Followers

Friday, July 29, 2011

இதையும் இழப்பாய் இன்பசேகரா..!

29.7.11

இதையும் இழப்பாய் இன்பசேகரா..!



இது ஒரு சுவையான நிகழ்ச்சி. நாம் நமது வாழ்வில் தோல்விகளையும், அவமானங்களையும் எப்படி வெல்வது என்பதைச் சொல்லவே இதைப்பற்றி இங்கு பேசுகிறேன்.


எனது நண்பர், நேர்மையாய் இருக்க வேண்டும் என நினைப்பவர். தனது இளமைக்காலத்தில் உலகைத் திருத்துவதில் தன் பங்கும் உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் பாவம் அவர் சேர்ந்தார்ப்போல் அடிமேல் அடி வாங்கி தற்போது பழுத்து அடங்கி விட்டார். முதலில் நண்பர் விரிவுரையாளராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு வந்தது. இந்த வேலையில் தனது அறிவுக்கும் தான் சமுதாயத்திற்கு சேவை செய்யும்படிக்கான வாய்ப்பும் மிகவே கிடைக்கும் என நண்பர் எண்ணியதால் விரிவுரையாளர் பணியை விட்டுவிட்டு இந்த அரசுப் பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த பிறகே அவரது பணிச் சூழல் ஒரு சாக்கடை எனப் புரிந்தது. அது மிகப் பெரும் தொழிலதிபர்கள் வந்து போகும் ஒரு அரசு அலுவலகம். ஊழல் மிகச் சாதாரணம். ஒரு சாதாரண O.A வே தினமும் 1000/-  உரூபாய்க்குக் குறையாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்வானாம். நண்பருக்கு மிகவும் கவுரவமான B category officer பதவி. A category officer promotion எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.  இவரது பதவியில் இருப்போர் தனக்கு வேண்டுமென்கிறவசதிகளை வெகு எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும்படிக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.



ஆனால் நண்பர் ஒரு ஊழல் எதிர்ப்பு வாதியாயிற்றே.. ஆரம்பத்திலேயே இவரது எண்ணங்களை வெளிப்படுத்தி தன் சகாக்களிடம் பிரசங்கித்ததால் எல்லோரும் இவரை தங்களது கொள்கைக்கு ஒத்துவராத ஓர் கொள்கைவாதி என அடையாளம் கண்டு கொண்டனர். பிறகென்ன இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். இவருக்கு ஒப்புக்குச் சப்பான் வேலை கொடுக்கப் பட்டது.  பிழைக்கத் தெரியாதவர் எனப் பட்டம் வேறு.


அவ்வளவுதான். இவரை மதிப்பாரில்லை. ஆனாலும் நண்பர் கலங்கவில்லை,  தனது கொள்கையையும் அதில் இவர் கொண்டிருந்த உறுதியையும் விட்டாரில்லை. ஒரு கட்டத்தில் இவர் ஒரு விருப்பு வெறுப்பில்லாத சாமியாரைப்போலவே ஆகி விட்டார். அதிக பணம் புழங்கும் ஒரு அலுவலகத்தில் இப்படி ஒரு ஆசாமியைப் பார்ப்பது அபூர்வம். 


“எதைக் கண்டும் நாம் மயங்க வில்லை” என்ற எண்ணத்திலும் ,  “நான் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் “ எனும் தொனியிலும் நண்பர் வலம் வந்தார்.



ஒருமுறை இவரை ஒரு steno சற்று உரத்துப் பேசியும், நக்கலடித்தும் மற்றவர் முன்னிலையில் இவரை  உதாசீனப்படுத்தி விட்டார். அந்த நேரத்தில் நண்பர் சற்றுக் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார். அவரது மனம் புண்பட்டுப் போனது. மருகினார். தனது பதவிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காதது கண்டு உள்ளம் வெம்பினார். தனது படிப்பும் வீணாகிப் போனதே என்று நொந்தார். இவர்களை இப்படியே விடக்கூடாது எனவும் அவருக்குத் தோன்றியது.


உடனே நண்பர் தன் இருக்கையை விட்டு எழுந்து அந்த steno இருந்த இடத்திற்குச் சென்றார்.  நெற்றியில் பட்டையாய் விபூதியும்,  குங்குமமும்  அணிந்திருந்த அவரைச் சுற்றி நின்று அவரது நண்பர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நண்பர் நேரே சென்று தன்னை அவமானப்படுத்திய steno வின் கைகளைப் பிடித்துக் கொண்டு , ‘என்னை மன்னித்து விடுங்கள் ‘ என்றார். அவரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் திகைத்துப் போனார்கள்.



“நான் எனது அதிகாரத்தைப் பற்றி ஆசைப்படாமலும், முறையற்ற பணம் என்னை சலனப் படுத்தாமலும் மற்ற இந்த உலகின் பிடிமானங்கள் என்னை அனுகாதவாறு நான் உறுதியாய் இருந்தேன். ஆனால் சற்று முன் நீர் என்னை அவமானப் படுத்தியபோது சட்டென்று கோபப்பட்டு உம்மீது வெறுப்பை ஏற்றேன்.  நன்கு யோசித்த போதுதான் தெரிந்தது நான் எல்லாவற்றையும் இழந்தும்,  ‘நான்’  என்கின்ற ‘எனது’ அடையாளத்தை மட்டும் இழக்கவில்லை. நீர் அந்த ‘நான்’ ஐ த்தான் அடித்து அவமானப் படுத்தினீர்கள். பிறகுதான் தெரிந்தது எம்பெருமான், சிவப் பழமான  தங்கள் மூலமாக எனக்கு , “ இதையும் இழப்பாய் இன்பசேகரா..!” என்று உணர்த்தியிருக்கிறார்.  என்னை இதை உணரவைத்து எம்பெருமானை நோக்கி இன்னும் ஒரு அடி நகர்த்தியமைக்கு நன்றி “ என்றார்.



நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிந்திருந்த அந்த steno வும் மற்றையோரும் திகைத்துப்போய் நின்றனர்.



சில நேரங்களில் சில இழப்புகள் நமக்கு பெரும் லாபத்தைத் தரலாம். நாம் அதை உணரத் தயாராய் இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை . இந்த வாழ்க்கையில் நாம் இழப்பதை விட அந்த இழப்பில் பெறுபவைகள் பெரு மதிப்பிற்குரியவைகள். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



16 comments:

  1. தலைப்பு அருமையாக இருக்கிறது சகோ..

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ கருன்
    @ Rathnavel
    @ ரியாஸ் அஹமது..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. சில நேரங்களில் சில இழப்புகள் நமக்கு பெரும் லாபத்தைத் தரலாம். நாம் அதை உணரத் தயாராய் இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை . இந்த வாழ்க்கையில் நாம் இழப்பதை விட அந்த இழப்பில் பெறுபவைகள் பெரு மதிப்பிற்குரியவைகள். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.


    ...... very nice message. நல்ல கருத்துக்களை கொண்ட பதிவுங்க.

    ReplyDelete
  6. @ chitra..

    நெடு நாட்களுக்குப் பின் தங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது..

    நன்றிகள்

    ReplyDelete
  7. சில நேரங்களில் சில இழப்புகள் நமக்கு பெரும் லாபத்தைத் தரலாம். நாம் அதை உணரத் தயாராய் இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை .//
    நல்ல பதிவு.

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    உங்கள் பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் உணவுலகத்திலும்,மனோ அவர்கள் பதிவிலும் பார்த்தேன்.உங்கள் அனைவரின் தொண்டுள்ளமும் போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  9. @ போளூர் தயாநிதி..

    @ சி.பி. செந்தில் குமார்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    @ Murugeswari Rajavel..

    நீங்கள் குறிப்பிடுவது வேறு யாரையோ என நினைக்கிறேன். அது நானல்ல.

    ஆயினும் பதிவுலகில் உள்ளோர் பெரும் தொண்டுள்ளத்துடன் இருப்பதை அறிவேன். இது போற்றுதலுக்குரியதுதான்.

    நான் பதிவுலகில் பழக்கமானவன் அல்ல.
    புதியவன்.

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகள் சில பார்த்தேன், படித்தேன். வெட்டிப்பேச்சு என்று கூறிக்கொண்டாலும் எழுதுவது எதுவுமே வெட்டியில்லை. சமூக அக்கறையுடன் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் வேதாந்தி.

    ReplyDelete
  11. தேவையான பதிவு. சிறப்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. @ G.M Balasubramaniam,

    @ சந்திரகெளரி..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  13. //சில நேரங்களில் சில இழப்புகள் நமக்கு பெரும் லாபத்தைத் தரலாம். நாம் அதை உணரத் தயாராய் இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை .//
    அருமையான விஷயம். சொல்லியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு!
    பசுபதி
    http://s-pasupathy.blogspot.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...