Followers

Thursday, May 14, 2015

இந்தியச் சரித்திரத்தில் இடம் பெறப்போகும் தீர்ப்பு!


14.5.15

இந்தியச் சரித்திரத்தில் இடம் பெறப்போகும் தீர்ப்பு!


இப்போது எல்லா வட்டத்திலும் எல்லா மட்டத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் தீர்ப்பைத்தான் சொல்கிறேன்.

நான் எல்லோரும் சொல்வதைப்போல தீர்ப்பைப்பற்றிய ஒரு விமரிசனத்தை இங்கு வைக்கவில்லை. மிக ஆச்சரியமான மிக நுணுக்கமான ஒரு சங்கதி சத்தமில்லாமல் நடந்திருக்கிறது. ஆம் இந்த தீர்ப்பு ஒரு புதுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

திரு. B.V. ஆச்சார்யா, வெளிவந்துள்ள தீர்ப்பில் உள்ள சில எண்ணிக்கைத் தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். சுட்டிக் காட்டியதோடல்லாமல் இந்த எண்ணிக்கைத் தவறுகளை கர்நாடகா உயர்நீதிமன்றம் சரிசெய்யப்போகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்திய குற்றவியல் சட்ட முறைகளின் 362 வது பிரிவின்படி எந்த ஒரு நீதிமன்றமும் தீர்ப்பளித்ததற்குப்பின்னர் அதனை மாற்றியமைக்கவோ அல்லது மறு பரிசீலனை செய்யவோ முடியாது. ஆனால் தீர்ப்பிலுள்ள அச்சுப் பிழைகளையோ அல்லது எண்ணிக்கைப் பிழைகளையோ சரிசெய்ய முடியும்.

 
Picture source: wronghands1.wordpress.com Picture by John Atkinson
 

விசித்திரமாக, இந்தத் தீர்ப்பில் உள்ள எண்ணிக்கைத் தவறை சரிசெய்தால் அம்மையாரின் சொத்துக் குவிப்பு மதிப்பு 8.12 சதவீதத்திலிருந்து 76.77 சதவீதமாக உயர்ந்து விடுவதால் வழக்கின் தீர்ப்பே மாறிவிடும்.

QUIET INTERESTING.

என்ன நடக்கப்போகிறதென பார்ப்போம்.
இதைக் குறித்து இதையும் பாருங்கள்:  ஒருவேளை இப்படியும் இருக்குமோ...?


மீண்டும் பேசுவோம்.


அன்பன்,
வேதாந்தி.






3 comments:

  1. பணம் எதையும் எப்படியும் மாற்றும்...!

    ReplyDelete
  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  3. வழக்கின் மேல் முறையீட்டினைப் பொருத்து “Interpretation of Law” என்னும் சக்தி வாய்ந்த ஆயுதம் வழி உச்ச நீதி மன்றம் அராய்ந்து தீர்ப்பு சொல்ல வாய்ப்பு உள்ளது. சூடான பதிவு. நன்றி நண்பரே..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...