Followers

Saturday, October 18, 2014

வந்ததும் வராததும். (அ) பப்பாளியும் பலாப் பழமும்.


18.10.14

வந்ததும் வராததும். (அ) பப்பாளியும் பலாப் பழமும்.
 

ஒரு சமயம் ஒரு அரசன் தன் அரசவையிலிருந்தோரை நோக்கி “ நான் நேற்று கனவில் ஒரு கனியைக் கண்டேன் அந்தக் கனி என்னவென்று யாராவது சொல்ல முடியுமா?”, எனக் கேட்டான். அவையிலிருந்த அனைவரும் என்னவாயிருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது,  “அமைச்சரே நான் கனவில் கண்ட கனியைக் கொண்டு வருவோருக்கு அந்தக் கனியின் எடைக்குச் சமமான தங்கத்தை சன்மானமாக தரப்போவதாக அறிவியுங்கள்.” என்றான். “அதே சமயம் நான் கனவில் கண்ட கனியல்லாது வேறேதும் கனியைக் கொண்டுவந்தால் தண்டனை கடுமையாய் இருக்கும்”, எனவும் அறிவித்தான்.

இந்த அறிவிப்பைக் கேட்டு பேராசை கொண்டவர்கள் அரசனை ஏமாற்றி பெரும் தங்கத்தை தட்டிச்செல்லும் பொருட்டு தங்கள் மனதில் தோன்றிய பழத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றார்கள். தங்களது ஊகம் தவறாக இருந்தால் கிடைக்கும் தண்டனையைப் பற்றி கவலை கொண்டவர்களாய் தெரியவில்லை. அரசனோ ஒவ்வொருவராய் வரவழைத்து அவர்கள் கொண்டுவந்த கனியைப் பார்த்து, ‘இதுவல்ல நான் கனவில் கண்ட கனி’ என்று சொல்லி அருகிலிருந்த காவலாளிக்கு கண்ணசைவால் உத்தரவிட அந்தக் காவலாளி கனியைக் கொண்டுவந்தவரிடமிருந்த கனியைப் பிடுங்கி அதை அவர்களது ஆசனவாயில் வைத்து உள்ளே திணித்து பின் வாசல் வழியாக அனுப்பிவைத்தபடி இருந்தான்.

திராட்சைக் கனியும், கொய்யாக் கனியும் கொண்டுவந்தவர்கள் தப்பித்தோம் என தண்டனை பெற்றுக் கொண்டு தலை தெறிக்க ஓட தன் கையில் ஒரு பெரிய பப்பாளிப் பழத்துடன் இருந்த ஒருவன் தண்டனையைக் கண்டு மிரண்டு போனான். அரசன் நினைத்தது பப்பாளியும் அல்ல என்று தெரிந்தவுடன் அவனும் தண்டனைக்குள்ளானான். ஆசனவாயில் இரத்தம் சொட்டச் சொட்ட தண்டனையை அனுபவித்தவன் தண்டனையின் போது பெரும் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது அரசனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவே, “நீர் எதற்காக இப்படிச் சிரிக்கிறீர்?” என்று வினவ, தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தவன் சொன்னான்,




“பப்பாளிப்பழம் கொண்டுவந்த எனக்கே இந்தக் கதி என்றால் என் பின்னால் ஒருவன் பலாப்பழம் கொண்டுவருகிறானே அவனது நிலையை நினைத்தேன் சிரிப்பாய் வந்தது”

அது சரி.

பப்பாளியை விட பலாப்பழம் பெரிசுதான். பார்ப்போம்.

என்ன ஜீ! நான் சொல்வது சரிதானே? ஓ! 2 ண்டு G போடணுமோ?

 இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

2 comments:

  1. துயர் துரத்தியது வெட்டிப் பேச்சு

    ReplyDelete
  2. உண்மைதான், பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டவன் பெரும் துயரை சந்திக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...