Followers

Sunday, January 26, 2014

மெல்லத் தமிழன் இனிச் சாவானோ…


26.1.14

மெல்லத் தமிழன் இனிச் சாவானோ…






வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனப் பேசி பெரு மாற்றம் நிகழ்த்திய அறிஞர் இப்போது இருந்தால் என்ன சொல்வார்?

அன்றைக்கு நமது பார்வை வட்டத்தில் நமது தேசிய அரசியல்வாதிகளின் மனப்போக்கை பிரதிபலிப்பதாக இதைச் சொல்லியிருப்பினும் இது செயல் முறையில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

தமிழைத் தவிற வேறு மொழிகளைப் படிப்போர் தமிழ் துரோகிகள் எனப் பார்க்கப்பட்டனர். தமிழனைத் தவிர வேறு யாரும் நல்ல கருத்துக்களுக்காகவோ அல்லது அவர்களது நல்ல செயல்களுக்காகவோ தமிழனால் பாராட்டப்படக்கூடாது எனும் போக்கு வளர்ந்தது.அத்துனை ஏன். பேரறிஞர் அண்ணாவால் கண்டு போற்றப்பட்ட நமது மறைந்த முன்னாள் முதல்வர், முதல்வர் எனும் தகுதியில் மட்டுமல்லாது ஒரு பொது மனிதனால் பெரும் பரொபகாரி என பார்க்கப்பட்டதும் போற்றப்பட்டதும் யாவரும் அறிந்ததே. அப்பேர்பட்டவரையே ஒரு கட்டத்தில் அவர் தமிழனல்ல என்றும் நாம் தமிழனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் சிலர் பிரச்சாரம் செய்ததும் கண்கூடு.






இன்றும் கூட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் அசிங்கப்படுத்தப் பட்டபோது அவரை ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியெனப் பாராமல் அவரை தலித் எனவும் சாதாரணப் பெண் எனவும் கருதும் படிக்கு மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களே அறிக்கை விடுவது மிகவும் வருந்தத் தக்கது. இந்த அறிக்கைகளின் பின்னனியில் தங்களது சுய லாபமும் உண்டு என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் தனித்தமிழ் நாடு கேட்டவர்களே பின்னர் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டனர்.ஆனாலும் மொழியைப் பிரதானமாக வைத்து அரசியல் நடத்துவது குறையவில்லை. இந்த அரசியலால் இரண்டு தலைமுறைகள் முடங்கிப் போய்விட்டன.

இந்தப் போக்கு நம்மை வளர்த்திருக்கிறதா அல்லது உயர்த்தியிருக்கிறதா என்பதே எனது இன்றைய கேள்வி

பெரும் ஆபத்து என்னவென்றால் நமது கல்வித் துறையும் இந்த அரசியலுக்கு உட்படுத்தப் படுவதுதான். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் வெகுவாக பேசப்படும் பொருளாக மொழிக்கல்வி இருக்கிறது. பெரும்பானோர் ஆங்கில வழிக் கல்விமுறை தவறானது என்றும், இது தமிழைக் குழிதோண்டிப் புதைத்துவிடுமென்றும் புலம்புகின்றனர். ஆனால் தமிழை விரும்பி எடுத்துப் படிப்போர் முன்னேற வழி சொல்வோர் காணோம்.

26.1.2014 தேதியிட்ட The Economic Times பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றனர். அதன் தலைப்புIndia's got talent: Northern belt graduates more employable than southern counterparts”(By Malini Goyal, ET Bureau | 26 Jan, 2014) என்பது  இதன் சுட்டி: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/jobs/indias-got-talent-northern-belt-graduates-more-employable-than-southern-counterparts/articleshow/29366302.cms





இதன் சாராம்சம் என்னவென்றால் தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் logical and numerical skills  மற்றும் computer skills ஆகியவைகளில் சிறந்திருந்தாலும் ஆங்கில மொழித்திறன் இல்லாத காரணத்தால் பணிக்கு உகந்தவர்களல்ல என்பதுதான்.

தமிழைப் படித்தவன் பிழைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது காலத்திற்கு தகுந்தார்ப்போல தமிழைப் படிக்கும் தமிழன் தன்னை பணிக்குத் தகுதியுள்ளவனாக்கிக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில் எதிர்வரும் காலங்களில் வரும் போட்டிகளில் தமிழைப் படித்தவன் தனித்து விடப்படுவான் என்பது நிச்சயம்.

அது மட்டுமல்ல நம் நாட்டை, ஏன் உலகையே, ஆண்ட ஆங்கில மொழிக்குச் சொந்தக்காரர்களான இங்கிலாந்துக் காரர்கள் மொழிப்பற்றின் மிகுதியால் மொழியைப் பரப்ப வந்தவர்களல்லவே. மாறாக பிழைக்க வியாபாரம் செய்ய நாடு கடந்து வந்தவர்கள் தானே. வியாபாரத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்கள் மொழியையும் வேரூன்றும்படிக்குச் செய்தனர் அல்லவா? பிழைப்பு தங்களையும் காப்பாற்றி தங்களது மொழியையும் நிலை நிறுத்தியதல்லவா?

எனவே முதலில் தமிழன் பிழைக்கும் வழியைப் பார்க்கட்டும் தமிழன் பிழைத்தால் தமிழ் பிழைக்கும் இல்லையெனில் இன்னமும் அய்ந்து தலை முறைகளில் தமிழையும் தமிழனையும் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அதற்கப்புறம் அரசியல்வாதிகளுக்குக் கூட அரசியல் செய்ய தமிழ் இருக்காது, தமிழனும் இருக்க மாட்டான்.

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

 

 

 

3 comments:

  1. இயற்கையின் நியதிப் படி எல்லோருமே இறப்பது நிதர்சனம் என்னும் நிலையில், ‘தமிழன் மட்டும் சாகாமல் இருக்க முடியுமா? என்ன தலைப்பு?

    ReplyDelete
  2. உண்மைதான். நான் அழுத்தமாக இனத்தையும் மொழியையும் சேர்த்து சற்று மிகைப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. தமிழர்களில் கிணற்றுத் தவளையாக உள்ளவர்கள் அதிகம்.

    நாம் பெரும்பாலும் மற்ற மானிலங்களில் வாழ்ந்தவன். இதுபோன்ற தரக்குறைவான் பேச்சுக்களை எங்கும், எந்த மொழியிலும் கேட்டதில்லை.

    சமஸ்கிருத உச்சரிப்புகளில் உள்ள சிறப்புகளை எழுதி திட்டு வாங்கினேன். இந்தத் தமிழ் மண் எனது அல்ல என்று நினைத்து வேதனைப்படும் அளவுக்கு வந்துவிட்டேன்.

    நன்றி

    கோபாலன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...