Followers

Tuesday, August 11, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII


11.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII





7. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII

 

நண்பர் சொன்னதைக் கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது இத்தனை நாட்களும் இந்தப் போலிப் பத்திரம் இருந்திருக்கிறது. அது யாருக்கும் தெரியவில்லை. அந்த தைரியத்தில்தான் கட்சிக்காரன் அத்துமீறல் செய்திருக்கிறான். மீறி வழக்குப் போட்டால் அது ஒரு 25 வருடங்கள் இழுக்கும். அதற்குள் அத்துனை பெரும் சலித்துப்போய் வீட்டை விற்று விட்டுப்போய் விடுவார்கள் என்பது கட்சிக்காரனது கணக்கு.

“அது சரி. அந்த கடிதத்தை உங்களுக்கு யார் அனுப்பி வைத்தார்கள்?” நான் கேட்டதற்கு நண்பர் தொடர்ந்தார்.

“என் பெயருக்கு வந்திருந்த அந்தக் கடிதத்தில் இருந்த அனுப்புனரின் விலாசத்தைத் தேடி அண்ணாநகர் முழுக்க அலைந்தோம். கிடைக்கவில்லை. அந்த பீட் தபால் காரரையும் கேட்டேன். தபால் காரர் ‘அந்தத் தெரு இருக்கிறது ஆனால் நீங்கள் குறிப்பிடும் வீட்டு எண் இல்லை’ என்றார். (கட்சிக்காரனிடம் வீட்டை விற்று ஏமாந்த விற்பனையாளர்தான் இந்த ஆவணத்தின் நகலை கடிதத்துடன் எனது விலாசத்திற்கு அனுப்பி வைத்தார் என்று பின்னாளில்தான் தெரிந்தது. நாங்கள் பொது இடத்தை கட்சிக்காரன் உபயோகப் படுத்தவிடாமல் தடுத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டவர் இந்த ஆவணத்தையும் எங்களுக்கு அனுப்பிவைத்து கட்சிக்காரனை தன் கணக்குக்கும் பழி தீர்த்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.)

அனுப்பியவர் விலாசத்தில் குறிப்பிட்ட எண் கொண்ட வீடே இல்லாததால் இந்த கடிதத்தையும் ஆவணத்தையும் நம்புவதா வேண்டாமா என்று எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.

அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எங்களது குடியிருப்பின் சர்வே நெம்பர்களை கொடுத்து வில்லங்க சாண்றிதழ் கேட்டோம். அதில் எனக்கு தபாலில் வந்திருந்த மூண்று ஆவணங்களின் பதிவும் அதன் எண்களும் வந்திருந்தன.

நாங்கள் அத்தனை பேரும் அதிர்ந்து போனோம். ஏதோ ஒரு ஓநாய் எங்கள் நெஞ்சைப் பிடுங்கிக் குதறியதைப் போன்றதொரு உணர்வு.

மிகக் கச்சிதமாக போலிப்பத்திரம் தயாரித்து இருந்தான்.

முதல் ஆவணம் கட்சிக்காரனது மனைவியால் உருவாக்கப்பட்டு ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு கிரயம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண் அந்தப் பதிவைப் பெற்ற பிறகு அதை அவளது கணவன் பெயருக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அந்தக் கணவர் அதற்குப்பின் அதை இன்னொருவருக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்சொன்ன ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களைக் கேட்டு  விண்ணப்பித்தோம். அதில் முதல் ஆவணம் SECTION 47 A விதி முறையின் கீழ் சரியான பத்திரப் பதிவுக் கட்டணம் செலுத்தப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்தது. அண்ணாநகரில் உள்ள சொத்தை கிரயம் செய்ய லட்சக்கணக்கில் பதிவுக் கட்டணம் ஆகுமே! அதைத் தவிர்க்க இப்படிச் செய்திருக்கிறான் கட்சிக்காரன்.

போலி ஆவணங்களில் கண்ட நபர்களைப் பற்றி விசாரித்தோம். அவர்கள் அனைவருமே கட்சிக்காரனின் பினாமிகள் எனத் தெரிந்தது. அது மட்டுமல்ல இதைப்போன்றே கோடிக்கணக்கில் மதிப்புடைய நிலங்களை வேளச்சேரியில் கட்சிக்காரன் அபகரிப்பில் ஈடுபட்ட மற்றோர் சம்பவத்திலும் இவர்களது பெயரே அடிபட்டது.

என்ன செய்ய எனப் புரியவில்லை. எட்டு மாதங்கள் ஓடின.

அப்போதுதான் கடவுளாய்ப்பார்த்து திறந்த வழி ஒன்று கிடைத்தது.

ஆட்சி மாறியது. அடுத்த ஆட்சியின் தலைமை தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்றங்கள் நில அபகரிப்பு குற்றங்கள் என்பதால் சட சடவென சாமானியர்களை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்தது. நில அபகரிப்பு தடுப்புக்கென குற்றப்பிரிவில் ஒரு தனி செல் உருவாக்கியது. அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் இதைப்போன்ற குற்றங்களின் பட்டியல்களைக் கேட்டது. இப்படிப்பட்ட போலிப்பத்திரங்களை ரத்து செய்ய INSPECTOR GENERAL, REGISTRATION க்கு உரிமையைக் கொடுத்தது.

இந்த மாறிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்டோம். உடனே எங்கள் குடியிருப்பின் பொது இடத்தை அபகரிக்கும் நோக்கோடு தயார் படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட போலி ஆவணங்களை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவைத் தயாரித்து INSPECTER GENERAL, REGISTRATION க்கும், எங்களது குடியிருப்பின் பொது இடத்தில் 800 சதுர அடியை போலிப்பத்திரம் தயார்செய்து சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக கட்சிக்காரன் மீதும் குடியிருப்பின் விற்பனையாளர் (APARTMENT PROMOTER) மீதும் புகார் பதிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப்  பிரிவிற்கும் ஒரு புகார் மனு தயார்செய்து சமர்ப்பித்தோம்.

ஆட்சி மாறியதால் காரியங்களை நகர்த்துவது எளிதாக இருந்தது.

INSPECTER GENERAL, REGISTRATION எங்கள் மனுவைப் பெற்று ASSISTANT INSPECTER GENERAL, REGISTRATION க்கு ‘பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும்’ என குறிப்பெழுதி அனுப்பி வைத்தார்.

 
 
ஆட்சி மாறினாலும் ஒவ்வொரு இடத்திலும் கட்சிக்காரனது இடையூறு இருப்பதை உணர முடிந்தது. IG அலுவலகத்திலிருந்து கடிதத்தை AIG அலுவலகத்திற்கு FORWARD செய்யவே மிகுந்த பிரயத்தனப்பட்டேன். அந்த கிளர்க் அசரவில்லை. கடைசியில், ‘இதோ பார். நானும் அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரியாக பணிபுரிகிறேன். நீ உன் கடமையைச் செய்யாவிடில் உன் சீட்டிற்கு ஒதுக்கப்பட்ட பணி, அதை நீ முடித்த காலம், தாமதப்படுத்தப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை, தாமதங்களின் காரணம் என பல கேள்விகள் RTI யில் கேட்டு உன் சீட்டுக்கே உலை வைத்துவிடுவேன். ஜாக்கிரதை’ என பயமுறுத்திய பின்னரே சற்று பயந்து உடனே கடிதத்தை AIG அலுவலகத்திற்கு FORWARD செய்தான்.

AIG விசாரணை நடத்தினார். ஆனாலும் அவரும் நடவடிக்கை எடுக்கத்தயங்கினார். ‘பதியப்பட்ட சொத்து உங்களுடையதுதான் என உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கா’ என்றார். நாங்கள் எங்களிடமிருந்த சொத்து ஆவணங்களையும் அதனோடே அனுமதி பெறப்பட்ட வரைபடத்தின் நகலையும் காட்டினோம். அவர் சமாதானமடையவில்லை. ‘வேறேதேனும் இருக்கா?’ என்று கேட்டவர், ‘நீங்கள் வழக்குப் போடலாமே?’ என்றார். நான் பொறுமையிழந்தேன்.

‘சார் கண்டிப்பாக நீங்கள் இந்தப் போலிப் பத்திரத்தை ரத்து செய்ய மறுத்தால் வழக்குத்தான் போடப்போகிறோம். ஆனால் குற்றம் புரிந்தவன் மேல் போடமாட்டோம். மாறாக உங்கள் மீதும் அண்ணாநகர் சார் பதிவாளர் மீதும் எங்கள் சொத்தை அபகரிக்க குற்றவாளிக்கு துணைபோனதாக வழக்கு போடுவோம்’ என்றேன்.

சற்றே திடுக்கிட்ட AIG ,’என்ன சொல்கிறீர்கள்?’ என்றார்.

‘ஆமாம் சார். இந்த ஆவணத்தை பாருங்கள்’, என்று போலி ஆவணத்தின் நகலைக் காட்டி பேசினேன். ‘இந்த ஆவணத்தை சார்பதிவாளரது அதிகாரத்திலுள்ள ஒரு அதிகாரி களத்தில் ஆய்வு செய்திருக்கிறார். இந்தப் பத்திரம் பதியப்பட்டவுடன் களப்பணி என குறியிட்டு அவருக்கு மார்க் செய்யப்பட்டுள்ளது. அவருடைய ஆய்வில் இந்த ஆவணத்தில் கண்டவைகள் சரியான தகவல்கள் என உறுதி செய்யப்பட்டபின்பே பத்திரப்பதிவு முடிந்திருக்கிறது. பத்திரத்தில் சொல்லியிருக்கிற சர்வே எண் எங்கள் குடியிருப்பைச் சார்ந்தது. அதில் சொல்லப்பட்ட SCHEDULE A AND B இதோ இந்த குடியிருப்பின் அனுமதி பெறப்பட்ட வரைபடத்தில் உள்ளது. இதைப் பார்த்துச் சொல்லுங்கள் ‘வீடு கட்டும் காலி மனை’ என போலிப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள 800 சதுர அடி இடம் இங்கு எங்கே 'வீடு கட்டும் காலி மனை'யாக உள்ளது?’ என்றேன்.

நான் சொல்வதை நம்ப முடியாதவர் போல பேந்தப் பேந்த விழித்தவர் சற்று சுதாரித்துக் கொண்டார். எங்களிடம் விசாரணக்கான தகவல்களை எழுத்தில் பெற்றுக் கொண்டார். கட்சிக்காரனுக்கும் விசாரணைக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனுக்கு இன்னும் இரண்டு அறிவிக்கை கொடுத்தபின்னர் நான் நடவடிக்கை எடுத்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்றார்.

AIG சட்டப்படிப்பை முடித்தவர் போல. அவரது பெயருக்குப் பின்னால் ML பட்டம் இருந்தது. எனவே நாங்கள் சொல்வதின் பொருளை சரியாக புரிந்து கொண்டார்.

இரண்டு மாதங்கள் கழித்து அந்த போலிப்பத்திரங்களை ரத்து செய்யச் சொல்லி AIG, அண்ணாநகர் சார்பதிவாளருக்கு ஆணை பிறப்பித்து அதன் நகலை எங்களுக்கு அனுப்பிவைத்தார்.

போலி ஆவணங்கள் ரத்து ஆயின.

அதே போல நில அபகரிப்பு தடுப்புப் பிரிவிலிருந்தும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கட்சிக்காரன் மேல் FIR பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும்படி உத்தரவும் வந்தது.
 

பிரச்சினை முடிந்தது என்று மகிழ்ந்தோம். ஆனாலும் TERRORIST களின் SLEEPER CELL களைப் போல குள்ளநரித் தனத்துடன் எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சினையாக உருவாகும்படிக்கு கட்சிக்காரன் இன்னுமொரு ஏற்பாடும் செய்திருந்ததை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தோம்.”

மேலும் நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

பதிவைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX

அன்பன்,

வேதாந்தி.

 

 

6 comments:

  1. sir, your title gives me a relief that your friend has walked the full distance.(i.e, the matter has come to an end (presumably))

    Following.....

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே விடுபட்டவைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. அடங்க மாட்டாங்களே!
    காத்திருக்கிறேன்

    ReplyDelete
  4. தொந்தரவு தீராது போல... தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. Very intresting. Im waiting for next part.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...