வரமும் சாபமும்
வரமெல்லாம் வரமல்ல, சாபமெல்லாம் சாபமல்ல. என்ன குழப்புகிறேனா? இது குறித்துதான் இன்றைய பேச்சு.
உங்களுக்குத் தெரிந்த கதையைத்தான் சொல்லப் போகிறேன். இரண்டு கதைகள். இரண்டுமே புராணக் கதைகள்.
ஓர் அசுரன் சிவபெருமானை வேண்டி தவமிருந்து ஒரு வரம் பெற்றான். அது வேறு ஒன்றுமல்ல. தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் உட்னே எரிந்து சாம்பலாகி விடவேண்டுமென்பதுதான் அது.
தன் எதிரிகளை ஒழிக்க, தன் பலத்தைப் பெருக்கி எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்து தன் வாழ்நாளை நீட்டிக்க ஒரு வரம். வரத்தின் நோக்கம் இதுதான். . ஆனால் அது அவனுக்கு பயன் பட்டதா? அவனது புத்திக்கோளாறால் அவன் அந்த வரத்தைக் கொடுத்த சிவனிடமே அதை பரிட்சை செய்து பார்த்துவிட வேண்டி சிவனைத் துரத்த, கடைசியில் திருமால் சிவனைக் காத்திடும் பொருட்டு அந்த அரக்கனைக் கவர்ந்த நாட்டிய மங்கையாகி அவனை நாட்டியப் போட்டிக்கு இழுக்க அவனும் சிவனைத் துரத்தும் வேலையை மறந்து நடன மங்கையிடம் தன் சாமர்த்தியத்தியத்தைக் காட்ட வேண்டி தானும் நடன மங்கையின் அபினயனங்களை பின் பற்ற முடிவில் தன் தலையில் தானே கையை வைத்து எரிந்து சாம்பலாகிப் போனான்.
இங்கு அவனுக்குக் கிடைத்த வரமே சாபமாகிப் போனது.
இன்னுமொரு கதை.
இந்திரன் ஒருமுறை ஒரு ரிஷி வம்ச கன்னிப்பெண்ணின் மீது ஆசை கொண்டு அவளைக் கூட முயற்சித்த போது அந்தப் பெண் ' கணவனல்லாத ஒருவனுடன் சல்லாபிக்க மாட்டேன்' என இந்திரனின் இச்சைக்கு உடன்பட மறுக்க, உடனே இந்திரன் அந்தப் பெண்ணை ' நீ விபசாரியாகி பொருளுக்கு உன் உடலை விற்கக் கடவது' என்று சபித்தானாம்.
அந்த ரிஷி மங்கையோ தன் புத்திசாலித்தனத்தால், இந்திரனின் சாபப்படி சல்லாபம் வேண்டி தன் வீட்டுக் கதவைத்தட்டும் ஒவ்வொருவரிடமும், யார் ஒரு படி முத்தை விலையாகக் கொண்டு வருகின்றனரோ அவரே தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க இயலும் எனக்கூறி மறுத்துக் கொண்டே வந்தாராம். படி முத்தை விலையாகக் கொடுக்க யாராலும் முடியாததால் அந்த ரிஷிப் பெண் கன்னியாகவே இருந்தாராம். இறுதியில் தன் சாபம் பொய்த்துவிடக்கூடாதென்பதற்காக இந்திரனே ஒவ்வொரு இரவிலும் ஒரு படி முத்தைக் கொடுத்து சல்லாபித்து வந்தானாம். இந்திரன் கணக்குப்படி விலை பெற்றுச் சல்லாபித்ததால் அவள் விலை மாது. ஆனால் அந்த ரிஷிப் பெண்ணைப் பொருத்த மட்டில் இந்திரன் ஒருவனுடன் மட்டுமே தன் உடலைப் பகிர்ந்து கொண்டதால் தான் ஒரு பத்தினி. இந்திரனின் தர்மபத்தினி. யாரிடமும் சிக்காத play boy இந்திரனே இல்லறத்தில் சிக்கிய கதை இது.
இங்கு தனக்குக் கிடைத்த சாபமே ஒரு வரமானது.
இது எப்படி?
வரம் வரமாகவில்லை சாபம் சாபமாகவில்லையென்றால் situations nullify ஆகலாம் ஆனால் இங்கு situations reversal ஆகிறதே. இது எப்படி? இங்கு play ஆன attributes என்ன?
இது தெரிந்தால் நாமும் நமது சூழலை ஆளலாம் அல்லவா?
அன்புடன்
வேதாந்தி.

///வரம் வரமாகவில்லை சாபம் சாபமாகவில்லையென்றால் situations nullify ஆகலாம் ஆனால் இங்கு situations reversal ஆகிறதே. இது எப்படி? இங்கு play ஆன attributes என்ன?///
ReplyDelete//If we know what has changed the fate in the above cases, we can also have our own situations in our control... is int it?//
முதல் கதையில் அவனுடைய விபரீத எண்ணங்களும், இரண்டாவது கதையில் அவளின் புத்திசாலித்தனமும் அவர்களின் வரம், மற்றும் சாபத்தை மாற்றியிருக்கிறது.
இண்றய உலகிலும் மேலே சொல்லப்பட்ட அசுரனை போன்ற வேறு மாதிரியான, பலமும்(பணம் , அதிகாரம் போன்ற), அசுரர்கள் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் வழ்நாளில் அவர்கள் தண்டிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. ஏன்?.
இஙகு உதாரணத்துக்கு சொல்லப்பட்ட இரு கதைகளும், இன்றய யதார்த்த ,சராசரி மனித வாழ்வுக்கு பொருந்துமா?.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்லது. தங்கள் கருத்துக்கு நன்றி. உண்மையில் இந்தக்கதையை யதார்த்தத்தில் பொருத்தி பொருந்துமா அல்லவா என்பதை பேசத்தான் போகிறோம். வரும் பதிவில் இது குறித்த சிந்தனைகளும் தொடர்ந்து நம் நிலை குறித்தும் பேசுவோம். நன்றி நண்பரே.
ReplyDeleteவேதாந்தி