Followers

Saturday, May 16, 2015

அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு..!


16.5.15

அனுமனுக்கு மறுக்கப்பட்ட  அலவன்சு...!



          பேசி நாளாயிற்று. அதுவும் ஊரே வம்பு பேசும் வேளையில் அமைதியாய் இருப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. எனவே இன்று ஒரு வேடிக்கையான செய்தியைப் பற்றி பேசுவோம்.

நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு திரும்புகின்றனர்.

 

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது. காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1.   அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2.   அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3.   அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage. Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப் படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப் படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார். அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார். “எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன். அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார். கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

     கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில் அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்” எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

     அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின்  பயணப்படி sanction ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1.   அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப் பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப் பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2.   அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான அனுமதி அளிக்கப் படுகிறது.

3.   அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப் படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

அம்மையாரின் வழக்கைப்பற்றிய பேச்சின் தொடர்தான் இது என எனக்குத் தெரியவந்தது. நான் LAWS, RULES AND ETHICS பற்றி யோசித்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தேன்.

வழக்கத்தில் இருக்கும் இது எத்துனை மோசமான ஒன்று என நினைக்கும் போதே மனதை புரட்டியது.

இன்னமும் பேசுவோம்.                         

 அன்பன்,

வேதாந்தி.






 

7 comments:

  1. நல்ல நகைச்சுவை. படித்து முடித்தவுடன், இதே கருத்தினை மையப்படுத்தி, அய்யா திரு V.G.K (வை.கோபலகிருஷ்ணன்) அவர்கள் முன்பு எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது.”லஞ்ச லாவண்யங்கள் ! ( http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html)” என்பது அந்தப் பதிவு)

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் லிங்க் கொடுத்த பிறகுதான் அய்யாவுடைய பதிவைப் பார்த்தேன். நான் ஆடிட்டர் விழவில் சொன்னதையே இங்கு பகிர்ந்து கொண்டேன். ஒருவேளை இந்தக் கதை அடிட்டர்கள் மத்தியில் மிகப் பிரபலமோ என்னவோ..?

      என்னை விட அய்யா சிறிது detail ஆக சொல்லியிந்ததையும் கவனித்தேன். அவரே அவருக்கு வந்த மெயில் ஒன்றிலிருந்துதான் எடுத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

      மற்றபடி இது காப்பி அடிக்கவேண்டும் என்ற என்னத்தில் இல்லை. அத்தகைய ஒரு பிம்பத்தை இது ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

      அந்த ஆடிட்டர் சொன்ன இன்னொரு செய்தி: " We people are very good at interpretation. " என்று சொல்லி, "ஒரு ஓவருக்கு எத்துனை பால்?" என்றார். நான் ஆறு என்றேன். உடனே அவர், 'We will say one ball bowled six times.." என்றார்.

      எனக்கு வேடிக்கையாக இருந்தது.

      Delete
    2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுகள்.

      இந்த அனுமன் பற்றிய கற்பனைக்கதை ஏற்கனவே ஆங்கிலத்தில் 01 09 2012 அன்று மின்னஞ்சல் மூலம் எனக்கு என் BHEL DELHI தோழி ஒருவரால் அனுப்பப்பட்டது.

      அதில் நான் என் நகைச்சுவைகளையும் கலந்து தமிழாக்கம் செய்து அன்றே ஒரு பதிவாக என் பாணியில் வெளியிட்டிருந்தேன்.

      அதற்கு இது வரை என் பதில்களையும் சேர்த்து 188 பின்னூட்டங்கள் காட்சியளிக்கின்றன :)

      அதைத்தான் நம் நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் மேலே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

      பிறமொழிகளில் வந்த, அல்லது பிறர் மூலம் நாம் கேள்விப்படும் சுவையான கதைகளையும் சம்பவங்களையும் யார் வேண்டுமானாலும் அவரவர் பாணியில் தமிழாக்கம் செய்து வெளியிட்டுக்கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை. அதைக் COPY & PASTE செய்ததாக கருதவும் இடம் இல்லை.

      முடிந்தால் என்னைப்போலவும், தங்களைப்போலவும் இதன் மூலம் எங்கிருந்து எப்படி எடுக்கப்பட்டது என்பதைத்தெரிவித்து, அவர்களுக்கும் நம் பதிவினில் ஓர் நன்றி கூறிவிடுவதும் நல்லது.

      //மற்றபடி இது காப்பி அடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அத்தகைய ஒரு பிம்பத்தை இது ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.//

      இதில் மன்னிப்புக்கே அவசியம் ஏதும் இல்லை ஐயா. எனக்கும் மகிழ்ச்சி மட்டுமே. :)

      அன்புடன் VGK

      Delete
  2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

    ReplyDelete
  3. மாமியார் உடைத்தால் மண் குடம்.......... என்ற பழமொழி உண்மைதான் :)

    ReplyDelete
  4. அன்புள்ள வேதாந்தி அவர்களுக்கு வணக்கம். நான் சாதாரணமாகத்தான் எனது கருத்துரையை சொன்னேன்.




    // மற்றபடி இது காப்பி அடிக்கவேண்டும் என்ற என்னத்தில் இல்லை. அத்தகைய ஒரு பிம்பத்தை இது ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். //

    உங்களை தவறாக ஏதும் சொல்லவில்லை. சிலசமயம் வலையுலகில், இரண்டுபேர் ஒரே மாதிரி எண்ணுவதும், எழுதுவதும் நடப்பதுண்டு. மேலும், நீங்கள் குறிப்பிட்டதைப் போல, திரு V.G.K அவர்களே, தனனக்கு வந்த மெயில் ஒன்றிலிருந்துதான் தான் எடுத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். எனவே தங்கள் இருவருக்குமே ஒரே மாதிரி எழுத தோன்றியதில் வியப்பில்லை.

    நான் தேவையில்லாமல், தங்களை குழப்பி விட்டேன் என்றே நினைக்கிறேன். அதற்காக மன்னிக்கவும்.

    இந்த பதிவு பற்றியும் எனது கருத்துரை பற்றியும், திரு V.G.K அவர்களிடம் (சாதாரணமாக எல்லாவற்றையும் எப்போதும் சொல்வது) போல் தெரிவித்து இருந்தேன். அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதி இங்கே.

    //////
    அன்புள்ள ஐயா, வணக்கம்.

    என் டேஷ்போர்டில் அது 2 நாட்கள் முன்பே காட்சியளித்தது. நானும் உள்ளே சென்று பார்க்க நினைத்தேன். ஆனால் அந்தப்பதிவு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் இருந்தது.

    இன்று மீண்டும் வெளியிட்டுள்ளார் போலிருக்கிறது. அதனால் பரவாயில்லை. இதில் உள்ள கதையின் கரு என்னுடையதும் அல்ல. அவருடையதும் அல்ல. யாரோ ஆங்கிலத்தில் மின்னஞ்சல் மூலம் வெகுகாலம் முன்பே எல்லோருக்கும் அனுப்பியிருந்த ஒன்றே ஆகும்.

    நான் அதில் கொஞ்சம் என் பாணியில் நகைச்சுவைகளைக் கலந்து வெளியிட்டிருந்தேன். இப்போது இவர் தனது பாணியில் வெளியிட்டுள்ளார்கள்.

    எனது பதிவினில் http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html
    கடைசியாக ஓர் குறிப்பும் கொடுத்துள்ளேன். இதோ அதனை மீண்டும் இங்கு தங்களுக்குக் கீழே கொடுத்துள்ளேன்:

    -=-=-=-=-=-=-=-=-

    லஞ்ச லாவண்யங்கள் !

    இராமாயண காலத்திலிருந்தே துவங்கியிருக்கலாமோ?



    [முழுவதும் கற்பனையான இந்த நிகழ்வு பற்றி,

    ஆங்கிலத்தில் ஓர் மின்னஞ்சல், இன்று காலையில் என்

    தோழி ஒருவரால், என்னுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.



    நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில்

    இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத்

    தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு

    தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்]



    என்றும் அன்புடன் தங்கள்,

    VGK

    ///////

    ReplyDelete
  5. அய்யா, நான் ஏற்கனவெ குறிப்பிட்டிருந்தது போல இது என்னுடைய கற்பனை அல்ல. நண்பரது விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்த கதைதான் இது. நான் ஊழல் பற்றிய உரத்த சிந்தனை கொண்டவனானதால் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். மற்றபடி நான் இந்த பதிவை வெளியிட்டபோது அதில் சில திருத்தங்கள் செய்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றிய எனது கடைசி சிந்தனை இந்தப் பதிவை மறுபடி DRAFT க்கு REVERT செய்ய வைத்தது. அதனால்தான் இந்தப் பதிவு உங்கள் டேஷ் போர்டில் தெரிந்துள்ளது. இந்தப் பதிவின் தலைப்பே மாறியுள்ளது அதை கவனித்தீர்களானால் தெரியும்.

    மற்றபடி என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள சூழல் காரணங்களும் மற்றவைகளும் இருந்த போதும் இதை இயல்பாய் எடுத்துக் கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.
    நன்றி.
    God Bless You

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...