Followers

Wednesday, June 10, 2015

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை…!


10.6.15

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை…!நான் வீணான சங்கதிகளுக்காக விடாது சண்டை போடுபவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இந்த குணம் இளைஞர்களுக்கு மட்டுமின்றி பல மூத்தோர்களுக்கும் இருப்பதை கண்டிருக்கிறேன். இது அறியாமையின் விளைவாய் இருக்கலாம். பொதுவாக முதியவர்கள் இப்படி சண்டை யிடுவதில்லை.

சிலர் இந்த சண்டைக் குணத்தை விடாமல் குழந்தைகளிடம் கூட சரி சமமாகவோ அல்லது அதற்கும் மேலேயோ வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். இப்படிப் பட்டவர்கள் தங்களை ஒத்தவர்களுடன் எப்போதும் தோல்வி காண்பதாலோ அல்லது தங்களை ஒத்தவர்களுடன் தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்த முடியாத இயலாமையாலோ இத்தகைய பிறழ்வு மனப்பான்மையில் குழந்தைகளிடம் அவர்கள் போர்க்குணத்தைக் காட்டும் போது குழந்தைகள் விக்கித்து விடுகிறார்கள். அனைவரிடமும் அன்பை மட்டுமே பெற்றுவரும் அந்தக் குழந்தைகளுக்கு அது ஒரு புது அனுபவமாக அமைந்து விடுகிறது.

இது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.

ஒருமுறை நான் காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு பெண்மணியை இத்தகைய குணத்துடன் பார்த்தேன்.

அவருக்கு முன் வரிசையில் ஒரு பெண்மணி குழந்தையுடன் இருந்தார். குழந்தைக்கு ஆறு வயது இருக்கும். பெண் குழந்தை. அந்தத் தாயார் ஏதோ கவலையில் தன் கையில் விண்ணப்பத்துடன் தனது முறைக்காக காத்திருக்கையில் அந்தக் குழந்தை தாயின் பிடியிலிருந்து விலகி வந்து தனக்குப் பின் வரிசையில் இருந்த நான் குறிப்பிட்ட பெண்மணியை பார்த்து முகம் சுழித்து சிரித்தது. ஆனால் அந்தப் பெண்ணோ எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் கழித்து தன் தாயின் பிடியிலிருந்து முழுதுமாய் வெளி வந்த அந்தக் குழந்தை, பின் வரிசையிலிருந்த பெண்ணை நோக்கி நகர்ந்தது. அந்தப் பெண் சிரிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை விரும்பியது போலத் தோன்றியது. ஆனால் அந்தப் பெண் சிரிக்கவில்லை.

மெதுவாக நகர்ந்து நான் குறிப்பிட்ட பெண்ணின் முன்னால் வந்த குழந்தை அந்தப் பெண்ணை கையால் தொட முயற்சித்தது. அந்த முயற்சியில் குழந்தையின் கால் அந்தப் பெண்ணின் காலின் மேல் பட்டுவிட்டது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்த அந்தப் பெண் தனது காலால் அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை ஓங்கி ஓங்கி மிதித்தாள். ஓங்கி ஓங்கி மிதித்த வேகத்தில் அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது.

வெறி கொண்டதைப் போல தனது கால்களின் மேலேறி ‘ஜங்கு’ ‘ஜங்கு’ என மிதித்த அந்தப் பெண்ணைப் பார்த்து மிரண்டு போனது குழந்தை. அதன் முகம் சுருங்கிப் போனது. இரு கைகளாலும் தன் வாயைப் பொத்திக் கொண்ட அதன் கண்களில் கண்ணீர் கதக் என துளிர்த்து உருண்டது. பின்னர் மெதுவாய் பின்னோக்கி நகர்ந்து தன் தாயின் அணைப்பிற்குள் அடங்கியது. நடந்த எதையும் கவனிக்காத அதன் தாய் தன் மடியில் விழுந்து கவிழ்ந்த குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

இவையத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு என் கண்களையே நம்பமுடியவில்லை.

இப்படியும் பெண்களா..?

அதிர்ந்து போனேன். அந்தச் சம்பவத்தை வேறு யாரும் பார்த்தார்களா என நான் கவனிக்கவில்லை.

இது ஏன் இப்படி? அந்தப் பெண்ணுக்கு என்னவாயிற்று? அந்தப் பெண்ணின் மனதில் அடக்கி வைத்திருந்த aggression இப்படி வெளியாகி இருக்கிறது. இது மிகத் தவறு.

இது போல pent up feelings மனதை விட்டு வெளி வரும்போது அது ஒரு explosion ஐய்ப் போல மிகக் கொடுமையான விளைவுகளை விளைவிக்கும். அது மட்டுமல்ல இதனால் தான் மன்னிப்பு என்பது மன்னிக்கப் படுபவர்க்கல்ல மன்னிப்பவர்க்கு நன்மை பயத்து அவரது மன நலனையும் அவரது உறவுகளிடையே உறவுச் சிக்கல் இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது.

அதனால் தான் மறப்பது மட்டுமல்ல மன்னிப்பது மட்டும் தான் ஒரு முடிவான செயலாக மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே தான் சொல்கிறோம் விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்று.

மறுபடி பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


 

10 comments:

 1. அருமையான மனஅலைச்சலை அழகாக அலசி இருக்கின்றீர்கள் நண்பா... வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. தங்களது தளத்தில் இணந்து கொண்டேன் நண்பரே...

  ReplyDelete
 3. அநேகமாய் அவள் பெற்ற குழந்தை ,தொட்டில் குழந்தையாய் எங்கோ இருக்கும் !

  ReplyDelete
 4. விட்டுக் கொடுப்பது - நடக்கும் கால்களைப் போல இருக்க வேண்டும்...

  ReplyDelete
 5. நிச்சயமாக.
  சிரப்பான பகிர்வு

  ReplyDelete
 6. மிக அருமையான பதிவு. மன்னிக்கும் குணம் மனிதர்களை உயர்ந்த இடத்தில் வைக்கும், அது மட்டுமின்றி பல பிரச்சனைகளை தீர்க்கவும், சுமுகமான வாழ்வை வாழவும் வழி கொடுக்கும். உலகின் அனைத்து மதங்களும் இதனையே வலியுறுத்துகின்றன. மன்னிக்க கற்றுக் கொல்ல்பவனே சிறந்த மனிதன்.

  ReplyDelete
 7. சந்தேகமே இல்லை ஐயா.
  சிறப்பான பதிவு.

  ReplyDelete
 8. நல்லதொரு பகிர்வு. நம் அனைவரும் விட்டுக்கொடுக்கும் சமூகத்தை நோக்கி அடி எடுப்போம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...