Followers

Friday, October 8, 2010

மனம் சார்ந்த முடிவுகள் தற்கொலைமுடிவுகளுக்கு சமமானவைகளா?

08.10.10
மனம் சார்ந்த முடிவுகள் தற்கொலை முடிவுகளுக்கு  சமமானவைகளா?


நமது வாழ்வில் தற்கொலை முடிவுகள் மட்டுமல்ல நாம் எடுக்கும் வேறு சில அறிவுசார்ந்தவைகளல்லாத முடிவுகளும் தற்கொலை  முடிவுகளுக்குச்  சமமானவைகள் . இவைகள் பெரும்பாலும்  மனம் சார்ந்தவைகளே.மனம் சார்ந்த முடிவுகளினால் பெரும் அபாயம் இருக்கிறது.இது தனி மனிதருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கேஅபாயமானது.

மனம் சார்ந்த முடிவுகள் ‘சட்’ டென எடுக்கப்படுபவை. The decisions favoured by heart are impulsive and most of the time they don’t have and need valid reasoning.


இத்தகைய முடிவுகள் எடுக்கும் போது மனம் அறிவை ஆக்கிரமித்துக் கொள்ளும். கிளர்ந்தெழும் உணர்வுகள் புழுதியாய் அறிவை மறைத்து அதன் செயலைக் கொன்றுவிடும். ஒரு சிக்கலை விடுவிக்க தெளிவான சிந்தனை ஒன்றேதான் சிக்கலிலிருந்து மீள தனக்கு கிடைக்கும் வழிமுறைகளைத் தேடும். நாம் நமது மனதில் மேலோங்கும் உணர்வுக் கொந்தளிப்புகள் அறிவை ஆக்கிரமிக்க விட்டோமானால் அது சிந்தனையையும் அதன் செயல்பாட்டையும் கொன்றுவிடும். சிந்தனை யில்லாத மனமோ மீந்து கிடக்கும் ஒரே வழிதான் (remaining option) தன்னை சிக்கலிலிருந்து விடுவிக்கும் என நம்பும். இந்த மீந்து கிடக்கும் வழிதான் தற்கொலை என்ற முடிவு.



 
தற்கொலைகள் மட்டுமல்ல இது போல  ‘சட்’ டென எடுக்கப்படும் பல மனம் சார்ந்த முடிவுகளும் தற்கொலை முடிவுகளுக்கு ஒப்பானவை.


இதற்கு ஒப்பான ஒரு சில உதாரணங்களைச் சொல்ல வேண்டுமானால் நமது நாட்டில் பலர் தமது ஓட்டுரிமையைச் செயல் படுத்தும் விதத்தைக் கூடச் சொல்லலாம். இன்னும் பலர் ஒற்றைப் பார்வையிலேயே காதலில் விழுவதையும் பின்னர் சில்லரைச் சண்டைகளினால் இதே வேகத்தில் பிரிந்து செல்வதையும் சொல்லலாம். இதைப்போல தன் பிள்ளைகளை தனக்குப் பிடித்த துறையில் - தனக்குப் பிடித்ததென்ற ஒரே காரணத்தினாலேயே - ஈடுபட வலியுறுத்துவது, ஒருவரை சட்டென நண்பராகவோ அல்லது  சட்டென விரோதியாகவோ பாவித்து அவர்களுக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தன் மனம் செய்யத்தூண்டும் சில extreme செயல்களைச் செய்வது, தனக்குப் பிடித்தது என்பதாலேயே சில பங்குகளை வாங்கிக் குவிப்பது என மனம் சார்ந்து எடுக்கும் பல முடிவுகளை தற்கொலைக்கு ஒப்பாகக் கூறலாம்.


இது போன்றதொரு முடிவுகள் நமது வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும். சில முடிவுகள் சமுதாய நலனைக் கூட கவிழ்த்துவிடும். இதைத் தவிர்க்க சரியான சிந்தனைக்கு விழிப்புணர்வு நம்மிடையே தேவை.


வாக்களிப்பது, சிந்தித்து நெடுநோக்கில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு செயல். ஆனால் நாம் பிடித்த தலைவர் அல்லது பிடித்த கட்சி அல்லது பிடித்த ஏதோ ஒன்றிர்க்காக வாக்களித்தோமானால் நாம் சமுதாயத்தை தற்கொலைக்கு இட்டுச்செல்லும் முடிவெடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.



இதைப் போன்றதே மணவாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளும். மண வாழ்க்கையென்பது மனம் ஒத்துப் போவதுதான் என்றாலும் ஒருவரைத் துணையாக ஏற்றுக்கொள்ள நாம் எடுக்கும் முடிவு மேலே பேசியபடி மனம் சார்ந்த முடிவாக இருக்கக் கூடாது. நிச்சயமாய் அறிவுசார்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும்.  ஏனெனில் மணவாழ்க்கை பொறுப்புகள் நிறைந்தது.  நான் காதலுக்கோ அல்லது காதலித்து பின் மணமுடிக்க எடுக்கும் முடிவுகளுக்கோ எதிராக பேசவில்லை.  ஆனால் காதல் என்பது மனம் சார்ந்த ஒன்றானாலும் வாழ்க்கை என்பது அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தால் மட்டுமே அது பலன் தருவதாக இருக்கும்.


இதைப் போலத்தான் நண்பர்களைத் தேர்ந்தெடுத்தலும். நாம் ‘சட்’ டென்று தேர்ந்தெடுத்து விட்டு பின்னர் தெரியவரும் சில காரியங்களுக்காக நாமே அவருக்கு விரோதமாய்ச் செயல் படுதலும் கூடாது. நம்மைப் பற்றி தெரியாத எதிரியை விட நம்மைப் பற்றி மிகவும் தெரிந்து நமக்கு விரோதியான நண்பன் மிக ஆபத்தானவன். அதற்காக தேர்ந்தெடுத்த நட்பு நம்மையும் சேர்த்து பழிச்சொல்லுக்கு ஆளாக்கி குழியில் தள்ளும் போதும் நாம்  ‘நண்பேண்டா!’ என்று துணையாய் இருத்தலும் கூடாது.


அறிவு சார்ந்து யோசித்து எடுக்கும் முடிவுகளின் பலனை மனம் சார்ந்து, உணர்வு சார்ந்து அனுபவித்து மகிழ்ந்து நாம் வாழும் வாழ்வை சிறக்கச் செய்வோம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.
 

5 comments:

  1. //அறிவு சார்ந்து யோசித்து எடுக்கும் முடிவுகளின் பலனை மனம் சார்ந்து, உணர்வு சார்ந்து அனுபவித்து மகிழ்ந்து நாம் வாழும் வாழ்வை சிறக்கச் செய்வோம்.//

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை பலரும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என கருதி சட்டென முடிவு எடுக்கிறார்கள். :)

    ReplyDelete
  2. nan migaum mana aluthathil ullen athil irunthu mela yenakkana vali i yaravathu solluvirkala.please.

    ReplyDelete
  3. yenakku friends kidai yathu.yen yennankalai solla yarum illai.yenathu payathilirunthu yeppati veliye varuvathu yena sollungal.

    ReplyDelete
  4. தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. @ Anonymous

    நீங்கள் விரும்பினால் தங்களது எண்ணங்களை எனது email க்கு அனுப்பவும். தங்களது பரிமாற்றங்களின் ரகசியம் பேனப்படும். முடிந்த வரை உதவியாய் இருக்க முயற்சிப்பேன். கலக்கம் வேண்டாம். நிச்சயமாய் தங்களுக்கு உதவி தேவைப்படின் ஆவன செய்ய முயலுகிறேன்.

    தயை செய்து மனக் கலக்கம் கொள்ளாதீர். நாம் வெல்வதற்கென்றே படைக்கப் பட்டிருக்கின்ற உயிரினங்கள்.

    மீண்டும் தங்கள் வரவிற்கு நன்றிகள்

    அன்பன்,

    வேதாந்தி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...