Followers

Monday, May 18, 2015

முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும்…


18.5.15
முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும்…
சில காலத்திற்கு முன் நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி மிகவும் மனதைக் கலக்கியது.
தமிழ் நாட்டில் Animal Husbandary பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு அம்மையார், அமெரிக்காவிலிருக்கும் தன் ஒரே பிள்ளை தனது மருத்துவச்செலவுக்குக் கூட பணம் அனுப்ப மறுக்கிறான் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இதில் என்ன கொடுமையென்றால் அந்த அம்மையாருக்கு திருமணம் முடிந்து வயிற்றில் பிள்ளை இருக்கும் போதே தனது கணவரை இழந்திருக்கிறார். அதற்குப்  பின்னர் மறு மணம் புரியாமல் தனது வாழ்க்கை முழுவதுமே தன் பிள்ளைக்காகவே வாழ்ந்திருக்கிறார். இது யாருடைய உதவியும் இன்றி தனது உழைப்பாலேயே தன் பிள்ளையை அவன் அமெரிக்காவில் சென்று செட்டிலாகும் வரை உயர்த்தியிருக்கிறார். தற்போது தனது முதுமையில் தனக்கு மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்பச் சொல்லி கேட்டபோது பிள்ளை அந்த அம்மையார் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுத்தால் மட்டுமே பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறான்.

 
இதுதான் தன் வாழ்க்கையையே தனக்கென அர்ப்பணித்து மூதடைந்த தனது தாய்க்கு அவன் செய்யும் பிரதி பலன். தனது மகனின் இந்தச் செயல் அவரை மிகவும் வெறுப்படையச் செய்யவே காவல் ஆணையரிடம் புகார் அளிக்கும் வரை சென்றிருக்கிறார் அந்தத் தாய்.
இன்னுமொரு செய்தி. வெகுநாட்களுக்கு முன் படித்தது. நடைபாதையில் சுய நினைவற்றுக் கிடந்த ஒரு மூதாட்டியை உதவும் கரங்கள் மீட்டது. அந்த அம்மையாரது உடல் தேறியவுடன் அவரைப்பற்றி அவரிடம் விசாரித்திருக்கின்றனர். ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை.
பின்னர் பெரு முயற்சியெடுத்து அவரைப்பற்றிய தகவலைச் சேகரித்திருக்கின்றனர். அதற்குப்பின்னர் அவரைப்பற்றிக் கிடைத்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது.
அவர் மும்பையைச் சேர்ந்தவர். அவரது கணவருடன் சொந்த அடுக்ககத்தில் குடியிருந்திருக்கிறார். அவரது கணவர் தனது மனைவியின் பொருளாதார பாதுகாப்பிற்காக அந்த அடுக்கு மாடி குடியிருப்பை தனது மனைவி பெயரிலேயே வாங்கியிருக்கிறார். ஆனால் இது எதுவும் அவரை பாதுகாத்ததாகத் தெரியவில்லை. தனது கணவரது இறப்பிற்குப் பின்னர் அவரது திருமணமான ஒரே பிள்ளை தன் தாயை அடித்துத் துரத்தியிருக்கிறான். தாயாரும் வாய் பேசாது வெளியே கிளம்பிவிட்டார். திக்குத் தெரியாது பயணித்தவர் இங்கு சென்னையில் உதவும் கரங்கள் கண்களில் பட்டு மீட்கப் பட்டிருக்கிறார்.
இதில் என்ன ஆச்சரியமென்றால் அந்தத் தாயார் தனது பிள்ளையை தன் வாயால் காட்டிக் கொடுக்கவில்லை. தன்னை இத்துனை இழிவு படுத்தியும் அவனை தரம் தாழ்த்த அந்த அன்னை விருப்பப் படவில்லை.
இதைத்தான் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்களோ..?
மேற்கண்டவைகளைப் போல இன்னும் பல சொல்லலாம்.
இப்படி ஏன் நடக்கின்றது?
இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் பெரும்பாலும் தனித்து ஒற்றைப் பிள்ளைகளாகவே இருப்பதால் மிகவும் சுயநலம் சார்ந்து அவர்களது வளர்ப்பு அமைந்து விடுகிறது. எனவே அவர்கள் மற்றவர்களைப் பற்றிய எண்ணமின்றியே வளர்ந்து விடுகின்றனர். ஒற்றைப் பிள்ளையாய் பெற்றால் சிறப்பாக வளர்க்கலாம் என்கின்ற பெற்றோர்களது நல்ல எண்ணம் அவர்களுக்கே எதிராய்த் திரும்பி விடுகிறது.
இது கொடுமையல்லவா?
அது மட்டுமல்ல.  முழுக்க முழுக்க பெற்றோரைச்சார்ந்தே வளரும் பிள்ளைகள் கடைசி வரை அதை உணர்வதேயில்லை. ஏதோ தான்தோண்றியாய் தானே வளர்ந்து நிமிர்ந்து நின்றுவிட்டதாய் ஒரு அகம்பாவம். இதனை முதுமையடையும் வரை எந்தப் பிள்ளையும் உணர்வதில்லை.
மிகக் குறைந்த பெற்றொர்களே தங்களது பிள்ளையின் அரவணைப்பில் தங்களது இறுதிக்காலத்தை கடத்தும் பேறு பெற்றுள்ளனர்.

 
இத்துனை பாடுபடும் பெற்றோர் குறைந்த அளவு பொருளாதார அளவிலாவது தங்களது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
வாழ்நாள் முழுதும் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவே எண்ணம் மற்றும் உழைப்பைச் செலவிடும் பெற்றோர் தங்களது பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவனம் செலுத்துவதில்லையே அது ஏன்?
ஒரு வகையில் பார்த்தால் பெற்றோர்களின் இந்த FINANCIAL AND EMOTIONAL INDEPENDENCE பிள்ளைகளுக்கும் பேருதவியாய் இருக்குமல்லவா? அதற்காகவேனும் பெற்றோர்கள் இது குறித்து சற்று தங்களின் சிந்தனையைச் செலுத்தலாமல்லவா?
பிள்ளைகளின் மேம்பாட்டில் புத்திசாலிகளாக நடந்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களது பாதுகாப்பில் முட்டாள்களாக நடந்து கொள்வது சரியா?
தன்னைத் தூக்கி வளர்த்து சீராட்டி பாராட்டிய பெற்றொர்களை, தங்கள் மேல் கொண்டுள்ள பாசத்தாலேயே அவர்களை தங்களுக்கு எதிராகத் திரும்ப இயலாதவர்களாக்கி முதுமையில் அவர்களது நெஞ்சில் உரத்து உதைப்பது நியாயமாகுமா? இந்த முரட்டுத்தனத்தினால் தங்களது பண்பை இழப்பதைத் தவிர பிள்ளைகளுக்கு வேறேதேனும் இலாபமுண்டா?
இத்தகைய முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சிக்கல் எனத் தோன்றுகிறது.

 
ஆனாலும் இதுவெல்லாம் மாறுமென நம்பிக்கை வைப்போம்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
 
 

 

6 comments:

  1. பின் குறிப்பிட்ட இணைய தளத்தில் சிறப்பானதோர் பதிவில் குறிப்பிட்ட மனிதரின் நினைவுகள் என் கண் முன் விரிந்தன. http://koilpillaiyin.blogspot.in/2015/05/blog-post_12.html
    நல்ல மாற்றம் அவசியம். நன்றி

    ReplyDelete
  2. //இத்துனை பாடுபடும் பெற்றோர் குறைந்த அளவு பொருளாதார அளவிலாவது தங்களது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?//

    பிள்ளைப்பாசம் அவர்கள் கண்களை மறைக்கிறது. இதுதான் பல பெற்றோர்கள் செய்யும் முட்டாள்தனம். தனக்கு மிஞ்சியே தான தர்மம் என்பதுபோல, பெற்றோர்கள் இதுவிஷயத்தில் மிகவும் உஷாராகவே இருக்க வேண்டும். திருமணத்திற்குப்பின் பிள்ளைகள் நிச்சயமாக மாறி விடுவார்கள். அவர்களின் பாசமெல்லாம் தன் பெண்டாட்டி, பிள்ளைகள் மேல் தான் இருக்கும். பெற்றோர்களை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள். இது மிகவும் இயற்கையானது.

    >>>>>>

    ReplyDelete
  3. தாங்கள் சொல்லியுள்ள ஒருசில உதாரணமான துயரக்கதைகள் படித்ததும் என் மனம் பதறுகிறது.

    இந்தப்பதிவு இன்றும் பிள்ளைப்பாசத்தால் அதிக முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் பெற்றோர்களுக்கு ஒரு படிப்பிணையாக இருக்கட்டும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. சிறப்பாக அலசி உள்ளீர்கள்
    பெத்த மனம் பித்து
    பிள்ளை மனம் கல்லு
    என்பது உண்மையே!

    ReplyDelete
  5. நாளைக்கும் அதே நிலை தான் அவர்களுக்கும்... வயதாகும் முன்பே கூட நடக்கலாம்...

    தனக்கு தெரிந்தும் தெரியாமலும் வளர்க்கும் சுயநலம் வேறு என்ன செய்யும்...?

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...