக்கினை மேலும் சிறப்பாக்கி தனக்கென தனி வழி கொண்டவர்களும் உண்டு. பெரியார் - அண்ணா மற்றும் காந்தி - நேதாஜி போன்றொரை இதற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.

எனவே தெளிவான சிந்தனை கொண்டவர்களே தொடர்தலில் சிறப்பான முடிவெடுக்க முடியும்.


தெளிவான சிந்தனை தனி மனித வெற்றிகளுக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் சிறப்பான வெற்றிகளுக்கும் மிக முக்கியமானதாகிறது.


இன்னமும் பேசுவோம், சிந்திப்போம்.


அன்பன்

வேதாந்தி.

Thursday, September 2, 2010

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?

2.9.10

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?










அனைத்திற்கும் ஆசைப்படலாமா? அனைத்தையும் ரசிக்கலாம் ஆனால் அனைத்திற்கும் ஆசைப்படலாமா?


இது வரை நாம் கண்டது போக இப்போது நாம் பார்க்கப்போவது வெற்றியின் அல்லது வெற்றி என்ற உணர்வின் மற்றொரு காரணி. அது நமது நோக்கம் அல்லது குறிக்கோள் (goal) ஆகும். நமது குறிக்கோள் என்பது நமது ஆசை எனவும் கொள்ளலாம். பொதுவாக மனிதனின் குறிக்கோள் என்பது தனது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதுதான்.


நாம் நமது நோக்கம் அல்லது குறிக்கோள் அல்லது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளும் போது நமக்கு வெற்றி பெற்ற உணர்வு கிடைக்கிறது. அல்லது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த உணர்வுகள் மிக முக்கியமானவைகள். தொடர்ந்த ஏமாற்றங்கள் ஒருவனது ஆளுமைத்தண்மையை பாதிப்பிற்குள்ளாக்கும்.


இன்னொரு செய்தி. நமது acheivements and aspirations சரியான நிலையில் இருக்கவேண்டும். Aspirations  ability  ஐ விட அதிகமான நிலையில் இருந்தால் achievements level குறைந்து விடும். அதாவது நமது ஆசையின் எல்லை நமது திறமை (அ) தகுதிக்கு மேல் இருந்தால் நம்மால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இது தோல்வி மனப்பான்மையை உருவாக்கி விடும். Aspirations achievements level ஐ விட குறைவாக இருந்தாலும் frustrations அதிகமாகிவிடும். எனவே ability – aspirations – achievements ஆகியன ஒன்றிர்க்கொன்று சம நிலையில் இருக்கவேண்டும்.









இப்போது நான் முன்னே சொன்னவைகளை நினைவு கூறுங்கள். அனவரும் அனைத்திற்கும் ஆசைப்படுவது சரியாகுமா? Ability க்குத் தகுந்த aspirations இல்லாவிட்டால் அது imbalance ல் முடியும். அது ஆரொக்கியமான மன நிலைக்கு உகந்ததல்ல. ஆனால் அனைவரும் அனைத்தையும் ரசிக்க வேண்டும். இது சரியான மனநிலை. சரியான goal setting இருந்தால் தான் ஒருவன் வெற்றியைத் தேடமுடியும். அனைத்திற்கும் ஆசைப்பட்டால் failures and frustrations தவிர்க்க முடியாததாகிவிடும்.


அது சரி அப்போது அனைத்திற்கும் ஆசைப்படுவது எப்போது சரி, யாருக்கு சரி?


அனைத்திற்கும் ஆசைப்படுவது ஒரு corporate mentality . Corporate aspirations. ஒரு corporate தனது aspirations – அதாவது goal ஐ அடைய வேண்டுமானால், தனது corporate elements ஆன individuals அனைவரையும் தன் level க்கு கொண்டு போய் முறுக்கிப் பிழிந்து தனது goal ஐ நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.இதை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு MBA க்களும் தயார் படுத்தப் படுகிறர்கள்.


தயை செய்து இங்கு கவனியுங்கள். Corporate கள் தனி மனிதனின் நிலைப்பாடுகளிலோ அல்லது தனி மனிதனின் மனநிலை வித்தியாசங்களையோ பொருட்படுத்துவதில்லை.அவனது மகிழ்ச்சியைக்கூட கண்டு கொள்வதில்லை. தனி மனிதனின் வெற்றி உணர்வுகளைக் கூட மதிப்பதில்லை. எனவே தான் அங்கு team spirit, or team sense ஐ மிகவும் வற்புறுத்துகின்றனர்.


ஆக ஒரு தனி மனிதனின் நோக்கும்( individual goal ), ஒரு குழுமத்தின் நோக்கும் ( corporate goal ), இதற்கும் மேல் ஒரு சமுதாயத்தின் நோக்கும் (community goal) வித்தியாசப் படுகின்றன. சமுதாயத்தின் நோக்குகளை நிறைவேற்றவும் சில MBA ட்ரிக்குகள் உண்டு. நினைத்துப் பாருங்கள். ஒருவன் ஊருக்குளே துப்பாக்கியைத் தூக்கினால் கொலைகாரன். அதையே ஒரு நாட்டின் எல்லையில் தூக்கினால் அவன் தியாகி. இது community goalreinforce செய்யும் ஒரு தந்திரம்.


நாம் இதையெல்லாம் தவிர்த்து தனிமனிதனின் நோக்கு,  தனிமனிதனின் சிறந்த நிலைப்பாட்டிற்கான வழிகள் ஆகியவை குறித்துத் தான் பேசப் போகிறோம். Corporate goal, community goal ஆகியவைகளில் சிக்காமல் இருந்தால் தான் நமது சூழலையும் அதைத் தொடர்ந்து வெற்றியையும் ஆளமுடியும்.



இதில் வரையரை செய்தவைகள்: aspirations, setting goal and achievements and their importance in well being of an individual.

மீண்டும் பேசுவோம்.

வேதாந்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...