22.1.14
யாதுமாகி நின்றாயே அப்பா!
முள்
காட்டில் விழுந்த விதையானாலும்
முயற்சியுடன்
ஒளி தேடி முளைத்து
இலைகளையும்
கிளைகளையும் முட் புதர் தொடாது விரித்து
விழுதுகளையும்
தாங்கி நல்ல விதைக்கும் வேருக்கும்
விளக்கமாய்
நின்றாயே அப்பா…
சீராட்டி
பாராட்டி சிக்கனத்தையும் போற்றி
சிறந்த
பல ஒழுக்கங்களையும் பரந்த எண்ணங்களையும்
பகிர்ந்து
என்னை உருவாக்கினாலும் பிரதி பலன்களை பாராத
பெருமனம்
கொண்டாயே அப்பா…
உனது
அடையாளமாக உடலைக் கொடுத்து
அம்மையுடன்
கொண்ட அன்பின் அடையாளமாய்
உயிரைக்
கொடுத்து உடலும் உயிருமாய் நான் வலம் வர
உளமகிழ்ந்து
பெருமிதம் கொண்டாயே அப்பா…
ஆசானாய்…
அருந் தாயாய்…
அம்மையப்பனாய்…
யாதுமாகி
நின்றாயே அப்பா…
உனைப்பிரிந்தும்
உயிர் வாழும் வித்தைக்கு
எங்கு
போவேன்..அய்யோ…
No comments:
Post a Comment