Followers

Friday, October 1, 2010

மணவாழ்க்கை மனிதரை மேம்படுத்துமா?

1.10.10
மணவாழ்க்கை மனிதரை மேம்படுத்துமா?





மணவாழ்க்கை மனிதரது வாழ்வில் ஒரு முக்கியமான நிலை. நான் முன்னர் பேசியபடி மனிதனின் / உயிரின் நெடுநோக்கை நிறைவு செய்கின்ற நிலையின் ஆரம்பம். இந்த மணவாழ்க்கை மனிதரது வாழ்வில்  ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் இன்று பேசுவோம்.


பிறந்து, வளர்ந்த மனிதன் முதலில் ஒருவரைச் சார்ந்தும்  பின் தன்னைத்தானே சார்ந்தும் நின்று மணவாழ்வில் மட்டுமே பிறஉயிரைப் போற்றி கவனித்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்கும் தகுதியுடையவனாகிறான்.


இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான ஒன்று இந்த மணவாழ்க்கையில் மட்டுமே பங்கிட்டுக் கொள்ளுதலில் மகிழக் கற்றுக் கொள்கிறான். உடன் பிறந்தோரோடு பங்கிட்டுக் கொள்ளுதலில் (sharing) ஏற்கனவே பழகி இருந்தாலும் இந்தப் பங்கீட்டில் பெரும் சிறப்பு உள்ளது. மண வாழ்க்கை என்பது ஒருவர் தன்மரபு உறவற்ற மற்றொரு எதிர்பாலினரோடு உறவு வைத்துக் கொண்டு தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிப்பதாகும்.




இங்கு மற்றொன்றும் கவனிக்கத் தக்கது. தற்காலத்தில் உறவுக்கப்பாலேயே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இது உறவுக்குள் நடக்கும் திருமணத்தில் குழந்தைப் பேறு சிக்கலாயிருப்பது - மரபு சார்ந்த நோயுடன் சந்ததி உருவாவது - கண்டறியப்பட்டதால் உறவுக்கு வெளியே நிச்சயிக்கப் படும் திருமணங்கள் ஊக்குவிக்கப் பட்டு அதன் படியே நடத்தப் படுகிறது. சற்றே கவனிக்க. நான் முந்தய பதிவில், உள்ளத் தேர்வுகளை இயற்கை அங்கீகரிக்கிறதா?என்ற பதிவில்,  பேசியபடி இங்கு உறவுகள் விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணத்தேர்வில் நடத்தப் படும் திருமணங்கள் சிக்கலான மரபை வளர்ப்பதிலிருந்து நமது எண்ணத்தேர்வை இயற்கை அங்கீகரிக்க வில்லை என்பது புலன். இது இயற்கைதான் மிகப்பெரிய இடத்தில், நமது தேர்வுகளை அங்கீகரிக்கும் இடத்தில் இருப்பதைக் காட்டுகிறது.


சரி. நாம் தற்போதைய பேச்சுக்கு வருவோம்.


எனவே நான் பேசியது போல் மணவாழ்க்கையில் பங்கிட்டுக் கொள்வதில் உள்ள சிறப்பு இந்தப் பங்கீடு உறவுக்காப்பாலிருந்து வந்த ஒருவரோடு மற்றொரு மாற்றுப் பாலினர் மகிழ்வுடன் கொள்ளும் பகிர்வாகும். இது ஒரு சிறப்பான நிலை.




திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறது. குடும்ப வாழ்க்கையானது தனது சந்ததியை வளர்க்கும் நோக்கை, உயிரியின் நெடு நோக்கை பூர்த்தி செய்வதாகும். தனக்கு ஒரு வாரிசு கிடைத்தவுடன் தம்பதிகள் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தங்களது பங்கீட்டை பெருக்கிக் கொள்கின்றனர். இப்போது மூன்றாம் நபர் அல்லது மூன்றோடு நான்காம் நபருடன் தனது அத்தனையையும் பங்கிட்டுக் கொள்கின்றனர். சில சமயங்களில் ஒருவருக்காக ஒருவர் உயிரையும் விடத்தயாராகின்றனர். இது மிகுந்ததொரு உயர்வான நிலையல்லவா? இத்தகைய உயர்வான நிலைக்கு ஒரு உயிரை இட்டுச்செல்கிறது மணவாழ்க்கை.


மேற்சொன்ன ஒவ்வொன்றும் மனிதருக்கு மட்டுமல்ல எல்லா விலங்கினங்களுக்கும் தான்.


தாய் மீன் (இது ஒரு தனி இனம்.  spice mobile  விளம்பரத்தில் வருமே அந்த இனம்) தனது குட்டிகளை வாயில் அடைத்து வைத்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும். கோழி தன் குஞ்சுகளைக் காக்க வலிய பருந்தையும் எதிர்க்கும். முறை போட்டுக் கொண்டு பென்குவின் பறவைகள்  தனது குஞ்சைக் காக்கும. ஒருமுறை தந்தைப் பறவை குஞ்சுகளைக் காக்கும் போது தாய்ப் பறவை கடலுக்குள் சென்று இரை தேடும்.  மறுமுறை இரை தேடி வந்த தாய்ப் பறவை குஞ்சைக் காத்து இளைப்பாறும் போது தந்தைப் பறவை கடலுக்குள் சென்று இரை தேடும்.  மிகுந்த பசி கொண்ட குஞ்சுகளின் எதிர் பார்ப்பை இப்படி தாயும் தந்தையும் மாறி மாறி இரை தேடி ஈடு கட்டுவார்கள். இது இவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது?





எல்லாம் தன் இனத்தைக் காக்க.


இப்படி தனக்காக வாழாமல் மற்றொரு உயிருக்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தன்னைத் தயாராக்கும் வாழ்க்கைக்குஆரம்பமே மண வாழ்க்கைதானே.


இப்போது சொல்லுங்கள். நம்மை பிறந்த நிலையிலிருந்து  மண வாழ்க்கை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று நம்மை மேம்படுத்துகின்றதா இல்லையா?


இத்தகைய மண வாழ்வை முதலீடாக வைத்துக்கொண்டு முழுவதுமாக மேம்படுதல் எப்படி என்று இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

2 comments:

  1. அழுகை அழுகையா வருது.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. அழ வைக்க பேசலப்பா...

    வாழ்க்கையை புரிஞ்சுக்கத்தான் இந்தப் பேச்செல்லாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...