Followers

Thursday, September 9, 2010

சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்துமா?

9.9.10


சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்துமா?







சமுதாயம் என்பது ஒரு system. It is an aggregate of sub systems to prevent chaos and to protect its fundamental elements.


இப்போது நான் முன்னே- முன் பதிவுகளில்- சொன்னதை சற்று நினைவு கூறுங்கள். ஒரு மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின் தனக்கென ஒரு நோக்கினை (individual goal) வரையறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை அடைய வழிமுறைகள் பற்றியும் சரியான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த நோக்கும் அதனை அடைய அவன் கொள்ளும் வழிமுறைகளும் சமுதாயத்திற்கோ அல்லது பொது சமுதாய நோக்கிற்கோ (community goal) எதிரானதாக இருக்கக் கூடாது.



இந்த நோக்கு தன்னால் அடைய முடியும் படியாக இருக்க வேண்டும். அதாவது, இந்த நோக்கு, தன் திறமைகளுக்குச் சரியானபடியாக இருத்தல் மிக மிக முக்கியமானதாகும். ( தங்கள் கவனத்திற்கு எனது பதிவு. அனைத்திற்கும்ஆசைப்படலாமா?)

அல்லது தன் திறமைகளை தனது நோக்கிற்கு தகுந்தபடி மேம்படுத்திக் கொள்ளல் அவசியம்.


இங்கு நான் ஒரு தனி மனிதனின் நோக்கு சமுதாயத்தின் நோக்கோடு கலந்திருக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடுவது அவனது தனி நோக்கினை பலப்படுத்தவே வேண்டியல்லாது அவனை சுயநலவாதியாக்க அல்ல. ஒவ்வொரு மனிதனும், தலைவனல்லாத ஒவ்வொரு மனிதனும், சிறந்த சிந்தனைகளோடு தனது தனிப்பட்ட நோக்கினை பலப்படுத்தி உயரும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் உயரும்.


எனவே ஒரு மனிதன் தன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்.



சில நேரங்களில் தனி மனிதனது ஒத்துழைப்பு ஒரு சமுதாயத்திற்கு- சமுதாய நோக்கிற்கு- அவசியம் தேவைப்படும். உதாரணமாக பேரழிவு ஏற்படும் சமயங்களில் நிச்சயமாக ஒரு மனிதன் தனது தனி நோக்கினை pause or compromise or sacrifice செய்தேயாக வேண்டும். அப்போது மிகத் தேவையான சமுதாய நோக்கினைத் தான் கொள்ளவேண்டும். அது தனது சமுதாயத்தினையும் உயர்த்தி தன்னையும் உயர்த்தும். ஜப்பானில் அனுகுண்டு வெடிப்பிற்குப் பின்னர் இதுதான் நடந்தது.



எல்லா நேரங்களிலும் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானதாகும். இந்த தனிமனித ஒழுக்கமானது தன்னையும் உயர்த்தி சமுதாயத்தினையும் உயர்த்தும். தனது நோக்கினை அடைய எக்காரணம் கொண்டும் தனி மனித ஒழுக்கத்தினை மீறலாகாது. இது மிக முக்கியம். தனிமனித ஒழுக்கம் இருந்தாலே மிகப்பெரிய சமுதாயச் சீர்கேடான ஊழல் ஒழிந்துவிடும். இதுவே நம் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு மிகப் பெரிய விடுதலையாய் அமையும்.




ஒரு செங்கல்லிற்கு சுவர் பலமல்ல மாறாக பலமான செங்கற்களே சுவருக்கு பலம் தருகிறது. அதைப் போல நிச்சயமாக சமுதாயம் ஒரு தனி மனிதனை உயர்த்தாது. ஆனால் பல சிறந்த தனி மனிதர்கள் ஒரு சமுதாயத்தினை உயர்த்த முடியும்.



ஆகவே தான் ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் அதன் மேம்பாட்டின் சிறப்பைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.



இன்னமும் பேசுவோம்.



வேதாந்தி




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...