Followers

Wednesday, September 22, 2010

பங்குச் சந்தையும் வாழ்க்கையும்


21.9.10
 பங்குச் சந்தையும் வாழ்க்கையும்



பங்குச்சந்தையில் BSE குறியீட்டு எண் இன்றைய வேளை 20000 த்தை தொட்டுவிட்டது. இழந்த இந்தக் குறியீட்டு எண்ணைத் தொட ஏறக்குறைய 32 மாதங்களாகிவிட்டன. இதற்குள் எத்துனை மனிதர்களின் வாழ்வில் எத்துனை மாற்றங்கள்…

பங்குச்சந்தையின் இறக்கத்தில் பதட்டத்துடன் சந்தையை விட்டு வெளியேறியவர்கள் எத்துனை பேர்… பங்குச்சந்தையில் இறங்கி வாழ்க்கையைத் தோலைத்துவிட்டதாக புலம்பியோர் எத்துனை பேர்…சந்தை் இறக்கத்தின் தாக்கத்தைத் தாளாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டோர் எத்துனை பேர்…

இந்த நிலையில்லாத் தன்மையிலும் சந்தையை விட்டு விலகாதோர் எத்துனை பேர்.. இவர்களை இழுத்துப் பிடித்தது இவர்களுக்கு  சந்தையின் மீதிருந்த நம்பிக்கையா அல்லது சந்தையைப் பற்றி தனக்குத் தெரிந்த சந்தை ஞானத்தின் மீதிருந்த நம்பிக்கையா?

எனது கருத்தில் இவர்களை இழுத்துப் பிடித்தது சந்தை இவர்களுக்குச் சொன்ன செய்திகளும் அந்தச் செய்திகளை இவர்கள் சரியாக புரிந்துகெண்டதும் தான்.

இந்தச் செய்தியை எனது முன் பதிவுகளுடன் சேர்த்துப் படிக்கவும்.






இப்போது நான் பேசப்போவது இந்த புத்திசாலிகள் பங்குச்சந்தை  சொன்ன செய்திகளை எப்படிப் புரிந்துகொண்டு தங்களது நோக்கங்களை (goals)  adapt செய்துகொண்டார்கள், சாதகமாக்கிக் கொண்டார்கள் என்பதுதான்.

எப்படி பங்குச்சந்தையில் நுழைவோரின் முதல் தெளிவான நோக்கு wealth creation , பிறகு wealth management டொ அதைப்போல வாழ்விலும் தெளிவான மாறாத நோக்குகள் உண்டு. அது - வாழ்வதுதான்.

வாழ்க்கையை வாழ்வதுதான் ஒருவனது மாறத நோக்காக இருக்க வேண்டும். வாழ்வில் வெற்றியடைவது அதற்கு அடுத்த நோக்காக இருக்க வேண்டும். மற்றெல்லாம் இந்த நோக்குகளுக்கு குறுக்கிடாதவாறும், சமுதாய நோக்கிற்கு மாறானதல்லாதாகவும் அவன் கொண்டிருக்க வேண்டும்.



எப்படி பங்குச் சந்தையில் பணம் பண்ண ஒருவனுக்கு பொறுமையும் சிந்தனைத் தெளிவும் அவசியமோ அதைப் போலவே வாழ்வில் வெற்றி பெறவும், வாழ்க்கை காட்டும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும்,  பொறுமையும் சிந்தனைத் தெளிவும் மிக மிக முக்கியம்.

பங்குச் சந்தையின் இறக்கம் தனது வெற்றிக்கு சொல்லும் செய்தியை அறந்துகொள்ளும் புத்திசாலியைப் போல வாழ்வில் தோல்விகள் தனது வெற்றிக்கு சொல்லும் செய்திகளை புரிந்துகொள்ள வேண்டும்.  இறக்கத்தின் போது சந்தையை விட்டு விலகும் முட்டாள் போல தோல்வியில் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணலாகாது.

சுருங்கச் சொன்னால், தெளிவான மனச்சிந்தனையோடு, எந்த சிந்தனைக் கொல்லிகளும் சிந்தனைத் தெளிவை சிதைக்காதவாறு நாம் வாழ்க்கைச்சூழலை உற்றுப் பார்த்தோமானால் நமக்கு சூழல் சொல்லும் செய்திகள் பிடிபடும். தொல்வியில் உள்ள வெற்றிக்கான வழிகள் வெளிப்படும்.   இ வைகளை எனது  முன் பதிவுகளில் விளக்கியுள்ளேன்.





 இந்தச் செய்திகளை முன் வைத்து தனது நெடும் நோக்கான வாழ்வில் வெற்றி பெறும் நோக்கினை அடைய அதன் பாதையில் சிறு சிறு நோக்குகளை இலக்காக வைத்து அவைகளை அடைவதன் மூலம் வாழ்வின் நெடு நோக்கான  வெற்றியை வென்றெடுக்க வேண்டும்.

வரும் பதிவுகளில் இந்தக் கோணத்தில் இன்னமும் பேசி அலசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...