Followers

Friday, September 17, 2010

புறச்சூழல் ஒருவனை ஊக்கப்படுத்துமா அல்லது ஊணப்படுத்துமா?

17.9.10
புறச்சூழல் ஒருவனை ஊக்கப்படுத்துமா அல்லது ஊணப்படுத்துமா?


ஒருவன் பஞ்சு விற்கப் போனபோது காற்றடித்ததாம் அவனே உப்பு விற்கப் போனபோது மழை பெய்ததாம். இது ஒருவனது துர்பாக்கிய நிலையைக் குறிக்கச் சொல்லும் சொலவடை.

பஞ்சு விற்கும் போது மழை பெய்வது மட்டும் சாதகமான சூழலாவென்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததுண்டு.

இது நம்மில் இருக்கும் ஒரு குறைபாட்டைத்தான் காண்பிப்பதாக எனது எண்ணம்.


சூழல் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
இந்தப் படத்தில் மறைந்திருக்கும் செய்தி.....


மழையையும் காற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாதது ஒரு குறையல்ல மாறாக மழையையும் காற்றையும் நம்மால் பயன்படுத்தத் தோன்றாமல் போனதுதான் குறை. நாம் நமது அகச்சூழல் காரணிகளை முன்னர் பேசியபடி- முன் பதிவுகளில் கண்டதுபோல் -  சரியான முறைப்படி வைத்திருப்போமானால் புறச்சூழலை, புறக்காரணிகளைப் பற்றிய சரியான ஒரு பார்வை நமக்கு இருக்கும். எனவே வெற்றிச்சிந்தனையை உடைய ஒருவன்  புறக்காரணிகளை தன் வசப்படுத்துவான்.

இதன்படி புறக்காரணிகளை வசப்படுத்துவதெப்படி?

முதலில் சூழலும் அதன் காரணிகளும் நமக்கு, நமது வெற்றிக்கு எதிரானவை என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க வேண்டும். எத்தகைய சூழலும் நமது நண்பன் என்றும், நமது வெற்றி நம்மைவிட நாம் எதிர்கொள்ளும் சூழலுக்கு மிகத்தேவை என்றும் உணர வேண்டும்.

மிக முக்கியமாக சூழலும் அதன் காரணிகளும் நமக்கு, நமது வெற்றிக்கு வழிகாட்ட, இட்டுச்செல்ல, ஒரு செய்தியை வைத்திருக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும். நமது புலன்களை, அகக் காரணிகளை சூழல் சொல்லும் செய்தியை அறிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள ஏதுவாக மிகச்சரியாக நிலைப்படுத்தி கையாளவேண்டும்.


சூழல் நமக்கு எதிரானதா?


இனணகோடுகள் சாய் கோடுகளாக காட்சியளிக்கின்றது. இது உண்மையல்ல...


இது முதலில் சூழலின் மீது நமக்கிருக்கும் வெறுப்பை மாற்றி நம் சிந்தனையை சீர்படுத்தும். இந்த சீரான சிந்தனை, சூழல் காரணிகள் நமக்குக் காட்டும் வாய்ப்புகளை புரிந்துகொள்ள  நம்மை ஏதுவாக்கும். சில நேரங்களில் இந்த கடுமையான சூழல் காரணிகளே நம்மை சூறாவளியைப் போல் வெற்றிக்கு இழுத்துச் செல்லும். இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் நம்மைத் தவிர நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் நமது சூழலை எதிரியாக நினைத்து நமது வெற்றிக்கு எதிரான செயல்களைச் செய்யக்கூடாது.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமானால்-

வறுமை என்கிற சூழலானது சரியாகப் புரியப்படாமலிருந்தால் ஒருவனை சமுதாயத்திற்கு எதிராகத் தூண்டிவிடும். இது அவனை மிகக் கடுமையான பாதாளத்தில் தள்ளி மீள முடியாமல் செய்துவிடும்.

ஆனால் இதே வறுமை சரியாகப் புரியப்பட்டால் அது தன்னை உழைப்பதற்குத் தூண்டுவதும், தான் வெற்றியடைய வேண்டும் என்கின்ற செய்தியை தனக்குச் சொல்வதும் புரியும். இத்தகையோர் அடையும் வெற்றி அவரையும் உயர்த்தி அவரைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தும்.

ஹெலன் ஹெல்லரின் பார்வைக் குறைபாடு அவரை வெற்றியடைய வைத்ததோடல்லாமல் தன்னைப் போன்ற பார்வைக் குறைபாடுடையோரின் தேவைகளையும் சுட்டிக் காட்டவே பிரைய்லி முறை பிறந்து ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவியது.

சூழலை சரியாகப் புரிந்து கொள்வோம். சூழல் காரணிகள் நமக்குத்தரும் செய்திகளை சரியாக அறிந்து, வாய்ப்புக்களை கண்டறிவோம்.
வெற்றி பெருவோம். வாழ்வோம்.

அன்பன்
வேதாந்தி.

1 comment:

  1. Thank you for visiting my blog. Thank you for your blessings. It is nice of you to do that. I am not sure whether I am all that you have mentioned over there. I don't consider myself better than others. It is only God's blessings. Glory be to Him alone!

    Welcome to the Blog World. Best wishes!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...