Followers

Tuesday, July 7, 2015

ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - I


6.7.15

ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - I

 
 
இது வரை மனம் பற்றி பேசியவன் இப்போது பணம்  பற்றி பேசுகிறேன்.

ஏனெனில் நமது உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிக முக்கியம். இது இரண்டிற்கும் தேவை பணம். அதனால் இதைப் பற்றி பேசுவதும் அவசியம். பதிவுலகில் Banking & Finance Industry ல் இருந்து ஓய்வு பெற்ற மிகப் பேரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள். இது என்னுடைய speciality யே அல்ல. ஆனால் இதுவரை இது குறித்த பதிவு எதையும் நான் பார்த்ததாய் நினைவில்லை. அதனாலேயே இதை எழுதுகிறேன். இந்த பொருள் குறித்து அவர்களையும் எழுதும்படி விண்ணப்பமும் வைக்கிறேன்.

இனி பொருளுக்கு போவோம்.

I.        செலவைக் குறைப்பது:

முதலில் நமது வரவையும் செலவையும் வரையறை செய்து கொள்ளவேண்டும். வரவில் செலவு மூண்றில் இரண்டு பங்குக்குள்தான் இருக்கவேண்டும். இதுதான் முக்கியமான விதி. மீதமுள்ள மூண்றில் ஒரு பங்கு கட்டாய சேமிப்பாக இருக்க வேண்டும். இது நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தாலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது. சொல்லப்போனால் முதல் மாத சம்பளம் வாங்கியதிலிருந்தே இதை கடைப்பிடித்தல் நலம்.

நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்து இந்த விதியைக் கடைப்பிடித்தால் உங்கள் கையில் திருமணத்தின் போது கணிசமாக சேமிப்பு இருக்கும். இதையே அதற்கப்புறமும் கடைப்பிடித்தால் (கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்) குழந்தை பிறப்பதற்கு முன்பே கணிசமான சேமிப்பு இருக்கும்.

1.    செலவைக் குறைக்க - நெறிப்படுத்த வழிகள்:

அ.   முதல் வழி மற்றும் முக்கியமான வழி discipline. Financial discipline ஒரு மிகப் பெரிய மந்திரம். இதைக் கடைப்பிடித்தால் நமக்கு குறையே வராது.

ஆ.  இரண்டாவது வழி living style. நமது வாழ்க்கை முறை மிக முக்கியமானது. நாம் வாழ நினைக்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்றார்ப்போல் வரவைப் பெருக்கிக் கொள்வதை விட நம்மால் சேமிப்பு போக மீதி இருக்கும் தனத்தில் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
 
 
 
இ. செலவுகளில் good expenses மற்றும் bad expenses ஆகியவைகளை தரம் பிரிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். செலவுகளை தள்ளிப்போட முடிந்தால் தள்ளிப்போடவும் தவிர்க்க முடிந்தால் தவிர்க்கவும் பழக வேண்டும். தேவையில்லாதவைகளை வாங்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது.
 
இந்தக் கோட்பாட்டின் பலனையும் பயன்களையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி மற்றவர்களும் இதைப்பற்றி  தெரிந்திருப்பது அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று மிகுந்த பலனைத்தரும்

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணம் செலவல்ல அது ஒரு மூலதனம்.

நாம் இப்படிச் செய்வதால் நமக்கு போனசாக value added life  கிடைக்கும். நாம் முறையற்ற செயலில் வரும் பணத்திற்கு ஆசைப்படமாட்டோம். நெறி பிறழவைக்கும் எந்தச் செயலும் நம்மைத் தூண்டாது. இது மட்டுமல்லாது நமது பிள்ளைகளுக்கும் நாம் ஒரு முன் மாதிரியாக இருக்கமுடியும்.

இப்படி நாம் செலவுகளை முறைப்படுத்தி, அதற்கான வாழ்வுமுறையைத் தேர்ந்தெடுத்து பின் முறையாக வாழ்வது நலம் பயக்கும்.

அடுத்த பதிவுகளில் சேமிப்பை பெருக்குவதைப் பற்றி பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

பதிவைத் தொடர: ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - II

 

7 comments:

  1. என் அம்மா அந்தக்காலத்தில் சொல்வார்கள்,ஒரு ரூபாய் செலவழிக்குமுன் இது அவசியமா என்று நன்கு யோசித்த பின்னே செலவு செய்வேன் என்று!
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஹி...ஹி...நீங்கள் எத்தனை கோடி சேர்த்துள்ளீர்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஜீ.. இந்தத் தொடரின் இறுதியில் உங்களது கேள்விக்கு பதில் நிச்சயம் உண்டு.

      Delete
    2. நான்தான் முந்திரிக் கொட்டைத் தனமா கேட்டு விட்டேனா :)

      Delete
  3. மூலதனம் உட்பட பல நல்ல ஆலோசனைகள்... தேவைக்கேற்ப வாழ்வது தான் வாழ்க்கை...

    ReplyDelete
  4. ஒரு செலவை கொஞ்சம் தள்ளிப் போட்டால் தெரிந்து விடும் அது முக்கியமானதா இலையா என்று. நல்ல ஆலோசனைகள் தொடரட்டும்

    ReplyDelete
  5. வெட்டிப்பேச்சு இல்லை. மிகவும் உருப்படியான செய்திகள். நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...