Followers

Monday, November 22, 2010

மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?

22.11.10
மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?


மண முறிவுகள் ஒருவகையில் மக்களின் மன சுதந்திரத்தினை பறை சாற்றும் ஒரு செயலாக இருந்தாலும் இந்த மண முறிவுகள் தடுக்கப் படவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதே இன்றைய பேச்சு.


நான் ஏற்கனவே மணவாழ்வின் உன்னதங்களைப்பற்றி பேசியிருக்கிறேன். இந்த மண வாழ்வானது ஒருவரை மேம்படுத்தக் கூடியதுதான் - மகிழ்ச்சியுடன் இணைகள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வாழ்வு அமையும் போது. மேற்சொன்னபடி இல்லாத வாழ்வு  வறண்ட பாலைக்குச் சமம் என சான்றோர் பகன்றிருக்கின்றனர். அத்தகைய வன்முறை நிறைந்த மண வாழ்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்பதே உண்மை.


சரி. இப்போது இன்றைய பேச்சுக்கு வருவோம்.


இந்த மண வாழ்வில் புரிதல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. புரிதல் இருந்தால் மட்டுமே விட்டுக்கொடுத்தல் உருவாகும்.  விட்டுக்கொடுத்தலே வாழ்வின் மிகப் பெரிய அடித்தளம் ஆகும்.  மண வாழ்விற்கு காதலும் காதல் சார்ந்த காமமும் முக்கியம்தான். மிகப் பெரிய உளவியல் வல்லுனரான  Sigmund Freud ஏறக்குறைய மனிதரின் அனைத்து செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் அவரின் பாலியல் வாழ்க்கைக்கு தொடர்பானதென  முடிப்பார்.  அவர் பொதுவில் சுட்டிக்காட்ட விரும்புவது ஒருவரின்   நிறைவான பாலியல் வாழ்க்கை அவரை மேம்படுத்தும் என்பதே. இந்த பாலியல் வாழ்வில் நிறைவை அடைய ஏதேனும் சிக்கல் இருப்பின் அது அவரது நடவடிக்கைகளில் ஒரு பிறழ்வாக -delinquency  - வெளிப்படும் என்பதுதான் அவரது பெரும்பாலான கருத்தாக இருக்கும்.


இது சற்று கவனிக்க வேண்டிய செய்தி தான்.



இதற்கு மிகப்பெரிய காரணமாக நான் கருதுவது, ஒரு மனிதன் தனது பாலியல் வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளையும்,  தன் உடல் சார்ந்த பாலியல் அழுத்தங்களையும் வெளிப்படுத்த தன் இணையை ஓர் வடிகாலாகவும்  சார்ந்திருப்பதால் தன் இணையிடம் இது குறித்த மிகுந்த தேவைகளை வளர்த்துக் கொள்கிறான். இது இரு பாலருக்கும் பொருந்தும். மேலும் நமது சமுதாயம் இந்த பாலியல் வெளிப்பாடுகளை வாழ்வின் ஒரு அச்சாணியாகவும் பார்ப்பதால் இந்த எதிர்பார்ப்புகள் தவறல்ல என்றே எனக்குப் படுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை சந்திக்கும் போது உறவுகள் சற்றே விரிசலடைய வாய்ப்பிருக்கிறது. இப்படி நான் சொல்வதால் கணவன் மற்றும் மனைவி  உறவுகள் இத்தகைய பாலியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதனால் மட்டுமே பலப்படுகிறது என்பதல்ல.

ஆனால் தற்போதைய பெண்கள் தன் கணவனிடம் இத்தகைய குறைகளை காணும் போது சற்றே மனம் வெறுத்துப் போகின்றனர் என்பது உண்மையே. தயங்காமல் தங்களின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர். சிலர் இன்னமும் ஒருபடி மேலே போய் இந்த எதிர்பார்ப்புகளை இணையுடன் நிறைவேற்றிக் கொள்வது தங்களது உரிமை எனக் கருதவே செய்கின்றனர். நமது சட்டமும் அதையே சொல்கிறது. இப்போதைய பெண்கள் தங்களது கருத்துக்களையும், உரிமைகளையும் சற்று உரக்கவே Demand செய்வதால் சில உறவு விரிசல்கள் எழத்தான் செய்யும்.

இந்த முறை மாறவேண்டுமானால், அதாவது இந்த உறவு விரிசல்கள் மறு பரிசீலனைக்கு உள்ளாக வேண்டுமானால், நாம் இந்தத் தேவைகளை சற்று ஆராய வேண்டும்.



காதலில்லா வாழ்வு நம்மை self centered personality ஆக மாற்றி நம்மை எப்போதும் இணையாத இணை கோடுகளாக மாற்றிவிடும். ஆனால் காதலுள்ள வாழ்வு இந்த இணை கோடுகளை முன்னேற்றப் பாதையில் வாழ்க்கை எனும் வண்டியைச் செலுத்த இணைந்து நிற்கும் இருப்புப் பாதைகளாக மாற்றி விடும்.  We only need a common goal or purpose to stay together and if we try to invent, our life may provide this purpose or goal. எனவே காமம் இல்லாவிடினும், உடல் தேவைகள் நிறைவேற்றப் படாமற் போயினும், காதல் இருப்பின் மண முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.

காதலில்லா நெஞ்சம் நிச்சயமாக தேவைகளைப் பெறுவதில் மிகக் கடுமையாக இருக்கும். காதல் கொண்ட நெஞ்சம் மிகையுண்ட காதலால் மற்ற குறைகளை மாற்றி விடும் அல்லது ஏற்றுக் கொண்டுவிடும். எனவே காதல் மணமென்றாலும், பெற்றோர் முடித்த மணமென்றாலும் காதல் நிறைந்திருந்தால் மணவாழ்வு நிறைவு பட நிலைக்கும்.

சரி. இந்தக் காதல் உண்டாக வேண்டுமானால் என்ன செய்வது?

முதலில் இணைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலவேண்டும். இது ஒரு இணை மற்றவரை கூர்ந்து கவனிப்பதாலேயேதான் உருவாகும். பொதுவாகவே இனக்கவர்ச்சியற்ற காதல் உருவாவது இப்படித்தான். பழகப் பழக மற்றவரிடம் இருக்கும் தனித்தன்மை கொண்ட குணங்களிலிருந்து அவரிடமுள்ள சிறு சிறு அசைவுகள் வரையில் நம்மை கட்டியிழுத்து மயக்கி அவரது நிலையான அருகாமைக்காக  வெகுவாக ஏங்க வைக்கும்.

சரி. பெற்றொரால் முடித்து வைக்கப் பட்ட மணங்களில் இது - இந்த இனக்கவர்ச்சியற்ற காதல் வயப்படுதல் - சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமே.


விட்டுக் கொடுத்தலே - Give and take - மண வாழ்வின் அவசியம்



இதைக் கையாள பொறுமை மிக அவசியம். இரண்டாவதாக நாம் எதிர்பார்ப்புகளுடன் புது வரவை வரவேற்கலாகாது. நமது மனதை கூடுமான வரையில் காலியாக - like a blank slate - வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் கதைகள் மற்றும் ஒளிப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்லது நிகழ்வுகளை ஒட்டியே நமது எதிர் பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதால் இவைகள் பெரும்பாலும் ஒரு நிறைவேற்றப்படா மாயையாகவே இருக்கும். This kind of expectations lack reality.  எனவே அவைகள் பொய்த்துப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு.


நாம் எதையும் எதிர்பாராது  fresh mind ஆக இருப்போமானால்  நமது இணையிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே நாம் பெறும் வாய்ப்பு  உள்ளது. மிக முக்கியமாக நமக்கு பொறுமை வேண்டும். சிலநேரங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம்.  சில சமயங்களில் அவரது போற்றத்தகுந்த குணங்கள் பிள்ளைப் பேற்றிற்கு பின்னர் கூட வெளிப்படலாம். அதுவரை அமைதி காத்தல் மிக முக்கியம். அதற்குப் பின்னர் காதல் வெளிப்பட்டு பலப்பட வாய்ப்பு மிக அதிகம்.

இணைகள் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் மிக அவசியம். இது நிச்சயமாய் ஒருவரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கலாகாது. சார்ந்திருத்தல் என்றால் not total dependency but complimentary  to each other in every way either physical, financial and or emotional. இது போன்ற சங்கதிகள் நம் வாழ்வில் நிறைந்து இருக்கும் போது காதல் வெளிப்பட்டு பலப்படும்.


இத்தகைய எதையும் எதிர்பாராக் காதலால் - unconditional love -விட்டுக்கொடுத்தல் இன்பமாகும், புரிதல் அதிகமாகும், இந்தப் புரிதலால் மனம் பிரியாது இணைந்து நாம் கொண்ட  மணவாழ்வு இனித்து நிலைக்கும்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



9 comments:

  1. //காமம் இல்லாவிடினும், உடல் தேவைகள் நிறைவேற்றப் படாமற் போயினும், காதல் இருப்பின் மண முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.//

    உண்மை. காதல் இல்லாத சிறு தொடுதல் கூட, மணவாழ்வை பொய்க்கச் செய்யும் செயல் தான்.

    ReplyDelete
  2. @ இந்திரா..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  3. வெட்டிப்பேச்சா இல்லீங்களே!!!!

    பதிவு அருமை.

    விடடுக்கொடுத்துப் போகலைன்னா வாழ்க்கையே இல்லை.

    ReplyDelete
  4. @ துளசி கோபால்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அருமையா இருக்கு . கவிதை எழுதுவிங்க போல

    ReplyDelete
  6. @THOPPITHOPPI ..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. நமது மனதை கூடுமான வரையில் காலியாக - like a blank slate - வைத்துக் கொள்ளவேண்டும். //

    நிஜம்.. கடினமென்றாலும்..

    ReplyDelete
  8. இத்தகைய எதையும் எதிர்பாராக் காதலால் - unconditional love -விட்டுக்கொடுத்தல் இன்பமாகும், புரிதல் அதிகமாகும், இந்தப் புரிதலால் மனம் பிரியாது இணைந்து நாம் கொண்ட மணவாழ்வு இனித்து நிலைக்கும்.


    .... good advice. very nice post. :-)

    ReplyDelete
  9. @பயணமும் எண்ணங்களும்..

    @Chitra ..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...