12.1.14
ஆடிய பாதம்- 2
அந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த
ஆறு பேரும்…
நண்பர்
தொடர்ந்தார்.
“ போபால் சம்பவத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட
ஒரு மாநில அரசின் அமைப்பு மற்றும் அதன் தொடர்பான ஆய்வகத்தில்தான் எனக்குப் பணி. தொடங்கப்பெற்று
இரண்டு மூண்று ஆண்டுகள் தான் இருக்கும். அனைவரும் புதிதாக வந்தவர்கள்- தலைமை அதிகாரி
முதற்கொண்டு. ஆரம்பக் கட்டமானதால் நிறைய கொள்முதல்கள் செய்ய வேண்டியிருந்தது. வேலை
நடந்ததோ இல்லையோ ‘கொள்முதல்கள்’ நிறையவே நடந்தன. திடீரென ஒருநாள் மேலதிகாரி வந்து,
“ ஆடிட் வரப்போகுதாம்பா. வாங்கினதெல்லாம் வரவில காட்டி வவுச்சர் போட்டு செலவுல காட்டணும்..”
என்றபடி அங்கிருந்த ஆறு பேரை, “நீ..நீ..நீ..” என்று அருகில் அழைத்து அவர்களுக்கு வேலைகளை
பிரித்துக் கொடுத்தார். அந்த ஐந்து பேரும் கைகளைக் கட்டிக் கொண்டு தலையை பவ்வியமாய்
ஆட்டி கேட்டுக் கொண்டனர். தெரிந்தோ தெரியாமலோ அன்றைக்கு அவர்கள் தீட்சை வாங்கியது அவர்களை
ஊழலில் பெரிய ஆளாக்கியது. இன்றைக்கு அவர்கள் கூட்டு சேர்ப்பதிலும், கொள்ளையடிப்பதிலும்
கில்லாடிகளாய் வளர்ந்திருக்கிறார்கள்.
அந்த ஆறு பேரும் விதவிதமாய் கையொப்பமிட்டு
சரக்குகள் வந்தமாதிரியும் செலவழிந்த மாதிரியும் வவுச்சர்களை நிரப்பி தேதி வாரியாய்
கிழித்து ஏழுநாட்கள் இரவும் பகலுமாய் ஊழலுக்காய் “உழைத்து” முன்னேறினார்கள்.
அதிலே ஒருவர், முத்தானவர், பேனாவைப்
பிடித்து “பிச்சை” என்று தனது இடதுகையால் ஒரு வவுச்சரில் கையொப்பமிட்டதை இன்றைக்கு
நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அன்றைக்கு ஆரம்பித்தவர் லட்சக்கணக்கில் பிச்சையெடுத்து
நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தி வந்த எல்லா மேலதிகாரிகளுக்கும்
வேண்டியவராகி பல பதவி உயர்வுகளையும் பெற்று இப்போதுதான் ஓய்வு பெற்றார்.
பிச்சையெடுத்த பணத்தில் சொந்த ஊரில்
வளமாய் செட்டிலானதாகக் கேள்வி..”
“பிச்சை”யிலிருந்த
Irony யை நினைத்து சிரித்தேன்..
இன்னமும்
பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
No comments:
Post a Comment