17.1.14
ஆடியபாதம் – 4
தென்னை மரத்தில் தேள்
கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதை
ஆசுவாசப்
படுத்திக் கொண்ட நண்பர் தொடர்ந்தார்.
“உருப்பெருக்கி
விவகாரத்தில் மாட்டியவருக்கே மறுபடியும் சிக்கல் வந்தது. உருப்பெருக்கி திருட்டு விவகாரத்தில்
ஆசாமி மாட்டிக் கொள்வார் என நினைத்தவர்கள் தங்கள் கழுத்திற்கே சுருக்கு வந்தவுடன் பதைத்து
விடுபட்டனர். ஆனாலும் தங்களது சதியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த பிரிவு அதிகாரியின்
மேல் வஞ்சம் குறைய வில்லை.
மறுபடியும் ஒரு
திட்டம் ஆரம்பமாகியது.
இம்முறை அவருக்கு
கீழே வேலை செய்யும் ஒருவரை வைத்து அவருக்கு சிக்கலை உண்டாக்கினர். அன்றைய பொழுதில்
வாகனங்களை சோதித்து சான்றிதழ்கள் வழங்கும் பணியினை எங்கள் துறை செய்துவந்தது. அந்தப்
பணிக்கு ஆட்களை சுழற்சி முறையில் அனுப்பி வந்தனர். பொது மக்களுடன் குறிப்பாக lorry
driver களுடன் பேசி, பரிசோதனைக்கு
பணம் பெற்று ஒப்புகைச்சீட்டு அளித்து பரிசோதனை முடிந்தவுடன் சான்றிதழ் வழங்குவதுதான்
அங்கு பணி. வழக்கம் போலவே பரிசோதனை முடிவு எப்படியிருந்தாலும் ok என சான்றிதழ் வழங்குவதும் அதற்கு தகுந்தபடி கையூட்டு பெற்றுக்
கொள்வதும் நடந்து வந்தது.
மேற்சொன்ன பிரிவு,
உருப்பெருக்கி சதியில் சிக்கிய நமது கதாநாயகனுக்கு திடீரென தரப்பட்டது. இந்தப் பணி
ஐய்ந்து இடங்களில் நடந்துவந்தது. இவர் அந்த இடங்களை சுழற்சி முறையில் inspect
செய்து வந்தார்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் இவருக்கு ஒரு குறிப்பிட்ட பணியிடத்தில் சிக்கல் என்றும்
உடனே அங்கு வரும்படியும் ஒரு பணியாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவரும் வருவதாகச்
சொன்னார். ஆனால் அதற்குள் இவருக்கு வேறு ஒரு வேலை வரவே அங்கு held
up ஆகி விட்டார். அந்த
இடத்திற்கு போகவே இல்லை.
அந்தப் பணியிடத்திற்கு
விஜிலென்ஸ் (ஊழல் தடுப்பு கண்காணிப்பு படை) திடீரென வந்து நாள் முழுக்க சோதனையில் ஈடுபட்டது
அன்று மாலைதான் அவருக்கு தெரியவந்தது. அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்து அவர் வருகிறேன்
என சொன்னபிறகே விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல இவரது மேலதிகாரியின்
fax machine லிருந்து விஜிலென்ஸ்க்கு ஒரு fax போன பிறகுதான் விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறதென்று பின்னர்
இவருக்கு தெரிய வந்தது. அந்த மேலதிகாரி வேறு யாருமல்ல இவர் தொடுத்திருந்த வழக்கின்
பிரதிவாதிதான் அவர்.
ஊழல் தடுப்பு
அதிகாரிகள் அங்கிருந்தவரிடமிருந்த பணம் மற்றபடி unaccounted money, receipts என பல ஆதாரங்களை கைப்பற்றி அன்றைக்கு அந்த பணியிடத்தில்
பணிபுரிந்தவர்மேல் ஒரு charge sheet frame செய்தனர். இந்த charge sheet ஐ வைத்து நமது கதாநாயகனுக்கும் ஒரு charge sheet தரப்பட்டது. charge என்னவென்றால் இவருக்கு கீழே இயங்கும் பிரிவில் நடக்கும்
ஊழலை இவர் தடுக்க வில்லையாம் அதனால் இவர் மேல் நடவடிக்கையாம். இந்த charge ஐக் காட்டி இவருக்கு வர வேண்டிய மற்றுமொரு பதவி உயர்வை தடுத்து
விட்டனர்.
நன்றாக கவனியுங்கள்.
பிடிபட்டவரது குற்றம் நிரூபனமாகவில்லை. அந்த நிரூபனமாகாத குற்றத்தின் மேல் இவருக்கு
கொடுக்கப்பட்ட வெறும் charge ஐக்
காண்பித்தே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். இது கொடுமையல்லவா? அதற்குப் பிறகுதான்
இவருக்கு புரிந்தது. மேலதிகாரியின் fax machine லிருந்து fax அனுப்பிவிட்டு இவரை அங்கு வரச்சொல்லி மற்றொருவரிடம் தொலைபேசியில்
தகவல் சொல்லி அதன்படி இவர் அங்கு சென்றபின்னர் இவரை விஜிலென்சில் சிக்க வைக்க பெரும்
முயற்சி நடந்திருக்கிறதென்று. மிகப் பெரிய சதி. அதற்கு பலர் கூட்டு வேறு. ஆனால் விதி
இவரை அங்கு போகாமல் தடுத்து விட்டது. ஆனாலும் வெறும் charge ஐக் காட்டியே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். பின்னர்
இவர் முதலில் போட்ட வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் இவரது பதவிஉயர்வில் நடந்த சிக்கல்
தீர்ந்தது.
யாரோ கையூட்டு
பெற இவரது பதவி உயர்வை அதைக்காட்டி தடுத்து விட்டனர். இதெப்படி.
இதை விடக் கொடுமை
என்னவென்றால் மற்றொரு சம்பவம் அதற்குப் பின்னர் நடந்தது. அதில் பொறியாளர் ஒருவர் ஏழு
லட்சங்களுடன் கையும் களவுமாக ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் மாட்டி அது தி ஹிந்து, எக்ஸ்பிரஸ்,
டைம்ஃஸ் ஆஃப் இந்தியா, மற்றும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்தது. அதுவும் அந்தப்
பொறியாளரின் பெயருடன் வந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டிய துறை
விசாரணை அவர் ஓய்வு பெறும் வரை நடைபெறவில்லை மற்றும் அவருக்கு அதற்குப்பின்னர் இரண்டு
பதவி உயர்வுகள் கிடைத்து மிக மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். இதெப்படி?
இரண்டு சம்பவங்களும்
ஒரே துறையில். ஆச்சரியமாயில்லை?”
நண்பர்
சொன்னதைப் பார்த்தால் இன்னமும் ஆச்சரியங்கள் வெளிவரலாம் எனத் தோன்றியது. நான் மௌனத்துடன்
அவரது பேச்சுக்காய் காத்திருந்தேன்.
இன்னமும்
பேசுவோம்.
அன்பன்
வேதாந்தி.
No comments:
Post a Comment