23.9.10
தகுதியானது பிழைத்து வாழும்.
நன்கு கவனிக்கவும். எப்போதும் தகுதியானது தான் பிழைத்து வாழும். வலிமையானது அல்ல. சில சமயங்களில் வலிமை ஒரு தகுதியாக இருக்கலாம். எப்போதும் அல்ல - சில சமயங்களில் மட்டுமே.
இது இயற்கை நமக்குச் சொல்லும் செய்தி.
இந்தப்பதிவு நான் பேசிக்கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து சற்றே விலகி - அல்ல அல்ல - சற்றே zoom out செய்து ஒரு bird’s view போன்றதொரு பேச்சு. இது நாம் பேசிக்கொண்டிருக்கும் செய்திகளை தெளிவாக உணர வேண்டிகுறித்தே.
நான் முன் பதிவில் சொல்லியது போல் முறையுடன் வாழ்வது மட்டுமே நமது நோக்கு. வாழ்வது நமது நோக்கு மட்டுமல்ல இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் முதன்மையான நோக்கும் கூட. எனவே தான் வாழ்வது முக்கியம்.
தகுதியானதுதான் பிழைத்து வாழுமென்றல் அந்தத் தகுதியை நிர்ணயிப்பது யார் அல்லது எது?
எப்போதுமே எல்லா உயிரிகளும் என்றைக்குமே ஒரு ஆளும் தகுதியில் இருக்கிறதில்லை. உயிரியல் தத்துவத்தின் படியும், biological pyramid படியும் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்கள் அனைத்தையும் ஆளுமை கொள்ளும்படி படைக்கப் பட்ட ஒரு உயிரி. மற்ற உயிரினங்களை ஆளுமை செய்யும் மனிதன் தன் சூழலையும் ஆளுமை செய்யும்படி உள்ளான் என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால் பிற் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று பின்னர் பேசுவோம்.
எனவெ எல்லா உயிரினங்களும் தனது சூழல் காரணிகள் வாழும் தகுதியாக எதை நிர்ணயிக்கின்றதோ அவகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பிழைத்து வாழும். ஆக உயிரினங்கள் சூழலை நிர்ணயிப்பதில்லை மாறாக சூழல் மட்டுமே உயிரினங்களை, அதன் தகுதிகளை நிர்ணயிக்கின்றது.இங்கு நாம் பார்க்கவேண்டிய முக்கியமான கோட்பாடு சூழலே மற்றவைகளை ஆளுகிறது. இங்கு சொல்லப்பட்ட சூழல் என்பது அகக் காரணிகளைத் தவிற மற்ற புறக்காரணிகள் அனைத்துமே.
ஆக சூழல் தான் வாழ்வெனும் விளையாட்டு விதிகளை நிர்ணயிக்கின்றது. இந்த விதிகளுக்கு உட்படாத உயிரிணங்கள் விளையாட்டிலிருந்து நீக்கப் படுகின்றன.
இந்த வாழ்க்கை விளையாட்டின் வெற்றிக்கோப்பை பரிணாம வளர்ச்சி என்பது. ஆம் ஒவ்வொரு உயிரியும் பரிணாம வளர்ச்சியில் பங்கு கொள்ள வாழ்ந்தே ஆக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உயிரியும் ஒரு தனித்தன்மை வாய்ந்த உயிர் மூலக்கூறுகளின் தொகுப்பைப் பெற்றிருக்கிறது. இந்த மூலக்கூறுகள் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் கட்டாயம் பங்கு கொள்ளவேண்டும்.
Every single individual life has a set of special genetic pack, genetic combination that has to take part in the process of evolution – a force in the refinement of species towards better side.
நம் முன்னோர்களின் இந்தப் பங்களிப்பால் தான் முரட்டுக் குரங்கிலிருந்து மௌவ்ஸ் பிடித்து கணினி இயக்கும் மனிதனாகி நிற்கிறோம். இது இன்னமும் தொடரும், தொடர வேண்டும் - நமது பங்களிப்பால்.
இந்தப் பங்களிப்பு ஒவ்வொரு உயிரியும் தனது துணையைத் தேடி அடைந்து தன் சந்ததியினை பெருக்கும் போது மட்டுமே நிறைவடைகிறது. இந்த உயிரிகள் வாழ முடியாது போனாலோ, வாழ்ந்து தன் துணையைத் தேடி அடைய முடியாது போனாலோ, வாழ்ந்து தன் துணையைத்தேடி அடைந்தபின்னும் தன் சந்ததியைப் பெருக்க முடியாவிட்டாலோ தனது தனித்தன்மையான மூலக்கூறுகளை பரிணாம வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க முடியாத உயிரியாகி விடும். இது பரிணாம வளர்ச்சிக்கு பெரும் நட்டம்.
எனவெ ஒவ்வொரு உயிரியும் வாழ்ந்தாக வேண்டும். வாழவேண்டுமானால் சூழல் சொல்லும் செய்திகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
கொசுவை ஒழிக்க மனிதன் DDT மற்றும் பிற பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கத் தொடங்கியதும் பூச்சிக் கொல்லிகளைத் தாக்குப் பிடித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற தகுதியை முன் வைத்த சூழலைப் புரிந்து கொண்ட கொசுக்கள் பூச்சிக் கொல்லிகளுக்கு எதிர்ப்புச் சக்தியினை வளர்த்துக் கொண்டது.
எனவே நம்மை ஆளும் சூழல் சொல்லும் செய்திகளைப் புரிந்து கொள்வோம் வாழ்வோம் வெற்றிபெறுவோம்.
இது குறித்து இன்னமும் பேசுவோம்.
அன்பன்
வேதாந்தி.
நல்லதொரு பரிணாம வளர்ச்சி.
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்பன்
வேதாந்தி