Followers

Monday, August 30, 2010

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 1

30.8.10

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி?



மனிதன் கல்லைத் தீட்டியபோதல்ல…தீட்டிய கல்லுடன் பதுங்கிய போதுதான் மிகச்சிறந்த ஓர் ஆயுதத்தினை உபயோகிக்க கற்றுக்கொண்டான். அதுதான் அறிவுஎன்னும் ஆயுதம். கல்லுடன் பதுங்கியது தனது எதிரியான விலங்கினை வெல்வதற்காக அவன் போட்ட முதல் strategy.


நான் முந்தைய பதிவில்(வரமும் சாபமும். சுட்டி: வரமும் சாபமும் ) குறிப்பிட்டிருந்ததை கவனிக்க. அதில் வரமெல்லாம் வரமல்ல என்றும் சாபமெல்லாம் சாபமல்ல என்றும் காட்டியிருந்தேன். தற்கால சூழலுக்கு இந்தக் கதை பொருந்துமா என்பது பலரின் சந்தேகம்..



சரியான வகையில் பயன் படுத்தும் போதுதான் ஆயுதமோ அல்லது அறிவோ நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது நான் மற்றொரு பதிவில் (வெற்றிகளும் தோல்விகளும். சுட்டி:  வெற்றிகளும் தோல்விகளும்) சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க. இந்தப் பதிவில் வெற்றிகளும் தோல்விகளும் மனதில் உணரப்படும் ரசாயணமாற்றங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வெறும் சூழல் மாற்றங்களே என்று காட்டியிருந்தேன். இன்னமும் சரியாகச் சொல்லப்போனால் சூழல்கள் நமக்கு ‘சாதகமாக’ இருந்தால் நாம் வெற்றி பெற்ற உணர்வை அடைகிறோம். அல்லவென்றல் அதற்கு மாறான உணர்வு மேலோங்குகிறது. இங்கு சாதகமானதென்பது, தான் விரும்பியபடி அல்லது தான் எதிர் பார்த்தபடி எனக்கொள்ளலாம் அல்லவா?


இப்போது நான் சொன்னவைகளை வைத்து ‘சூழல் அல்லது சூழலின் காரணிகளை’ தன் அறிவைக் கொண்டு ஆள்வது தான் வெற்றியை தன் வசப்படுத்திக் கொள்ளும் மந்திரம் எனக் கொள்ளலாமா?


இது மிகப் பிரபலமான SWOT analyais போலத் தோன்றினாலும் சற்றே மாறுபட்டது.


இதுவரை நான் வரையறுத்தது: சூழல், சூழல் மாற்றம், சாதகமான சூழல் மாற்றம் வெற்றி பெற்ற உணர்வையும் பாதகமான சூழல் மாற்றம் தோல்வி பெற்ற உணர்வையும் அளிக்கிறது. வெற்றியும் தோல்வியும் உணர்வுகளே. உணர்வுகளைத்தவிர்த்து அவைகள் வெறும் சூழல் மாற்றங்களே என்பவைகளாகும்.


திசை மாறாமல் பேசுவோம். பேசித்தேடுவோம்.
கவனமாகக் கையாளவேண்டியிருப்பதால், நிதானமாய், சிறுகச் சிறுக பேசுவோம்.



அன்புடன்

வேதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...