24.9.10
நம் உள்ளத் தேர்வுகளை இயற்கை அங்கீகரிக்கிறதா?
சென்ற பதிவில் இயற்கை தான் தகுதிகளை நிர்ணயிக்கின்றது என்றும் அதனை பூர்த்தி செய்யாத உயிரிகள் வீழ்ந்து மடிகின்றன என்றும் கண்டோம். இன்று சற்றே விளக்கமாக இது குறித்து பேசுவோம்.
பரிணாம விளையாட்டிற்கு நமது பங்கு குறித்தும், தகுதிகளை நிர்ணயிக்கும் புறச்சூழல் காரணிகள் குறித்தும் போன பதிவில் பேசினேன். இன்று புறக்காரணிகளோடு ஒரு அகக் காரணி பற்றியும் அது இந்த விளையாட்டில் வகிக்கும் பங்கு பற்றியும் பேசுவோம்.
வாழ்வதற்கான தகுதிகளை புறக்காரணிகள் எவ்வாறு நிர்ணயிக்கிறதென்பதை ஓருவாராக புரிந்து கொண்டிருப்பீர்கள். வாழும் உயிரி தன் துணையைத்தேடுவதிலும் பெரும்பாலும் புறக்காரணிகள் பங்கு வகித்தாலும் இங்கு அதில் அகக்காரணியின் பங்கு குறித்தும் அவை களின் தேர்வு புறக்காரணிகளால் அங்கீகரிக்கப்படுகின்றனவா என்றும் பேசுவோம்.
நாம் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். தற்சமயம் நமது நாட்டில் உள்ள நிலை குறித்துப் பேசினால் விளங்கும் என்பதால் இந்த உதாரணப்பேச்சு.
நமது நாட்டில் பெண்ணைப் பெற்றோர் சற்று முன்னிருந்த காலம் வரை தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையாகும் தகுதியாக நிர்ணயித்தது மாப்பிள்ளை ஒரு MNC யில் மென்பொருள் ஆளுனராக இருக்கவேண்டுமென்பது. பெண்களும் தனக்கு வரக்கூடிய கணவன் மென்பொருள் துறையில் இருந்தால் நல்லது என எண்ணியிருந்தனர். இது ஒருவேளை அளவுக்கு மிகுந்த வருவாயை ஈட்டவேண்டும், வாழ்வில் வசதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தினால் இருக்கலாம்.
சற்று முன் காலம் வரை மேற்சொன்னபடி மென்பொருள் துறையினரை mate selection favour செய்தது. ஆனால் அதற்குப் பின் வந்த recession மற்றும் பணித் தொல்லைகள் இந்த தகுதித் தேர்வினை சற்றே நிதானிக்கச் செய்தது. பணித் தொல்லைகளில் பெரும் பாலான இணைகள் தங்கள் பிள்ளைப் பேறை தள்ளிப் போடவோ அல்லது பிள்ளைப் பேறு சார்ந்த குறைபாட்டை சந்திக்கவோ வேண்டியிருந்தது. இந்த நிலையை மருத்துவர்கள் DINK syndrome ( Double Income No Kids syndrome) என குறிப்பிடுகிறார்கள்.
இது தற்போது அதிகரித்துள்ளகுழந்தையின்மை குறைபாட்டைச் சரிசெய்யக் கூடிய fertility clinic குகளால் சாதாரணமான மனிதன் கூட அறிய வரலாம். இந்த clinic க்கிற்கு வருகை தருபவர்கள் பெரும்பாலும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மென்பொருள் துறை சார்ந்தவர்களே என்று கேள்வி. இந்த மருத்துவ சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைகள் சுமத்தும் பணச்சுமையை ஒரு சாதாரன மணிதனால் சமாளிக்க முடியாது.
அதை விடக் கொடுமை தற்போது தெரிய வந்துள்ள ஒரு உண்மை. பெரும்பாலான மென்பொருள் துறை சார்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும்பிள்ளைப் பேறு பிரச்சினைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பணிசார்ந்த ஒரு உடற்கோளாறு எனவும் பேசப்படுகிறது. ஒருவேளை கணினி முன் அமர்ந்து பகல் இரவு சுழற்சிக்கு எதிராக பணிசெய்வதால் இருக்கலாம். பெண்களுக்கு இது மிகப் பேரிய பாதிப்பை உண்டாக்குகிறது. ஹார்மோன் சுழற்சியை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதால் பிள்ளைப் பேறு மட்டுமன்றி மற்ற வாழ்வியல் பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க வேண்டி யிருக்கிறது.
நல்ல வசதியான படித்த இளமையான திருமணமான பெண்கள் தெருவில் விளையாடும் சாதாரண குழந்தைகளைப் பார்த்து ஏங்கிப்போய் நிற்பதை நானே பல முறை கண்டிருக்கிறேன்.
இது கொடுமையல்லவா? ஒரு தலைமுறையே தனது சந்ததியினை தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையல்லவா? இதுவரை தொடர்ந்து வந்த தங்களது உயிர் மூலக்கூறுகள் இத்தோடு - இவர்களோடு நின்றுவிடும் அபாயம் எத்துனைக் கொடுமை? பரிணாம வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு இல்லாதது மிகப் பெரிய இழப்பல்லவா? இதுவா வாழ்வில் வெற்றியென்பது? இதுவா உயிரின் நோக்கு?
இங்கு நமது அகக் காரணியின் தெரிவினை இயற்கை புறக்கணித்துவிட்டது கண்கூடு.
எனவே நாம் நமது தெரிவினைத் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்களாயிருந்தும் அதற்கும் மேலே இயற்கை இருப்பதால் அதன் அங்கீகாரம் தான் மிகப் பெரியது.
இயற்கைக்கு ஒப்ப நமது தெரிவினைத் தேர்ந்தெடுத்தோமானால் நமக்கு மகிழ்ச்சியுடன் வெற்றியும் கூடும் மேலும் வாழ்வில் வீணான குழப்பங்களும் - conflicts - இருக்காது.
மீண்டும் பேசுவோம்.
அன்பன்
வேதாந்தி.
No comments:
Post a Comment