Followers

Saturday, June 27, 2015

தலையை எடுத்த ஒரு தலைக்கவசம்…


27.6.15
தலையை எடுத்த ஒரு தலைக்கவசம்…
 
Innovative rear – access helmet designed for safe post - accident removal.

 
இந்தப் பதிவு தலைக்கவசத்திற்கு எதிரானதல்ல
ஒரு உபகரணத்தை சரியான முறையில் பயன்படுத்தாமற்போனால் விளையும் ஆபத்தைக் குறித்துதான் இந்தப் பதிவு.
இது நடந்து ஒரு 40 வருடங்கள் இருக்கும்.
அந்த நேரத்திலும் இன்றைப் போலவே தலைக் கவசம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக நடந்த காலம். ஆனல் அப்போது இன்றைக்கு இருக்கிறதைப் போல மிக வேகமாகச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் இல்லை.
ஒருநாள் நான் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். மதியம் ஒரு 3 மணி இருக்கும். எனக்கு முன்பாக ஒரு சாலையோர டீக்கடை முன்பு ஒரே கூட்டம். தார்ச் சாலை நடுவில் ஒரு இரு சக்கர வாகனம் தாறுமாறாகக் கிடந்தது. சிதறிக்கிடந்த செருப்புகள். தூளாகிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள். மிகவும் தேடிப்பார்த்தால் மட்டுமே கண்ணில் தென்படும் சில ரத்தத் தெறிச்சல்கள். எல்லாம் ஒரு விபத்து நடந்திருப்பதை காட்டியது.
என்னவோ ஏதோ வென பதட்டத்துடன் கும்பலை விலக்கிப் பார்த்தேன்.
ஒரு இளைஞன். சட்டையில் ரத்தம் தொப்பலாக இருந்தது. விபத்தில் மாட்டியிருந்தான். அவனை அமரச் செய்து சட்டை பட்டன்களை விலக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தனர். விபத்துக்குள்ளான ஆசாமி நினைவுடன்தான் இருந்தார். எதிரில் இருந்த கடையில் யாரோ ஒருவர் ஆம்புலன்சுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.
நெற்றியிலிருந்தும் ரத்தம் முகத்தில் வழிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கண் ரப்பைகள் ரத்தத்தில் தோய்ந்து கனத்திருந்தது.
மலங்க மலங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் விபத்துக்குள்ளானவர்.
யாரோ ஒருவர் “தண்ணீர் கொடப்பா” என்று கத்தினார். ஒருவர் டீக்கடையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்.
அதுவரை அருகில் இருந்தவர், தண்ணீர் குடிக்க வசதியாக இருக்கட்டுமே என்று விபத்துக்குள்ளானவர் அணிந்திருந்த தலைக் கவசத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பக்கத்தில் தண்ணீர் தம்ளருடன் இருந்தவர் “சீக்கிரம்.. சீக்கிரம்..” என அவசரப்படுத்த தலைக் கவசத்தை சற்று அழுத்தமாக கழட்டி மேலேடுத்தார்.
சுற்றியிருந்த அத்தனைபேரும் அதிர்ந்து போனோம்.
தலைக்கவசத்துடன் விபத்துக்குள்ளானவரது தலையில் மேல் ஓடும் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது.
தலையைப் பிளந்ததுபோல அவரது மூளை ரத்தச் சேற்றில் வெளித்தெரிந்தது.
வெளிக்காற்று தலையின் பகுதியில் பட்டதும் விபத்துக்குள்ளானவர் மயங்கி விழுந்துவிட்டார்.
காணச் சகியாது நான் இடத்தை விட்டகன்றேன். அவர் இறந்து போனதாக பின்னர் எனக்குத் தெரியவந்தது.
இது ஏன் இப்படி நடந்ததென்று தெரியவில்லை.
அதுவும் தலை ஓடுகள் ஒன்றுடன் ஒன்று மிகச் சிக்கலாக இணைந்திருக்கும். அவைகள் complicated strong joints with zig zag formation ஆல் உருவானவைகள். அப்படியிருந்தும் இப்படி நடந்தது எப்படி என இதுவரை தெரியவில்லை.
ஒரு வேளை தலைக்கவசத்தினை பொறுத்தும்போது சரியான முறையில் பொறுத்தாததால் இது நடந்திருக்கலாம். அல்லது அந்த தலைக் கவசமே ISI தரத்திற்குட்படாத கவசமாக இருக்கலாம்.
ஆனாலும் இன்றுவரை என்னால் அந்தக் காட்சியை மறக்க முடியவில்லை.
மிகக் கொடூரமான காட்சி அது.
எந்த உபகரணங்களுக்கும் ஒரு பாதுகாப்பான உபயோகிக்கும் முறை உண்டு. அந்த முறையில் அதை பயன்படுத்தத் தவறினால் ஆபத்து எப்படியும் விளையலாம்.
இதைத்தான் Weird accidents, Weird incidents எனச் சொல்லுவார்கள்.
பாதுகாப்பாக இருப்போம். உயிர் உயர்ந்ததல்லவா – நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும்..?
 
இன்னமும் பேசுவோம்.
 
அன்பன்,
வேதாந்தி.
 
 
 
 

7 comments:

  1. சே...! என்ன கொடுமைங்க இது...?

    ReplyDelete
  2. ஹெல்மெட் அணிந்துமா இப்படி ?

    ReplyDelete

  3. தலைக்கவசம் அணிந்தாலும் விபத்தில் அதன்வழி இறப்பா? என்ன செய்ய?

    ReplyDelete
  4. அதிவேக பைக்குகளின் உற்பத்திக்கு தடை போட வேண்டும். ஹெல்மெட் சட்டம் என்ற பெயரில் மக்களைப் பாடாய் படுத்துகிறார்கள்.
    த.ம.4

    ReplyDelete
  5. பாதுகாப்புப் பொருட்களையும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பது உண்மைதான். நல்ல பதிவு

    ReplyDelete
  6. தலைக்கவசம்,உயிர்க்கவசம்;அதை உணர்ந்து அதைக் கையாள வேண்டும்

    ReplyDelete
  7. இதைப்படிக்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது. ஒரு பொருளைத் தயாரித்தலும், அதை முறைப்படி உபயோகித்தலும், மிகச்சரியாக இருக்க வேண்டும் என இதிலிருந்து தெரிகிறது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...